லாபம் தரும் தட்டுவடை செட் வியாபாரம்

தமிழ்நாட்டு பர்க்கர்ன்னு தாராளமா சொல்லுவாங்க "சேலம் தட்டு வடை செட் பற்றி  தெரிஞ்சவக..

மிக குறைந்த முதலீடே இதற்கு போதுமானது

அரிசி மாவால் செய்யப்பட்ட இரண்டு தட்டு வடைகளுக்கு நடுவில் வித விதமான சுவைகளில் இரண்டு அல்லது மூன்று சட்டினிகளை தடவி, பீட்ரூட், கேரட், வெங்காய துருவல்கள் சிலதை தூவி தட்டில் வைத்து கொடுப்பார்கள்.

அதை அப்படியே பானி பூரி சாப்பிடுவது போல வாயில் வைத்து கடிக்க வித விதமான சுவைகளை மாறி மாறி நாவு உணர.... அடடடா....
பெரிய மெனக்கெடல் என்று எதுவும் இல்லாமல் உங்களுக்கென்றே தனி சுவையில் உங்கள் தட்டுவடை செட் கடையை ஆரம்பியுங்கள்.

கூடவே மசால் பொறி, கார பொறி என துணைக்கு சேர்த்துக்கொள்ளுங்க..

மேக்சிமம் ஆயிரம் ரூபாய் முதலீடு போட்டால் போதும்.

ஒரு தட்டுக்கு மூன்று செட்டு தட்ட வடை கொடுக்கலாம். விலை ரூ.10

நல்ல வருமானம் தரும் தொழில்

போக்குவரத்துக் கழகம் நட்டத்தில் இருக்கிறதா? உண்மை நிலை என்ன?

போக்குவரத்து துறையின் நஷ்டம் என்பது வெறும் மேம்போக்காக சொல்லப்பட்டாலும் அதன் உள்ளார்ந்த காரணங்களை தீர அலாசியே ஆக வேண்டும்.

வெறும் பயணிகளிடம் வசூலிக்கப்படும் தொகையை வைத்து நடத்துனர், ஓட்டுனர்களின் சம்பளத்தை கொடுக்க கூட முடியாதா? என்ற பார்வையை தவிர்த்து, ஒரு பேருந்தானது தனது வழித் தடத்தில் சிக்கல் இல்லாமல் செல்லுவதில் இன்னும் பலரது உழைப்பும் மிஞ்சியிருக்கிறது. டிப்போவின் பராமரிப்பு, பணியாளர்கள் போன்ற சில்லரை காரணங்களையும் கூடவே இணைத்துக்கொள்ளலாம்.


முக்கியமான காரணமாக, இழப்பீட்டு தொகை வழங்கவதால் ஏற்படும் நஷ்டத்தை தான் அரசால் சமாளிக்க முடியவில்லை என்கிறார்கள். மோட்டார் வாகன விதிகளின்படி அனைத்து பேருந்துகளும் இன்சூரன்ஸ் முறையாக செலுத்தப்படுகிறதா(!)? என்றால் நிச்சயம் இல்லவே இல்லை என்ற பதில் தான் வருகிறது.

சாதரணமாக, 10000 ரூபாய்க்கு மதிப்பு இருந்தாலும் இன்சூரன்ஸ் பேப்பர் காட்டு என மிரட்டும்(?) அதிகாரிகள் ஏன் அரசு போக்குவரத்து கழகத்தை கேள்வி கேட்பதில்லை?

மிகவும் இலாபம் தரக்கூடிய தொழிலாக போக்குவரத்து துறையாக மாற்ற யோசிக்காமல் மக்கள் மீது சுமையை செலுத்தி மாறி மாறி அதிமுகவும், திமுகவும் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள்.


இதற்கான தீர்வுகள் பல இருக்கின்றன..
முறைபடுத்தப்பட்ட(?) GST இருப்பதால் பேருந்துகளில் ஏன் லாஜிஸ்டிக்ஸ் அனுமதிக்க கூடாது? மிகப்பெரிய நெட்வொர்க்கிங் இருக்கும் இத்துறையில் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் பார்சல்களை புக்கிங்க் செய்து டெலிவரி செய்தால் இன்னும் இருமடங்கு லாபம் நிச்சயமாக சம்பாதிக்க முடியும்.

