Latest News

மாண்புமிகு ஜப்பானிய சிறுவன்

வணக்கம் 

மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி பெருகுவதும்,துக்கத்தை பகிர்ந்து கொண்டால் துக்கம் குறைவதும் நாம் அனேக சமயங்களில் உணர்ந்திருப்போம்,மனதலவிலும்,உடலாலும் ஏற்படுவது போலவே சில விசயங்களை பார்த்தோ,படித்தோ,கேட்டோ,உணர முடியும் .அப்படி படித்து பாதித்த ஒரு செய்தி என்னை துக்கத்தையும் ,மகிழ்ச்சியையும் ( சிறுவனின் நடத்தை ) ஒரு சேர உணர செய்தன .அந்த துக்கம்,மகிழ்ச்சி இரண்டும் பெருகவும்,குறையவும் உங்களிடத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

        ஜப்பானின் புகுசிமாஅணுஉலை பகுதியில் நிவாரண பணிகளுக்காக போயிருந்த வியட்நாமின் போலீஸ் அதிகாரி ஹா மின் தான் என்பவர் வியட்நாமில் உள்ள தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தை அமெரிக்க நாளிதழ் ஒன்று வெளியுடள்ளது .

நெருக்கடி நேரங்களில் நாம் எல்லோரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்ப்பிகிற அந்த கடிதத்திலிருந்து.


' அன்புள்ள சகோரதனுக்கு 

 இங்கு எல்லாம் ஒரே குழப்பமாக இருக்கிறது.கண்களை மூடினால் சவங்கள்,கண்களை திறந்தாலும் சவங்களே. தண்ணீர்,மின்சாரம் எதுவும் இல்லை .உணவும் கிட்டதட்ட இல்லாதது போல தான் .உனக்கு சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது.அதெல்லாம் எழுதினால் மனித உறவுகளை பற்றி,நெருக்கடி நேரங்களில் மனிதர்களை நடத்தை பற்றிய மிகப் பெரிய புத்தகமாகவே வரும்.

மக்கள் அமைதி காக்கின்றனர்,அவர்களுடைய கவுரவம் நன்னடத்தை பாராட்டுக்குரியது.நேற்று இரவு என்னை ஒரு பள்ளிக்கு உணவு பங்கிடுவதற்காக அனுப்பி இருந்தனர்.வரிசை மிக நீளமாக இருந்தது .அதில் அரை நிஜார் ,டீசர்ட் அணிந்துருந்த ஒரு சிறுவன் இருந்தான்.வரிசையின் கடைசியில் நின்று கொண்டிருந்தான்.இருட்டும்,குளிரும் அதிகமாகி கொண்டிருந்தது.எனக்கு அவன் முறை வரும் போது உணவு சப்ளை தீர்ந்துபோயவிடுமோ என்ற கவலை.அவனிடம் பேச்சு கொடுத்தேன்.


பூகம்பம் வந்தபோது அவன் பள்ளியில் இருந்தானாம்.அவன் தந்தை அவனை அழைத்து போக காரில் வந்திருக்கிறார்.அப்போது அவர் ஓட்டி வந்த கார் சுனாமி அலையில் அடித்து செல்லப்பட்டதை பள்ளியின் மூன்றாம் பால்கனியிளுருந்து பார்த்தானாம்.அவன் தாயை பற்றி கேட்டேன் ' எங்கள் வீடு கடற்கரையில் இருக்கிறது,அதனால் தாயும் ,சகோதரியும் உயிர் தப்பி இருப்பது சந்தேகமே' என்றான் .உறவினர் பற்றி கேட்டதும் முகத்தை துடைத்துக்கொண்டு பெருகிய தண்ணீரை துடைத்து கொண்டான்.


சிறுவன் குளிரில் நடுங்கி கொண்டிருந்தான்.நான் என் போலீஸ் ஜாக்கெட்டை அவனுக்கு அணிவித்தேன்.அப்போது என்பங்கு ரேசன் உணவுப் பொட்டலம் வந்தது.நான் அதை அவனுக்கு கொடுத்து 'உன் முறை வரும் போது உணவு மிச்சம் இருக்காது ,நான் ஏற்கனவே சாப்பிட்டு விட்டேன் .இதை நீ சாப்பிடு 'என்றேன்.

 அவன் அதை உடனே சாப்பிடுவான் என்று நினைத்தேன்.அவன் அதை கொண்டு போய் பங்கிடுவதற்காக வைத்திருந்த மற்ற உணவு பொட்டலங்களுடன் வைத்துவிட்டான்.எனக்கு ஒரே அதிர்ச்சி ஏன் அதை சாப்பிடவில்ல என்ற என் கேள்விக்கு " ஏனெனில் என்னை விட அதிக பசியுடன் பல பேர் காத்திருகிறார்கள் ,நான் அதை அங்கு வைத்தால் உணவு சமமாக பங்கிடப்படும் " என்றான்.நான் என் கண்களில் துளிர்த்த நீரை மற்றவர்கள் பார்த்துவிட கூடாது என்று முகத்தை திருப்பி கொண்டேன்.

ஒரு ஒன்பது வயது சிறுவன் பொது நன்மைக்காக சின்ன தியாகம் செய்ய வேண்டும் என்ற கொள்கையை அறிந்துள்ளான் என்றால் , அவனை உருவாக்கிய சமூகம் எதனை உயர்ந்தது.அந்நாட்டு மக்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் எண்ணி வியந்தேன்.

நன்றி

மீண்டும் சிந்திப்போம்
உண்மையுடன்
அவனிசிவா

http://avanishiva.blogspot.com
Follow by Email

Recent Post