Fwd: உலக திகில்/ஹாரர் திரைப்படங்கள் : THE INNOCENTS - 1961 : மர்மங்கள் நிறைந்த மனிதர்கள்..(Download Links).

உலக திகில்/ஹாரர் திரைப்படங்கள் : THE INNOCENTS - 1961 : மர்மங்கள் நிறைந்த மனிதர்கள்..(Download Links).

வலைப்பூ ஆரம்பித்து ஏறக்குறைய ஒரு மாதம் கடந்த நிலையில் எழுதும் 25 -ஆவது பதிவு இது..தொடர்ந்து ஆதரவும் வழங்கும் வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பார்ந்த நன்றிகள்..

=========================================================

http://2.bp.blogspot.com/-dBgAy9P-uGs/TqL3cUk_KfI/AAAAAAAAAVY/VU1XDnGEWOA/s400/The+Innocents+%25281961%2529.jpg

Film : The Innocents    Year : 1961
Country : England     Rating : PG - 13 (VIEW >>)
Director : Jack Clayton   Writers : Novella : Henry James, Screenplay : William Archibald And Truman Capote (additional dialogue) :
Stars : Deborah Kerr, Michael Redgrave, Megs Jenkins, Pamela Franklin And Martin Stephens
Awards : Nominated for 2 BAFTA Film Awards. Another 2 wins & 3 nominations See more awards

=====================================================================

Flora: [singing] We lay my love and I, beneath the weeping willow. But now alone I lie and weep beside the tree. Singing "Oh willow waly" by the tree at weeps with me. Singing "Oh willow waly" till my lover return to me. We lay my love and I beneath the weeping willow. A broken heart have I. Oh willow I die, oh willow I die...
                                                                                                                                  - FLORA IN THE INNOCENTS

என்ற பாடலுடன் மெல்லமாக காட்சிகள் தொடங்குகின்றன...........

http://3.bp.blogspot.com/-_mE-fNsrTPw/TqL59q9KzgI/AAAAAAAAAWg/-0u_khzKCnE/s400/Setting.jpg

" அது ஓர் அழகான தோட்டப்புறம்.அது...எங்கும் குளங்களும்.பச்சை பச்சையென மரங்களும் புல்வெளிகளும் கண்களை..கவரும் வகையில் இயற்கை வளங்களும் நிரம்பி வழியும் ஒரு நிசப்தமான பூமி..இந்த பிரமிக்க வைக்கும் அழகினை கண்டப்படியே குதிரை வண்டியில் வந்து இறக்குகிறாள்...மிஸ் கிட்டென்ஸ்.பெற்றோரை இழந்து வாழும் பணக்கார வீட்டு பிள்ளைகளை கவனிக்கும் பொறுப்பாளர் பணி அவளுக்கு வழங்கபடுகிறது..முதல் சந்திப்பே சிறுமியான Floraஉடன்..Flora, குளக்கரையில் தன்னுடைய பொழுது போக்கினை கழிக்கும் விளையாட்டுப் பிள்ளை..முதல் பார்வையிலேயே மிஸ் கிட்டென்ஸ் - உடன் ஒன்றிப் போய்விடுகிறாள்..கிட்டென்ஸ் உடனான உரையாடலில் தன் அண்ணனான Milesவீட்டிற்க்கு வரவிருப்பதாக திடீரென்று எதிர்ப்பாராவிதமாக சொல்கிறாள்..Miles, தங்கி பயிலும் பள்ளியில் படிப்பவன் (போர்டிங் ஸ்கூல்)..ஃப்லோராவின் பேச்சை கண்டுக்கொள்ளாத கிட்டென்ஸுக்கு முதல் அதிர்ச்சியாக மறுநாள் Miles பயிலும் பள்ளியிலிருந்து ஒரு கடிதம் வருகிறது....

http://2.bp.blogspot.com/-TI6b4Ue4TeE/TqL3vDdjkRI/AAAAAAAAAVg/ChbJNHlk9Qw/s320/TheInnocents1961_4.jpg

   கடிதத்தில் "மைல்ஸ் பிற மாணவர்களிடம் மோசமாக நடந்துக்கொள்வதாகவும் இதன் காரணமாக அவனை பள்ளியிலிருந்து நீக்கிவிட்டதாகவும்:நாளையே ஊருக்கு வருவதாகவும்" கூறுகிறது...தொடர்ந்து கிட்டென்ஸ் மைல்ஸை சந்திக்கிறாள்..வயதைத் தாண்டிய பேச்சும் முதிர்ச்சியும் அழகான தோற்றமும் அவன் மீது சாட்டப்ட்ட குற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.எனவே மைல்ஸிடமும் இதனை பற்றி எதுவும் கேட்காமல் விட்டுவிடுகிறாள்..