அரசின் சுற்றுலா பேருந்துகள் இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? முறையாக மக்கள் இதனை பயன்படுத்த வழி வகை இருக்கிறதா?

அத்தனை பேருந்துகளிலும் பின்புறம் விளம்பரம் செய்ய நிச்சயம் நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. ஆனால் அலைய முடியததால் பின்வாங்குகின்றன. முறையாக கொடுங்களேன்??

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வானத்திலிருந்தா இலாபம் ஈட்டுகிறது? இலட்சக்கனக்கான ஊழியர்களின், பேருந்துகளின் மீதான இன்சூரன்ஸ் பணத்தை அவர்கள் அனுமதி இல்லாமல் தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்வது ஏன்??

இதையெல்லாம் முறையாக செய்தாலே இன்னும் கட்டணத்தை குறைத்து கொடுத்தாலும் கூட போக்குவரத்து கழகம் இலாபகரமாக இயங்க வைக்க முடியும்.

பாசத் தலைவன்(?)க்கு பாராட்டு விழாவும், புரட்சி தலைவருக்கு நூற்றாண்டு விழாவும் கொண்டாடிக்கொள்ளும் திமுக/அதிமுக அரசுகளுக்கு மக்கள் பற்றிய அக்கறை இவ்வளவு தான் வாக்காளப் பெருங்"குடி" மக்களே!!

எவனோ ஒருவன் உல்லாசமாக வாழ்வதற்கு உங்கள் இரத்தத்தை கொடுக்கின்றீர்கள் என்பதை உணர்ந்துகொண்டு அடுத்த முறை வாக்களியிங்கள். வேறென்ன நான் சொல்ல?
#தொழிற்களம்_அருணேஸ்

இனி சொத்துக்கள் வாங்குவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்படும்

ரியல் எஸ்டேட் துறையில் அதிக அளவில் கருப்பு பணம் குவிந்துகிடக்கிறது என்பதை நன்கு உணர்ந்துள்ள மத்திய அரசு சமீப காலமாக அதிக கவனத்தை இதில் செலுத்தி வருகிறது.


இதனடிப்படையில், ஊழல் மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக இனி அசையா சொத்துக்கள் வாங்குவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படும் எனும் புதிய சட்டத்தை விரைவில் மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது.

பினாமி சொத்துகள் வாங்கி குவிக்கும் பண முதலைகளுக்கு இதன் மூலம் பலத்த அடி விழும் என்பது நிதர்சனமான உண்மையே. வேறொருவரின் கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்தாலும், அந்நபரின் இன்கம் சோர்ஸ் பற்றி வருமான வரித்துறை கிடுக்கிபிடி போடும் என்பதால் அதிக அளவில் பண பதுக்கல் என்பது ரியல் எஸ்டேட் துறையில் தடுக்கப்படும்.


வெளிநாட்டில் வாழ்பவர்கள் இந்தியாவில் சொத்துக்கள் வாங்க வேண்டும் என்றால் ஆதார் இல்லாமல் வாங்க மாற்று வழி என்ன அதில் உள்ள ஓட்டைகள் பற்றியும் தீர ஆராய்ந்து மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டு வந்தால் சிறப்பு. ஏற்கனவே வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற கட்டாயத்தின் போது Form 60 ஐ இணைப்பதின் மூலம் வங்கி கணக்கை வெளிநாடு வாழ் இந்தியர்கள் சிரமமின்றி தொடர முடிந்தது. அதுபோல சில விதிவிலக்கு ஊழல்வாதிகளுக்கு சாதகமாகிவிடக்கூடாது என்பதே பொதுமக்களின் கவலை.

காதலில் விழுந்த பிக்பாஸ் பிரபலங்களான ரைசாவும், ஹரிஸ் கல்யாணும்

விஜய் தொலைக்காட்சியில் (Televission) ஒளிபரப்பான பிக்பாஸ் (Bigboss) நிகழ்ச்சியில் ரைசா ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களை கவர்ந்து வந்திருந்தார். அவரது வெளிப்படையான பேச்சு எல்லோரையும் ஈர்த்தது. அதே நிகழ்ச்சியில் ஹரிஸ் கல்யாணும் சில நாட்களுக்கு பிறகு கண்டஸ்டன் ஆக களம் இறங்கினார்.

