உங்களின் வலைத் தளத்தில் வருமானம் குறைவாக இருக்கிறதா..?

   பெரும்பாலன வலைப்பதிவர்கள் தங்கள் வலைப் பக்கத்தில் கூகிள் ஆட்சென்ஸ் கணக்கையோ அல்லது வேறு ஏதேனும் உதவி விளம்பர திட்டத்திலோ இணைந்து விளம்பர பலகைகள் இணைத்து விட்டு தங்களது விளம்பரக் கணக்கையே திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருக்கின்றனர். என்னதான் விளம்பரத்தை நமது தளத்தில் அமைத்திருந்தாலும் தளத்திற்கு வரும் வருகையாளர்கள் மற்றும் விளம்பரம் செய்திருக்கும் அமைப்பு முறை ஆகியவற்றை பொருத்தே விளம்பரத்திற்கான சொடுக்குகள் கிடைக்கின்றன. பார்வையாளர்களையும் ஈர்க்கின்றன.

பெரும்பாலன வலைப்பதிவர்கள் தங்களின் பதிவுகளின் மூலம் வருமானத்தை பெரிய அளவில் பெற முடியாததற்கான காரணங்களாவன :

தள வடிவமைப்பு குறித்து கவனம் செய்யுங்கள் :

   பெரும்பாலன வலைப்பதிவர்கள தங்களது வலைத் தளத்தில் தெளிந்த சிந்தனைகளுடன் கருத்துக்களை புதைத்திருந்தாலும், அவர்களின் தள வடிவமைப்பானது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் படி அமைந்திருப்பதில்லை. அவர்களின் நன்மதிப்பினை இழக்க தங்களது மோசமான வலை வடிவமே காரணமாகவும் இருக்கக் கூடும் என்பதனை அறியுங்கள். அதிக அளவிளான படங்கள் அல்லது பட்டைகளை உள்ளீடு செய்திருப்பது போன்ற காரணங்களால் விளம்பர பக்கங்களானது பார்வையாளர்களின் கவனத்தை கவருவதில்லை.

போதுமான பொறுமையை பெற்றிருப்பதில்லை :

    விளம்பர பக்கங்களினை உள்ளீடு செய்தவுடனாகவே வருமானம் நான்கு இலக்க எண்ணில் தொடங்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு காணப்படுவது ஆரோக்கியமானதல்ல. உங்கள் தளம் ஆரம்பிக்கப் பட்ட உடனே அதிக வருவாயை பெற நீங்கள் அதிக அள்வில் உழைப்பை செலுத்த வேண்டும் என்பதை மனதில் வைத்திருங்கள். பொருமை மிக அவசியம்., உங்களது தளம் சிறிது சிறிதாக தான் வளர்ச்சியடையும்

பதிவுகளில் கவனம் இல்லாதது :

தங்களது வலை சில நூறு வருகையாளர்களை தொடத் தொடங்கியதுமே நாம் தான் பிரபல பதிவர் என்னும் எண்ணம் சிலரிடம் தோன்றி விடுகிறது, இதனால் தான் எதை எழுதினாலும் வருகையாளர்கள் சகித்துக் கொள்வார்கள் என்னும் எண்ணத்தில் தேவையில்லாத, வெறும் வார்த்தைகளை மட்டுமே பதிவாக நிரப்பி வைத்திருப்பார்கள், இவர்களது எண்ணப்படி வருகையாளர்கள் வேண்டுமானால் அதிக அளவில் வர செய்வார்கள், அவர்கள் பதிவினது தன்மையை பொறுத்தே தளத்தில் தங்களது நேரத்தை செலவளிப்பார்கள். பதிவுகளை பார்வையிடும் போது தான் விளம்பரமும் அவர்கள் கவனத்தில் வரும் என்பதை மறந்து விட கூடாது

பின்னூட்டங்களுக்கு மதிப்பு கொடுங்கள் :

   உங்கள் தளத்திற்கு வரும் வருகையாளர்கள் வெறும் பொழுது போக்கிற்காக வருவதில்லை. அவர்கள் உங்களிடமிருந்து ஏதேனும் விசயங்களை தெரிந்து கொள்ளவே வருகின்றனர். அவர்கள் உங்கள் பதிவு பிடித்திருந்தாலோ, பிடிக்காமல் போனாலோ தான் பின்னூட்டம் இடுகின்றனர். மொத்தத்தில் உங்கள் பதிவை முழுமையாக படிக்கின்றவர்கள் தான் மதிப்பு மிகுந்த பின்னூட்டங்களை இடுகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்தேனும் ஒரு சிறிய பதில் செய்யுங்கள். இதன் மூலம் தான் நீங்கள் வருவாயை தெளிவாக உறுதிபடுத்துகிறீர்கள்

தேவையில்லாத இடத்தில் விளம்பரங்களை புகுத்தி வைப்பது :

   விளம்பரத்தின் மூலமாக வருவாயை பெற வேண்டும் என்ற உடனேயே கிடைக்கும் சிறிய இடத்தில் கூட தேவையில்லாமல் விளம்பர நிரலினை பதிந்து வைப்பது பார்வையாளர்களுக்கு எரிச்சலை தரும் என்பதை உணருங்கள். உங்கள் தளம் எளிமையாக இருந்தாலும் நீங்கள் ஒரே ஒரு விளம்பரத்தை பதித்திருந்தாலும் உங்களது வருவாயை இரட்டிப்பாகும். தேவை இல்லாமல் அதிகமாக விளம்பர நிரலியை பதியாதீர்கள்.


    தவறுகள் திருத்தப் படவே உருவாகின்றன, திரும்ப வருவதற்காக அல்ல என்பதை மனதினில் கொள்ளுங்கள்.


8 comments:

என்னைப் போன்ற புதிய பதிவருக்கு பயனுள்ள தகவல்கள் நண்பரே..

பின்றீங்க பாஸ்...

THANK U SO MUCH FOR UR INFO NANBA

பதிவர்களுக்கு பயனுள்ள தகவல்கள்

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

விரைவில் நமது வெற்றி பயணம் தொடங்க இருக்கிறது நண்பர்களே..!
உங்கள் ஆதரவே நமது வெற்றி..!

தொடரட்டும், வாழ்த்துக்கள்

பதிவில் இருக்கும் கருத்துகள் அனைத்தும் முத்து முத்தாய் இருக்கிறது.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More