நீங்கள் ஏன் வலைப்பதிவு தொடங்க வேண்டும்..?

இலவசமாக எது கிடைத்தாலும் அது தரமானதாக இருக்கவே இருக்க முடியாது. எதுக்கு இலவசமாக நமக்கு தர வேண்டும்..? நம்மால் முடியாதது எதுவும் இல்லை எனக்கு வேண்டுமானால் அதை நான் கேட்டோ அல்லது போராடியோ பெற்றுக் கொள்வேன். எங்களுக்கு இலவசத்தை கொடுத்து ஏமாற்ற வேண்டாம்,  என்று கூக்குரளிட்டு கொண்டிருக்கும் வலைப்பதிவர்கள் யாவருமே இலவமாக கிடைத்திருக்கும் பிளாக் எனப்படும் வலைப்பூ சேவைக்கு தமது அன்பினையும், நன்றியினையும் தெரிவிக்க கடமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க இவசமாக கிடைத்திருக்கும் அறிய விசயம் தான் பிளாக் எனப்படும் தனி நபருக்கான இணைய சேவை. கணினி இணையப் பயன்பாட்டிலேயே வலைப்பதிவிற்கான காலம் தொடங்கிய பின்பு தான் இரண்டாம் உலகமாகவே மாறி, தன் அபார வளர்ச்சியை இணையம் வேகமாக கண்டு வருகின்றது.  இன்னும் சொல்லப் போனால் வலைப்பதிவிற்கு முன், வலைப்பதிவிற்கு பின் என்று இணையத்தை வரையறுத்து கூறலாம். அந்த அளவிற்கு வலைப்பதிவின் முக்கியத்துவமானது அமைந்திருக்கின்றது.

நீங்கள் ஏன் வலைப்பதிவை தொடங்க வேண்டும்..?

உங்கள் மனதில் இருக்கும் விசயங்களினை மற்றவற்களுக்கும் பயனுள்ள வகையில் தெரிவிப்பதன் மூலமாக அனைத்து வித கருத்துக்களையும் அனைவருமே தெரிந்துகொண்டு பயனடைய ஏதுவாகின்றது.


  • நீங்கள் தனிப்பட்ட கருத்தை சொல்ல வேண்டுமா..?
  • துறை சார்ந்த கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமா..?
  • உங்கள் நிறுவனம் அல்லது பொருளை பற்றி பகிர வேண்டுமா..?
  • வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கிறீர்களா..? 
  • சமூகத்தின் மேல் கருத்துக்களை கூற வேண்டுமா..?
  • உங்கள் திறமைகளை வெளிக்காட்ட வேண்டுமா..?
உங்களுக்கு மேற்கண்ட கேள்விகளில் ஒன்று பிடித்திருந்தாலும் நீங்கள் வலைப்பதிவை தொடங்குங்கள்.

உங்கள் கையெழுத்து மட்டும் அல்ல தலையெழுத்தையே மாற்றும் வல்லமை வலைப் பதிவிற்கு உண்டு.

உங்கள் தன்னம்பிக்கை நிச்சயமாக இரட்டிப்பாகும். உங்களுக்குள் ஒரு சின்ன      திமிர் கண்டிப்பாக முளைக்கும். 2 comments:

நல்லதொரு அலசல்...

உங்கள் கையெழுத்து மட்டும் அல்ல தலையெழுத்தையே மாற்றும் வல்லமை வலைப் பதிவிற்கு உண்டு.

உங்கள் தன்னம்பிக்கை நிச்சயமாக இரட்டிப்பாகும். உங்களுக்குள் ஒரு சின்ன திமிர் கண்டிப்பாக முளைக்கும். /

True..

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More