டாப் 4 வரைக்கும் அந்நிகழ்ச்சியில் முன்னேறிய ஹரிஸ் பிக்பாஸ் வின்னராக வருவார் என்றும் பெரும்பாலானவர்களால் சொல்லப்பட்டது. ஹரிஸின் நேர்மையும், பழகும் விதமும் எல்லோருக்கும் பிடித்தது.

ஹரிஸ் மற்றும் ரைசா ஜோடி சேர்ந்து "பியார் பிரேமம் காதல்" என்கின்ற புதிய படத்தில் (Movie) நடிக்கிறார்கள். யுவான் சங்கர் ராஜா தயாரிப்பில் இதன் படப்பிடிப்பு துவங்கி விட்டார்கள்.

ரசிகர்கள் பஸ்ட்லுக் (first look poster) போஸ்டர் பார்த்து சூடாகிபோயிருக்கிறார்கள். அந்த அளவுக்கு இருவருக்குமான ரொமான்ஸ் (romance) காட்சிகள் அதிகம் இருக்கும் என படக்குழு தெரிவித்திருக்கிறார்கள்.

விரைவில் வெள்ளித்திரைக்கு வர இருக்கிறது.ஒரே ஒருவர் மட்டும் வாழும் வித்தியசமான நாடு

கிட்டத்தட்ட 5.10 லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள நிலப்பகுதியையை தானே மன்னராகவும், தளபதியாகவும் நியமித்துள்ள ஒரு இந்தியர பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க...

ஆப்ரிக்க நாடுகளாக எகிப்து மற்றும் சூடான் எல்லையில் அமைந்துள்ளது பிர் தாவில் என்ற, 2,060 சதுர கி.மீ., பரப்பளவு உள்ள பகுதி. எகிப்து, சூடான் இடையே, 1899ல் நிலப்பரப்பு நிர்ணயிக்கப்பட்டபோது, உலகில் மக்களே வசிக்காத அந்தப் பகுதியை இரு நாடுகளுமே சொந்தம் கொண்டாடவில்லை.

அதையடுத்து, 5.10 லட்சம் ஏக்கர் பரப்பளவு உள்ள அந்த நிலப் பகுதி, எந்த நாட்டுக்கும், யாருக்கும் சொந்தமில்லை என்று வரையறுக்கப்பட்டது. மிகுந்த மோசமான வானிலை, முழுவதும் பாலைவனம், கற்கள் நிறைந்த இந்தப் பகுதியை, 'மனிதர்கள் வாழலாம். ஆனால் யாருக்கும் உரிமை கிடையாது' என அறிவிக்கப்பட்டுள்ளது. 

டெக்னாலஜி மற்றும் புகைப்படத்துறையில் ஆர்வம் கொண்ட சுயாஸ் தீட்சீத் என்னும் குறும்புக்கார இளைஞர் இந்த பகுதிக்கு சென்றுள்ளார். அந்த பகுதியை முழுவதும் தன்னுடையது என்று சொல்லி, தானே அந்நாட்டின் மன்னர் என்றும் ராணுவ தளபதி என்றும் பிரகடனம் செய்தார்.

ஏற்கனவே இது தனக்கு சொந்தம் என்று பலரும் ஐநாவில் அனுகியிருந்தாலும் சுயாஸ் தன் நாட்டிற்கான கொடியையும் அறிமுகம் செய்து ஐநாவில் அனுமதிக்காக வின்னப்பித்திருக்கிறார் என்பதே சுவராசியம்.

தன் நாட்டிற்கு தீட்சித் ராஜ்ஜியம் என்றும் அதன் தலைநகர் சுயாஸ்பூர் என்றும் அறிவித்திருக்கிறார்.

தனிக்காட்டு ராஜா என்பது உண்மையில் சுயாஸ் தீட்சித் விசயத்தில் நிறுபனமாகியுள்ளது.