  பிள்ளைகள் இருவரும் கிட்டென்ஸுடன் இயல்பாகவும் சந்தோஷமாகவும் பழக ஆரம்பிக்க, கிட்டென்ஸை இரண்டாவது அதிர்ச்சி தாக்குகிறது..சம்பந்தமே இல்லாமல் சில உருவங்களை அவள் காண தொடங்குகிறாள்..கற்பனையாக இருக்ககூடும் என்று நினைத்தவிட்ட போதும், மென்மேலும் அந்த உருவங்களினால் மனம் பாதிக்கபடுகிறாள்.. ...இதன் தொடர்பாக பல காலமாக வீட்டில் பணிப் புரியும் Mrs. Grose என்பவரின் உதவியை நாடுகிறாள்..இந்த காட்சியில் இருவருக்கும் நடுவே பல மர்மங்களும் முன்பு வாழ்ந்த மனிதர்களின் ரகசியங்களும் வெளிவருகின்றன.. 

http://1.bp.blogspot.com/-nPNKL3Psi1s/TqL32AsUdRI/AAAAAAAAAVo/yLMZg9vlsD4/s320/Innocents.Kerr.jpg


  தொடர்ந்து வரும் நிகழ்வுகள் யாவும் மர்மங்கள் சூழ்ந்திட பல ரகசியங்களின் முடிச்சுகள் அவிழ்கின்றன..உண்மையாகவே அங்கு நடப்பது என்ன ? தொடர்ச்சியாக தோன்றிடும் உருவங்களின் பின்னனிகள் என்ன ? அந்த ?... பிள்ளைகளுக்கும் அவர்களுக்கும் இந்த கதைக்கும் உள்ள சம்பந்தம் என்ன ? "

     என்பதை..திரையில் காண்பதே சிறந்தது..இந்த சற்று வித்தியாசமான ஹாரர் அனுபவம் உங்களை கைது செய்ய வாய்ப்புகள் உண்டு..

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

  இந்த வாரம் பார்த்ததிலேயே அதிகமாக கவர்ந்தது மட்டுமல்லாது மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்த படம்..எல்லா தொழில்னுட்பங்களும் வசதிகளும் நிறைந்த இந்த கால பல திரைப்படங்களால் கொடுக்க இயலாத ஒரு விதமான திருப்தியை அளித்த படம்.


 1961 - ஆம் வருடம் ஜேக் கிளேட்டன் என்ற இயக்குனரின் திரைவடிவத்தில் மலர்ந்த தெ இன்னசன்ஸில் Deborah Kerr Peter Wyngarde and Megs Jenkins போன்றவர்கள் நடித்திருக்கின்றனர்.சிறந்த பிரிட்டிஷ் படம் மற்றும் திரைக்கதைக்காக பாஃப்தா விருதுகளுக்கு பரிந்துரை செய்யபட்ட இத்திரைப்படம், கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்காக Palme d'Or விருதுக்கு போட்டியிட்டது குறிப்பிடதக்கதாகும்..

ஏறக்குறைய 50 வருடங்கள் கடந்த நிலையில் இன்று பல விமர்சனர்களால் சிறந்த சைக்கலோஜிக்கல் ஹாரர் திரைப்படமாக கருதப்படுகிறது...ரசிகர்கள் மத்தியில் சிறந்த கல்ட் கிளாசிக்காக பாராட்டபடுகிறது..

