அடிமை கவிதை

மங்காத தோல்விகளே…
உங்களுக்கு ஒரு சவால்
என் மனதை
வென்று
சோர்வடையச் செய்யுங்கள்
பார்க்கலாம் ?

சோதிக்கும் வேதனைகளே…
விதிகளின்றி
உங்களுக்கு ஒரு போட்டி.
எதையாவது செய்து
சிதையுங்கள்
அனலாக இருக்கும் என்
மனவலிமையை !

முரட்டுப் பெருமைகளே..
விரட்டி வந்தாலும் என்னை
முற்றுகையிட்டுச் சிறைப்பிடித்து
விற்கமுடியாது உங்களால் !

போதையான மகிழ்ச்சிகளே…
பாதை மாறி வந்து
உங்கள் மாய வலையில் சிக்கி
தங்கிவிடுவேன் என்று
கனவுகளில்
மனக்கோட்டை கட்டவேண்டாம் !


விலையற்ற பணிவே… 
தலை வணங்குகிறேன் !
நான்...
உன்னை ஏற்கனவே
போற்றி வழிபட்டு
ஏற்றுக்கொண்ட அடிமை !

--
விட்டுக்கொடுங்கள்.. விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக்கொடுங்கள்..தவறுகள் குறையும்..
மனம் விட்டுப் பேசுங்கள்..அன்பு பெருகும்..

அன்புடன்
சம்பத்குமார்
www.tamilparents.com

8 comments:

சம்பத்குமார்-ன்னா வேகம்னு இனிமே நினைத்துக்குவோம்...


அருமை நண்பா..!

சகோ post code பற்றி சற்று விளக்கமாக விளக்குங்களேன்..

ஒன்றும் பெரிதாக இல்லை ச்கோ.. மேலே post code பக்க மெனுவிற்கு செல்லுங்கள்.
அங்கே நீங்கள் ஏற்கனவே இருக்கும் எண்களை காண்பீர்கள். அதன் அருகே உள்ள ஜெனரேட் பட்டனை அழுத்தியதும் புதிய எண் தோன்றும். அதை நகல் எடுக்க முடிகிறதா என்று பாருங்கள்..

இந்த போஸ்ட் கோட் எண் ஆனது விரைவில் முக்கியமான கோட் எண்ணாக ஒவ்வொரு பதிவிற்கும் இணைக்க வேண்டி வரும்.

ஒவ்வொரு பதிவு மெயிலில் அனுப்பும் பொழுதும் புதிய post code நகல் எடுத்து அனுப்ப வேண்டுமா ?


தலைப்பு கீழ் உள்ளபடியா ?

example Like this

அடிமை கவிதை (5215)

மிக சரியாக புரிந்துகொண்டீர்கள் சகோ... கருத்துக்களை கச்சிதமாக கவ்வுகிறீர்கள்.. கக்கக்க போங்கள்...

நன்றி சகோ...

சிறிய விண்ணப்பம்

தங்களிடம் சந்தேகம் கேட்க contact mail ஒன்று உருவாக்குங்களேன்.

தங்களின் அரிய முயற்சி வெற்றி பெற
மனமார்ந்த வாழ்த்துக்கள்

வருங்காலத்திற்காக நம்பிக்கைகளை விட்டுச் செல்வோம்..

நிச்சயமாக.. உங்கள் தள விபரம் குறித்த சந்தேகங்களை பின்னூட்டம் வாயிளாக தாராளமாக கேளுங்கள். அப்போது தான் மற்றவர்களுக்கும் அது பார்வைக்கு படும் படி இருக்கும். உங்கள் தனிப்பட்ட விபரங்களை அறிய எத்தனித்துள்ளோம்.. கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளுங்களேன்.

cpedecare@gmail.com

Veryyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy Nice........................

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More