சிறு மெக்கானிக்குகளை புதிய வாகன சட்டம் படுத்தும்பாடு

சிறுதொழிலாக டூவிலார் மெக்கானிக் வேலைகள் சுயமாக செய்துவரும்  பலரையும் புதிய மோட்டார் வாக சட்டம் சிக்கலுக்கு உண்டாக்குகிறது என வருத்தம் தெரிவிக்கின்றனர் மெக்கானிக்கள்


இதுபற்றி சேலம் மாவட்ட மோட்டார் பைக் மெக்கானிக்குகள் சங்கத் தலைவர் கூறுவது 'பைக் மெக்கானிக்குகள் தொழில் அனுபவம் அல்லது ஐ.டி.ஐ முடித்துவிட்டு வேலை கிடைக்காதபட்சத்தில், ஒரு சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்து மெக்கானிக் வேலை செய்கிறோம். இதில் பெரிய வருமானம் கிடையாது. இது ஒரு குடிசை தொழில்போல செய்துகொண்டிருக்கிறோம். ஆனால், 

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி இருசக்கர மோட்டார் வாகனம் பழுதுபார்க்கும் ஒர்க்‌ஷாப் வைக்கக்கூடியவர்கள் சொந்தமாக 2,000 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். 

சொந்த இடத்தில் ஒர்க் ஷாப் வைத்திருக்க வேண்டும். 

எந்த கம்பெனி வண்டியை சர்வீஸ் செய்கிறோமோ அந்த கம்பெனியிடம் பதிவு செய்திருக்க வேண்டும்.


ஒர்க் ஷாப்பில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எஃப்., ஒர்க் ஷாப் உரிமையாளர் போட வேண்டும். 

ஒர்க் ஷாப் வைப்பதற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி பதிவு செய்தவர்கள் மட்டுமே இருசக்கர வாகனங்களைப் பதிவு செய்ய முடியும். 

இது போன்ற பல கண்டிஷன்கள் போடப்பட்டுள்ளதாக  தெரிகிறது. இந்தத் தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றாலும், ஒர்க்‌ஷாப் பணியாளர்களை மிகவும் கவலையடையச் செய்கிறது

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்

Depression

காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.

காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள்.

வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.

முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

 சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல  இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.


இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.

செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் "மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது' என்று சொல்லப் பழகுங்கள்.

உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும். வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.

 ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

 எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

 பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

 மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

மனைவியை திருப்திபடுத்த வேண்டுமா இதை மட்டும் செய்யுங்க போதும்.

    ஆண்- பெண் புரிதல் என்பது ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் போல இருக்கனும். தனது துணைக்கு என்ன தேவை என்பதை நொடிக்கும் குறைவான நேரத்தில் சொல்லக்கூடிய அற்றலை உங்களுக்குள் வளர்த்துகொள்ளுங்கள். இல்லறவாழ்வில் சரியான புரிதல் மட்டும் இருவருக்குள்ளும் ஏற்பட்டுவிட்டால் உங்களை யாராலும் அசைக்க முடியாது.

பொதுவாக, கணவன் - மனைவிக்குள் ஏற்படும் கருத்து வேற்றுமை என்பது ஒருவருக்கொருவர் வெளிப்படையாக இல்லாமல் இருப்பதாலேயே ஏற்படுகிறது. நல்ல துணை என்பவர் முதலில் நல்ல நண்பனாக இருக்க பழக வேண்டும்.  

திருமணமான புதிதில் எதெல்லாம் தம் துணைவியிடம் பிடித்தது என்று நினைத்தோமோ அதெல்லாமே பிற்காலங்களில் வெறுப்பதற்கான காரணங்களாக மாறிவிடுகிறது பெரும்பாலன குடும்பங்களில். இதையெல்லாம் தவிர்த்து ஒரு திருப்திகரமான மண வாழ்க்கையை வாழ, இருவருக்கும் இடையேயான  ஆழமான புரிதலே அவசியம்.
.
மனைவியோ அல்லது கணவனோ இவற்றை கடைபிடித்தால் நிச்சயம் உங்கள் இல்வாழ்வு சுகவாழ்வாக மாறும்.


