உங்கள் வலைத்தளத்திற்கு வரும் வருகையாளர்களின் பார்வை விகிதம் குறைந்து விட்டதா..?வலைப் பதிவில் புதிதாக வந்த புதிதில் நமக்கு தெரிந்த சில விசயங்களை ஆர்வமோடு பகிர்ந்து கொண்டிருப்போம். தொடங்கிய பொழுதில் வருகையாளர்களை நாம் அதிகமாக்க எழுதும் விதத்தில் ஆர்வம் அதிகமாக காட்டியிருப்போம். நாளடைவில் வருகையாளர் பார்வை விகிதமானது குறைவது போன்று தோன்றும்.  வருகை விகிதம் குறைவது தெரிந்ததுமே நமது எழுத்துக்கள் வருகையாளர்களை திருப்தி படுத்த தவறிவிட்டதோ என்று வருத்தம் ஏற்ப்பட்டு நாளடைவில் பதிவு எழுதுவதையே நிறுத்தி விட்டு தனது பயணத்தை முற்றுப்புள்ளி வைத்து சென்றவர்கள் ஏராளம். 

இப்படி ஆரம்பத்தில் பிரபலமாக பேசப்பட்டு, நாளடைவில் பதிவே இல்லாமல் திரும்பியவர்கள் தங்களை முழுமையாக சோதித்துகொள்ளுங்கள்

உங்கள் வலைத் தளத்தில் வருகையாளர்கள் குறையவே மாட்டார்கள் 

தினம் புதிதாக கற்றுக் கொள்ளுங்கள் :

    உங்கள் வலைப் பதிவில் கருத்துக்களை பதிய போதுமான வார்த்தைகள் கிடைப்பதில்லையா..?
    கவலையை விடுங்கள். தினம் நீங்கள் ஒரு பதிவை எழுதுகிறீர்களோ இல்லையோ, வேறு பத்து பதிவுகளையாவது முழுமையாக படியுங்கள். கற்றுக்கொள்ளும் ஆர்வம் கண்டிப்பாக வேண்டும். உங்களால் மற்றவர்கள் பதிவை படிக்க முடிந்தால் தான் உங்களது பதிவுகளுக்கான வார்த்தைகளை தேடாமல், தட்டச்சில் கை வைத்த உடனே உங்கள் பதிவிற்கான வார்த்தைகள் உங்கள் கரங்களில் தவழும்.

     உங்கள் பதிவில் உள்ள கருத்துக்கள் மற்றவர்களுக்கு படிக்க எளிதாகவும், புரியும்படியும் இருக்க வார்த்தைகளே வாய்ப்பாக அமையும் என்பதை உணருங்கள்.

பார்வையாளர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்தல் :

       உங்கள் தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் உங்கள் கருத்தையோ அல்லது எழுதும் தன்மையையோ பிடித்துப்போய் தான் வருவார்கள். அவர்களின் விருப்பம் என்ன என்பதை முழுமையாக புரிந்து கொள்ளுங்கள். 

உதாரனமாக, 
       நீங்கள் ஒரு நல்ல நகைச்சுவையாளராக அடையாளம் காட்டிக்கொள்ளும் பட்சத்தில் உங்கள் தள வருகையாளர்கள் அதை மட்டுமே விரும்பி வருகிறார்கள் என்று உணருங்கள். உங்கள் தள கருத்துக்கள் யாவுமே சிரிப்பை சிதறும் படியே அமைத்துக்கொள்ளுங்கள். யோசனையே வேண்டாம் முழுமையாக நீங்கள் ஒரு பகுதியை நோக்கியே உங்கள் கவனத்தை செலுத்துங்கள், உங்களுக்கு தனிப்பட்ட முறையில் தொழில்நுட்ப பதிவை எழுதும் எண்ணம் இருந்தால் அதற்காக தனியாக வேறு பக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். இரண்டையும் ஒரே இடத்தில் பதிவதன் மூலமாக பார்வையாளர்கள் மனம் மாறுபட்டு புரிதல் தவறிவிட வாய்ப்புள்ளது.


முக்கியத்துவத்தை உணருங்கள் & உணர்த்துங்கள் : 


     உங்கள் பதிவானது மக்களுக்கு எந்த வகையில் ஈர்க்கிறது என்பதை முதலில் உணருங்கள். உங்கள் கருத்துக்களுக்கு வரும் ஆதரவைக் காட்டிலும் எதிர்ப்பை   நோக்கியே உங்கள் பார்வை இருக்கட்டும்.


எதற்காக நமது நேரத்தை செலவு செய்கின்றோம் என்பதை உணருங்கள். உங்கள் நேரத்தை விரையமாக்கிவிட்டு வருகையாளர்களை தேடாதீர்கள். உங்களுக்கான ஒரு குழுவானது எப்படியும் இருக்கும். அவர்களுக்கு உங்களை அறிமுகம் செய்திடுவது உங்களின் திறமை ஆகும். தேடுங்கள் உங்களுக்கான முகவரி எது என்பதை, சரியாக உணருங்கள்.


வெளிப்படுத்தும் விதம் : 


      உங்களுக்கான தளத்தில் உங்களுக்கு பிடித்த,  தெரிந்த விசங்களை பகிர்ந்து கொள்வதற்கான முழு சுதந்திரமும் உங்களுக்கு உண்டு. ஆனால் அதை நீங்கள் ஒருவர் மட்டுமே வாசிக்க போகிறீர்கள் என்னும் பட்சத்தில் எவ்வித குறையும் இல்லை. அந்த கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிக்க வேண்டும் எனில் உங்களது பார்வையை நிச்சயமாக நீங்கள் மாற்றிப் பார்க்க வேண்டியது அவசியமாகும்.


உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் விதம் எளிமையாக் இருக்கும்படியும், பார்வையாளர்களுக்கு எரிச்சலை உண்டு பன்னாமல் கவரும்படியும் அமைத்துக்கொள்ளுங்கள். தள வடிவமைப்பு, நிறம், பின்னனி போன்றவைகளை மற்றவர்களின் பார்வையில் கவனியுங்கள்.


      சில கருத்துக்களால் மட்டுமே எதுவும் மாறிவிடும் என்று சொல்ல முடியாது, ஆனால் மாறும் அனைத்துமே சில கருத்துக்களால் என்பதை மறுக்க முடியாது. 
join here

9 comments:

நல்ல விஷயமா எழுதுரீங்க .......

நன்றி cpede ..

நண்பா cpede ன்னா என்ன //

அதுவும் nov 1 தேதி தான் சொல்லுவிங்களா ...

நல்ல கருத்துகள் . நன்றி

பதிவர்களுக்கு பயனுள்ள தகவல்கள்

what is cpede.?

click-ங்கோ...

http://cpedelive.blogspot.com/p/home.html

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.,பயனுள்ளதாக இருந்தது.

இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More