கைத்தடி மனிதர்கள் ( 7817 )

சுவரின் மூலையில்
பூனையின் முனகல்...
சன்னலில் வீசும் சாரல்..
முகக்குழிகளைத்
தழுவிச் செல்லும் தென்றல்..
ஓயாத கடிகார நடுங்கல்..

தனிமை சூழ்ந்த என் அறை...

இது..
காலையாக இருக்கலாம்
பகலாக இருக்கலாம்
அந்தியாக இருக்கலாம்
பிறர் சொல்வதுபோல்...


காற்றில் அலையும் கரம்..
நிச்சயமற்ற தடுமாறும் நடை..
சாலை நகர்வுகளில் எனக்கான ஒதுங்கல்கள்....
இரங்கல் வார்த்தைகள்...
கவனிக்காமல் மோதும் மனிதர்கள்....

ஒலிகளும் ஸ்பரிசங்களுமே நிறைக்கின்றன
என் வாழ்வை...!

ஏனோ இரண்டை மட்டும்தான்
உணர முடிகிறது என்னால்...
தடி நடுங்கும் இடத்தில் நடை..!
மிதக்கும் இடத்தில் வெளி…!

சொல்லுங்கள் நண்பர்களே..
சூரியனும் நிலவும் எப்படி இருக்கும்…?

நண்பர்களே கவிதை பிடித்திருந்தால் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்..


--
விட்டுக்கொடுங்கள்.. விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக்கொடுங்கள்..தவறுகள் குறையும்..
மனம் விட்டுப் பேசுங்கள்..அன்பு பெருகும்..

அன்புடன்
சம்பத்குமார்
www.tamilparents.com

5 comments:

பதிவுகளை அப்படியே உங்களிடம் கொடுத்து நீங்களே அதை முழுமையாக வெளியிட்ட பின் எப்படி மற்றவர்களுக்கு ஹிட்ஸ் கிடைக்கும்? அப்பறம் எப்படி லட்சகணக்கில் பார்வைகள் கிடைக்கும்?

போஸ்ட் கோட் எதற்கானது? அதை தலைப்பில் இணைப்பதன் மூலம் என்ன கிடைகும்?

என் ஐயங்களுக்கு விடை கொடுப்பீர்கள் என நம்புகிறேன். காத்திருக்கிறேன்

முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

பந்தயத்துல ஜெயிக்கனும்னா கண்டிப்ப ஓடித்தானே ஆகனும்..? உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் விடை விரைவில் கிடக்கும்.

சாதரணமாக மூன்று மாதத்தில் ஒரு இலட்சம் ஹிட் என்பது ஒரு நாளுக்கு சுமார் 1000 ஹிட்டை குறிக்கும் தானே நண்பா..?

அது மிகவும் எளிதான விசயம் தனே..?

உங்களிடம் இருந்து இன்னும் பல சந்தேகங்களை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அனைத்தையும் உங்களுக்கு சொல்லத்தானே நாங்கள் கவனம் எடுத்து முன்னோட்டம் பார்க்கின்றோம்..

ஒரு சிறு தவறு கூட ஏற்பட்டு விடக்கூடாது என்பதே எங்களின் விருப்பம்.

உழைப்பது என்றுமே வீண் போகாது.

எனவே கவலை தேவை இல்லை.. சாதாரணமாக நீங்கள் உங்கள் பதிவுகளை திரட்டியில் இணைத்து அதன் மூலம் அதிக வருகையாளர்களை பெறுகிறீர்கள் அல்லவா..? அதே போல தான் உங்கள் முழுமையான பதிவிற்கு முழுமையான அங்கீகாரத்தை வழங்கிடவே நாங்கள் சிறு முயற்சியை தொடங்கி இருக்கின்றோம்.

உங்கள் பதிவிற்கு நீங்கள் மட்டுமே உரிமை கொண்டாட முடியும்.

கண்ணாடிக்கு முகம் சொந்தம் ஆகாது. நாங்கள் கண்ணாடியாகத் தான் இருக்க போகிறோம். விரைவில் விவரங்களுடன் அறிவீர்கள்...

தொடர்ந்து ஆதரவளியுங்கள்..

சரி நண்பரே!...

ஒரு சிறு உதவி..

உங்கள் பார்வையில் பதிவுலகம் பற்றிய நன்மை தீமை பற்றி ஒரு அழகான பதிவை பதியலாமே..

மதிப்பளித்து நன்முறையில் பதில் தந்தமைக்கு நன்றி சகோதரர். ஆனால் என் கேள்விக்கு சரியான விடை கிடைக்கவில்லை.

//விரைவில் விவரங்களுடன் அறிவீர்கள்...
//
காத்துக்கொண்டிருக்கிறேன்.

//உங்கள் பார்வையில் பதிவுலகம் பற்றிய நன்மை தீமை பற்றி ஒரு அழகான பதிவை பதியலாமே..//
இறைவன் நாடினால் கூடிய விரைவில் பதிகிறேன் சகோ

நன்றி

உங்கள் சகோதரி
ஆமினா முஹம்மத்

கவிதை நல்லா இருக்கு

அவரின் நேரடி தளத்திற்கும் சென்று உங்கள் பாராட்டுக்களினை தெரிவியுங்கள் மதிப்புக்குரியோரே..

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More