  • உங்கள் துணையின் தனி திறமையை கண்டுபிடியுங்கள். அவ்வப்போது அதை சொல்லி அவரை பாரட்டுங்கள். அது மனைவி வைக்கும் ரசமாக கூட இருக்கலாம். கணவனின் குறைந்த அலுக்கான சட்டையாக கூட இருக்கலாம்.
  • சிரீயலோ, கிரிக்கெட்டோ  தங்கள் துணை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் சிறிது நீங்களும் பார்த்து அதைப் பற்றி கொஞ்சம் பேசுங்கள். 
  • முக்கியமாக தங்கள் துணையின் அழகை அவ்வப்போது சொல்லி புகழுங்கள். இருவருக்குள் நெருக்கத்தை அது இன்னமும் கூட்டும். உங்கள் துனையின் சிறு கண் சிமிட்டல் கூட உங்கள் ரசனையின் வரிசையில் வைத்துக்கொள்ளலாம்
  • முக்கியமாக ஒருவருக்கு தெரியாமல் மற்றவர் கடன் வாங்குவது, கொடுப்பது போன்ற விசயங்களை செய்யாதீர்கள். தவிர்க்க முடியாத காரணத்தை விளக்குங்கள். ஆட்சேபம் தெரிவித்தால் உடனே தவிர்த்து விடுங்கள் அந்த செயலை.
  • தவறுகளை மன்னித்துகொண்டே இருங்கள். ஆனால், கண்டியுங்கள் அது பொறுமையான ஆலோசனையுடன் கூடியதாக இருக்க வேண்டும்.
  • ஒருவர் பேசுவதை மற்றவர் காது கொடுத்து கேளுங்கள். அது சுவாரசியமற்றதாக இருந்தாலும் கொஞ்சம் பொறுமையுடன் கேட்டு பழகுங்கள். நாளடைவில் உங்களுக்கு பிடித்த விசயங்களை அவர்களாகவே பேசத்துவங்கி விடுவார்கள். முக அசைவுகளை ஆழ்மனது ஒன்றோடொன்று கடத்தி மிக எளிதாக புரிந்துகொள்ளும். 

  • இருவரும் வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்து வந்தவர்கள். எனவே, இருவருக்குமான ஒத்த சூழ்நிலைகள் அமைய நிறைய காலம் வேண்டும். கணவன் தட்டில் சாப்பிடும் முறையிலிருந்து மனைவி துணி உடுத்தும் நேர்த்தி வரை தங்கள் துணையின் சிறு சிறு விசயங்களை மாற்றிக்கொள்ள போதுமான நேரங்கள் தேவைப்படும். பொறுமையாக இருங்கள்.
  • இருவீட்டாரிடமும் அன்பு செலுத்துங்கள். தங்கள் துணையின் வீட்டாரிடம் அதிகம் பாசம் காட்டுங்கள். அது மற்றவர்க்கு மிகவும் எதிர்பாக்கும் ஒன்றாகும். இந்த ஒரு விசயத்தில் நீங்கள் கெட்டிக்காரராக இருந்தால் உங்கள் துணை  உங்களை உச்சத்தில் வைத்து கொண்டாடுவார்.
  • ரொமான்ஸ்!!! இது இல்லாமயா...? கட்டில் ஆடுவதுவதற்கு முன் உங்க துணையை  புகழ்ந்து தள்ளுங்கள். அது முழுமனதோடான ரசனையுடன் இருக்க வேண்டும். சின்ன சின்ன தீண்டுதல்களில் விளையாட்டும் குறும்புதனமும்  மிஞ்ச வேண்டும். அவருக்கு  வசதியான வகையில் படுக்கை அசைவுகள் இருக்க வேண்டும். துணையின் முழு திருப்தி என்பது உடல் தூய்ப்பதில் மட்டுமல்ல, சுகமான நினைவுகளில் தான் அதிகம் இருக்கிறது என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள். மற்ற நாட்களில் இந்த கட்டில் சத்தம் பற்றி பேசும்போது அந்த சுகானுபங்களை அசைபோடுவதில்  தான் முழு தாம்பத்ய வெற்றி கிடைக்க கூடும்.
  • தினந்தோறும் உடற்பயிற்சி இருவரும் செய்து பழகுங்கள். அதற்கென நேரம் கண்டிப்பாக ஒதுக்குங்கள்.


இனி உங்கள் துணை உங்களை கொண்டாட ஆரம்பித்துவிடுவார்.


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More