==================================================================================

The Innocents திரைப்படத்தின் சில சுவாரஸ்யங்கள் :
http://1.bp.blogspot.com/-8T_ovwlXcbM/TqL4MKSg5yI/AAAAAAAAAWA/9BWID6xf1nI/s320/INNOCENTS2.jpg

Debra Kerr - ஆறுமுறை ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்ட இங்கிலாந்து நடிகை.வாழ்நாள் சாதனைக்காக ஆஸ்கர் விருதுகளால் மரியாதை செய்யப்ட்டவர்.இன்றுவரை திரை நடிப்புக்கு ஒரு முன்னூதாரமாய் விளங்கும் நடிகைகளில் ஒருவராவார்.Miss Giddens என்ற கதாபாத்திரத்தின் மூலம் தன்னுடையCareer Performance இத்திரைப்படத்தில் வழங்கி இருக்கிறார்
=============================

அடுத்தது இசை - அவசியமான இடங்களில் நம்மை ரசிக்க செய்வதோடு கூடவே பயமும் மூட்டுகிறது.திரைப்ப்டத்தின் உயிர் நாடிகளில் ஒன்று.
==============================

Henry James என்னும் எழுத்தாளரால் 1898 - ஆம் ஆண்டு எழுதபட்ட The Turn of the Screw என்ற நாவலை தழுவி எடுக்க படமாகும்..ஒன்றே முக்கால் மணி நேரம் உட்கார்ந்து அமைதியாக நாவலை படிக்கும் திருப்தியை இத்திரைப்படம் நமக்கு கொடுக்கிறது..பலமுறை தொலைக்காட்சி தொடர்கள் படங்கள் என்று இந்த நாவலை அடிப்படையாக கொண்டு எடுத்த போதிலும், இன்றுவரை தெ இன்னசன்ஸ் சிறந்த திரைத்தழுவலாக பலராலும் கருதப்படுகிறது.மேலும், தெ இன்னசன்ஸ் என்ற தலைப்பு மேடை நாடகத்திலிருந்து எடுக்கபட்டதாகும்..    
============================================

http://2.bp.blogspot.com/-ZtPeZVDqT5g/TqL7-T4fZsI/AAAAAAAAAXg/u6vcbqa3eS0/s320/cbbc57de.jpg

  "Creepily atmospheric, The Innocents is a stylishly crafted, chilling British ghost tale with Deborah Kerr at her finest."
                                                        - Rotten Tomotoes

உலக திரைப்படங்களை விமர்சித்து ரேட்டிங்க் கொடுக்கும் தரமான தளமான ரோட்டென் தொமொதோஸ் இந்த படத்துக்கு 96 சதவீதம் ரேட்டிங்கை வழங்கியுள்ளது சிறப்பாகும். 
======================================

http://4.bp.blogspot.com/-DV2WGukwMjk/TqL4aPd-VyI/AAAAAAAAAWQ/uqHbONda_HA/s320/30065373-30065376-large.jpg

Flora - வாக வரும் Pamela Franklin மற்றும் Miles - ஆக வரும் Martin Stephensதிரைப்படத்தின் கூடுதல் பலம்..வயதுக்கு மீறிய சிறந்த இவர்கள் வெளிபடுத்தி உள்ளனர்..சின்ன சின்ன முக அசைவுகள், முகபாவங்கள் என மொத்த கதையின் முழுபலமும் இவர்களை நம்பி இருப்பதை நன்கு உணர்ந்து தங்களது திறமிக்க நடிப்பை கொடுத்துள்ளனர்..இவர்களின் கண்களில் ஒரு விதமான அமானுஷ்யங்கள் ஒளிந்திருப்பதை சில காட்சிகளில் பார்க்கமுடிகிறது..
================================

http://1.bp.blogspot.com/-N89Cx37cPrE/TqL6LHD2kyI/AAAAAAAAAWo/_VMBbuTkFH8/s320/8F8F9D092E.jpg

 தெ ஹௌண்டிங் திரைப்படத்தின் பார்வையில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்..INNOVATE என்ற வார்த்தையை எந்த அளவுக்கு ஒளிப்பதிவில் பயன்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு பயன்படுத்தி இருக்கின்றனர்...ஒரு கருப்பு வெள்ளை மாஸ்டர்பீஸ் என்று சொல்லலாம்.
==============================================

François Truffaut என்ற இயக்குனரை பற்றி திரை ரசிகர்கள் பலர் அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு..பிரெஞ்சு சினிமா மட்டுமின்றி உலகளவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மதிக்கபடுபவர்...இவர் - ஆல்பிரட் ஹிட்ச்காக் திரைப்படங்களுக்கு பிறகு இங்கிலாந்து சினிமாவில் எடுக்கபட்ட சிறந்த படமாக தெ இன்னசன்ஸை ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்..
===========================================

