கூகிள் ஆட்சென்ஸ் கணக்கு தமிழுக்கும் கிடைக்கும்

    வலைப்பதிவர்களுக்கென மிகப்பெரும் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கும் தேவைகளில் முக்கியமாக கருதப்படுவது வலைத் தள பதிவரது வருமானத்தை நம்பிக்கையான முறையில் பெறுவதற்கு பயன்படுவது கூகிள் ஆட்சென்ஸ் கணக்கு மட்டுமே ஆகும்.

    ஏனைய நம்பிக்கையான தமிழ் பதிவுகளுக்கு கொடுக்கப் படும் உதவி விளம்பர நிரலிகளினை விட கூகிள் கணக்கானது ஒவ்வொரு வலைப்பதிவர்களின் கனவாகவே பாவிக்கப் படுகிறது.

பெரும்பாலும் ஏன் முற்றிலுமாகவே கூகிள் ஆட்சென்ஸ் கணக்கானது தமிழ் பதிவர்களுக்கு மறுக்கப்படுகிறதற்கான காரணங்களாக சொல்லப்படுவது யாதெனில்,


 • தமிழ் பதிவர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை
 • விளம்பர பலகைகள் ஒரு தளத்தில் இட வேண்டுமானல் அந்த விளம்பர நிறுவனத்திற்கு தகுந்தாற்போல தளத்தினது பதிவுகள் அமைந்திருக்க வேண்டும் என்பது உதவி விளம்பர நிரலிகளின் தனிப்பட்ட கருத்தாக இருக்கிறது
 • இதையே மாற்றாக கருதினால் தளத்திற்கு தகுந்தாற் போல விளம்பர பலகைகள் இடுவதே உதவி விளம்பர நிரலிகளது எண்ணுகிறது
 • தமிழ் மொழியில் பதியப்படும் பதிவுகளானது ஒரு சிலரால் மட்டுமே மிகவும் இலாப நோக்கில்லாமல் சிறப்பாக பதியப்பட்டு வருகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கவேண்டி இருக்கிறது.
 • இங்கு திறமையானவர்களுக்கு பஞ்சமில்லை, ஆனால் அவர்கள் முன்னேறுவதை போற்றுவதற்கும், கை கொடுத்து தூக்கி விடுவதற்கும் போதுமான ஆட்களில்லை
 • இவ்வாறாக சொல்வதற்காக மன்னித்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு அரட்டை அடிக்க சமூக வலைத்தளங்கள் எத்தனையோ இருக்கின்றன, தயவு செய்து ஒரு தவறான நோக்கில், பொக்கிசமாக அமைந்திருக்கும் வலைப்பூவை வீனாக்கிவிடாதீர்கள்
 • இங்கு திறமைகளை வெளி உலகிற்கு காட்டமுடியாமல் எத்தனையோ ஏகலைவன்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்கள்
 • வளமான கருத்துக்கள் பலவாக நம் தாய் தமிழ் மொழியில் பதியப்பட வேண்டும்.
 • உலகலாவிய அளவில் தமிழ் மொழிக்கும் அங்கீகாரம் கிடைத்திட வேண்டுமெனில் ஒட்டு மொத்த வலையுலகமும் ஒன்றாக ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்
 • வலைப்பதிவானது நமக்கான உலகம், அதை நல்ல முறையில் பேணி காக்க வேண்டியதும் நமது கடமை.
 • ஆரோக்கியமான் சமூகம் அமைத்திட்டோமானால் தான் நமக்கான உரிமைகளை நாம் வேண்டி பெற முடியும்
 • உங்களால் முடிந்த அளவிற்கு வாரத்தில் ஒரு கருத்தேனும் நல்ல முறையில் எழுத முடியுமானால் நீங்களே தரமான சிறந்த பதிவர் ஆவீர்கள்
 • முடிந்த வரை சிறப்பான பதிவுகள் எழுதுபவர்களை பின்னூட்டம் வாயிலாக ஊக்கப்படுத்துங்கள்
 • இலாப நோக்கில்லாத எண்ணம் இல்லை. இலாபத்தினை நோக்கிய எண்ணமே இது.
தமிழ் மொழியில் அதிகப்படியான பதிவுகள் இருக்கும் பட்சத்தில் தான் கூகிள் ஆட்சென்ஸ் கணக்கு பெறுவதற்கு முடியும். 

எனவே புதிய வலை பதிவாளர்களை உலகுக்கும் தமிழுக்கும் அறிமுகம் செய்வோம்.

இந்த தளத்தின் முழு செயல்பாடும் நவம்பர் மாத தொடக்கத்தில் வழங்க இருக்கிறோம்.

எங்கள் தளத்தின் மூலமாக எவர் மனதையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை. தவறிய கருத்துக்கள் தாக்கத்தை ஏற்படுத்தினால் மன்னிக்கவும்.


13 comments:

அதெல்லாம் சரி, ஆனால் பதிவர்கள் என்னவோ பிச்சைக்காரர்கள் போலவும் திரட்டிகள் அவர்களுக்கு உதவுவது போலவும் இயங்குவது என்ன காரணம் என்று தான் புரியவில்லை

கை கோர்ப்போம்....

இணைந்திருப்போம் நண்பரே..

நட்புடன்
சம்பத்குமார்

எங்களால் ஆன முயற்சிகளைச்செய்வோம்

//அதெல்லாம் சரி, ஆனால் பதிவர்கள் என்னவோ பிச்சைக்காரர்கள் போலவும் திரட்டிகள் அவர்களுக்கு உதவுவது போலவும் இயங்குவது என்ன காரணம் என்று தான் புரியவில்லை//

அடிதடிய இங்கயும் ஆரம்பிச்சிடீங்களா?

//இலாப நோக்கில்லாத எண்ணம் இல்லை. இலாபத்தினை நோக்கிய எண்ணமே இது//

பாரப்பா.........

//தவறிய கருத்துக்கள் தாக்கத்தை ஏற்படுத்தினால் மன்னிக்கவும்//

அப்படிலாம் ஒன்னும் இல்ல தோழரே.

தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

எல்லாமே புரியாத கிறுக்கல்கள் தான் தோழரே.. பொருதிருங்கள் தோழரே..

தமிழ் தளங்களுக்கு அட்சென்ஸ் எப்படி கிடைக்கிறது .
கிடைத்தாலும் நிரந்தரமில்லாமல் சென்றுவிடுகிறது .

பூனைக்கு மணி கட்ட நாங்கள் ஆயத்தமாகிவிட்டோம்..

இனி தமிழ் வலைப்பதிவிலும் விளம்பரங்களை விரைவில் காணலாம்..

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More