மெக்சிகன் இயக்குனரான Guillermo del Toro இந்த வருடம் USA TODAY வில் கொடுத்த பேட்டியில் தெ இன்னசன்ஸை பிடித்த ஆறு ஹாரர் படங்களில் ஒன்றாக குறிப்பிடுள்ளார்.
======================================
http://1.bp.blogspot.com/-LsPf7LkYVro/TqL7kO2UoPI/AAAAAAAAAXY/yxFtUUJULbQ/s1600/the-innocents-1961.jpg


 இயக்குனர் மார்ட்டின் ஸ்கொர்சசி அவர்களுக்கு பிடித்த 11 சிறந்த ஹாரர் திரைப்பட பட்டியளில் தெ இன்னசன்ஸ் படத்தையும் ஒன்றாக குறிப்பிட்டுள்ளார். (குறிப்பு :இவருக்கு பிடித்த படங்களை பார்க்க ஆரம்பித்துள்ளேன் வெகு   சீக்கிரம் பகுதி ஒன்று)
===================================

Mrs. Grose - ஆக வரும் Megs Jenkins நடிப்பு அருமை..கதைக்கு மிக முக்கியமான கதாபாத்திரமும் கூட..
=================================
http://4.bp.blogspot.com/-6Ua5KNHySRM/TqL7dvfIuLI/AAAAAAAAAXQ/VXLFDd8NxYs/s320/the_innocents.jpg

படம் தொடங்கியதும் உடனே டைட்டில் கிரடிட் போடாமல்..காதுக்கு இனிமையான ஒரு குரலோடு ஏறக்குறைய 15 நொடிகள் ஒரு பாடல் ஒலிப்பது அந்த காலம் மட்டுமின்றி இப்பொழுதும் சற்றும் புதிதானதே..சற்று புதிரான பாடலும் கூட..2001 எ ஸ்பேஸ் ஓடிஸி படத்தில் காட்சி தொடங்குவதற்க்கு முன்னர் ஒலிக்கும் இசையை போல இந்த படத்தில் வரும் பாடலிசை நம்மை மேற்க்கொண்டு படம் பார்க்க நம்மை தயார் நிலைபடுத்துகிறது,,இது ஒருவிதமான புதுமையும் கூட..
===============================


http://3.bp.blogspot.com/-p-aixmXCurs/TqL4viuydfI/AAAAAAAAAWY/uYsvmGjpnQ4/s320/neilsinyard1.jpg

ஜேக் கிளேட்டன் - 1921 - ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 தேதி இங்கிலாந்தில் பிறந்த திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆவார்.Room at the Top (1959) என்ற படத்தின் இயக்கத்திற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யபட்டவர்.மேலும்,கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்காக Room at the Top (1959), The Innocents (1961) மற்றும் The Pumpkin Eater (1964) ஆகிய படங்களுக்கு பரிந்துரைக்கபட்டவர்..இவருடைய இயக்கத்தில் வந்த சில புகழ்பெற்ற சிறந்த படங்கள் : The Bespoke Overcoat (1956), Something Wicked This Way Comes (1983), The Great Gatsby (1974), Our Mother's House (1967) மற்றும் The Lonely Passion of Judith Hearne (1987)..பல நல்ல படங்களை திரை ரசிகர்களுக்கு வழங்கிய இவர் பிப்ரவரி மாதம் 26 தேதி 1995 - ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மறைந்தார்..

==============================    

http://2.bp.blogspot.com/-he_4yiq9L34/TqL6rJ44wAI/AAAAAAAAAW4/Ag6shLxko1M/s320/innocents-title-still.jpg

  இதுவரை பார்த்தவற்றில் பிடித்தமான ஹாரர் படங்களில் இந்த படத்துக்கு ஒரு பெரிய இடமுண்டு என்பதில் சந்தேகமில்லை..நள்ளிரவில் பார்த்து ரசித்த படம்..ஒரு மிகச் சிறந்த சைக்கலோஜிக்கல் ஹாரர் படம்..60 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த ஒரு கல்ட் கிளாசிக்..கண்டிப்பாக அனைவரும் பார்த்தே தீரவேண்டிய ஒரு மாஸ்டர்பீஸ்..

MY RATING : 8/10
ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.உங்கள் கருத்துக்களை தவறாது தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்...மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை..
நன்றி..வணக்கம்.
http://signatures.mylivesignature.com/54489/320/CCFB420DB08BE4C219C4BEB9D6AB67C5.png


1 comments:

முதல் பதிவினை தொடங்கியுள்ளீர்கள்... அருமை..

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More