ஹாலிவுட் சினிமா : The Karate Kid - 2010 : நம்ம ஜேடனுக்கு ஜாக்கி சொல்லித்தரும் குங்

 கடந்த சில நாட்களாகவே, சென்ற வருடம் வந்து வெற்றியடைந்த சில குறிப்பிட்ட மிஸ் பண்ணிய படங்களை ஒரு அல்சு அலசி வருகிறேன்..அதில் மனதோரம் தங்கிய சில படங்களையே எழுத முயற்சித்து வருகிறேன்.அந்த வரிசையில் இன்றைய"பார்வை"


தெ கெராத்தே கிட் - வில்ஸ் ஸ்மித் மகனும் தற்பொழுது அமெரிக்காவில் சக்கை போடு போடும் பையனான ஜேடன் ஸ்மீத்தும் நம்மை குங்பூ மன்னர் ஜேக்கிச்சானும் இணைந்து கலக்கிய படம்.1984 - ஆம் ஆண்டு வெளிவந்த படத்தின் ரீமேக்கான இதை Harald Zwart  இயக்க, கத மற்றும் திரைக்கதையை முறையே Robert Mark Kamenமற்றும் Christopher Murphey எழுதி இருக்கின்றனர்.டைட்டானிக் படத்துக்கு இசையமைத்த ஜேம்ஸ் ஹார்னரே இதற்கும் இசையமைத்துள்ளார்.
  கதை ரொம்ப சிம்பிள்..
                     தன் தாயின் வேலை மாற்றம் காரணமாக சைனாவுக்கு வருகிறார் Dre Parker (அதான் நம்ம ஜேடன் ஸ்மித்) என்ற 12 வயது.வந்தவுடனே Girlfriend காரணமாக பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் தகராறு ஏற்படுகிறது.அதுவும் இவர்கள் எல்லோரும் குங்பூ பழகி வருபவர்கள் (செமததயா..வாங்குவாருல)..இதையே மனதில் வைத்துக்கொண்டு இவர்களுக்குள் பிரச்சனைகள் பிறக்கிறது..டிரேவை ரகளை செய்யவும் (Bully) ஆரம்பிக்கின்றனர்..ஒரு நாள் இந்த பிரச்சனை கடுமையாக உருவாக..அப்பதான் வந்து காப்பத்துறாரு நம்ம குங்பூ மன்னரான Mr. Han (வேற..யாரு..நம்ம ஜேக்கிதான்).இவரு டிரேவின் வசிப்பிடத்தில் வேலை செய்பவர்.பிரகுஎன்ன, இருவரும் நண்பர்கள் ஆகின்றனர்..அந்த பசங்களிடமிருந்து காப்பாத்த நிறைய காரியங்கள் பண்றாரு (ரொம்ப இல்ல..ஒரு ஒன்னு..ரெண்டு.அட மூனுன்னு வச்சிக்கங்க.)..அதுல ஒன்றுதான் அந்த பையனுக்கு குங்பூ கற்று தருகிறார்.மேலும், இவர்களுக்குள் சமாதானத்தை ஏற்படுத்த..டிரேவை ஒரு குங்பூ போட்டிக்கும் தயார்ப்படுத்துறாரு.
  அப்பிறமென்ன படத்த பாருங்க.நல்ல படம்.குடும்பத்தோட சந்தோஷமா பார்க்கலாம்.(மேல சொல்லாத நிரைய விஷயங்கள் படத்துல செம்ம கலக்கலா).படம் பார்க்கிலனா கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி இலவச தரவிறக்கம் போடுங்க..

The Karate Kid - 2010 திரைப்படத்தில் சில சுவாரஸ்யங்கள் :

அருமையான படம் - அதுல ஆணிவேறா இருக்குறது ஜாக்கி மற்றும் டிரெவின் நடிப்பும்தான்..என்னமா நடிக்கிறாரு நம்ம வில்ஸோட சின்ன ஸ்மித்.//இவரும் இவரது தந்தையும் இணைந்து நடித்த The Pursuit of Happyness படத்தை பார்த்திருக்கிறேன்..அதுவும் ஒரு நல்ல படம்.ரெண்டு பேருமே பிச்சு உதரிப்பாங்க//
    இதுலயும் வயதுக்கு மீறிய அழகான அருமையான நடிப்பு (பின்ன என்ன..கிஸ்ஸேல்லாம் பண்றாரு).ஒவ்வொரு காட்சிகளிலும் நல்ல நடிப்பையும் எக்ஸ்பிரஷன்களையும் ரொம்ப தெளிவாக வழங்கிருக்கின்றார்.
==============

அடுத்து நம்ம ஜாக்கி - //இவர பத்தி தொடர்ப்பதிவே போடலாம்..அந்தளவுக்கு என்னில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியவர்.சின்ன வயதில் யாருன்னே தெரியாமல் என்னை ஈர்த்தவர்கள் மூவர்தான்.ஒன்று ரஜினி ரெண்டாவது அர்னால்ட் கடைசியாக ஜாக்கி..கதையே புரியாமல் தொலைகாட்சியில் டிரங்கன் மங்க்கி படங்கள் பார்த்துட்டு எத்தனையோ முறை சண்டை போட்டிருக்கிறேன் (தனியாதான் ஒரு விளயாட்டாக)கராத்தே கற்றுக்கொள்ல வேண்டும் என்ற ஆசையும் இவரது படங்களின் வழி வந்ததே.//   
    கல கலவென சிரிக்க வைத்து தன் விறு விறுப்பான சண்டை காட்சிகளால் ரசிகர்களை கவரும் ஜேக்கி, இந்த படமுழுவதும் சாதுவாகவும் அமைதியாகவுமே வந்து தன்னுடைய நடிப்பை ஆழமாக வழங்கி இருக்கிறார்..
=====================

ஜாக்கியும் ஜேடனும் முதலில் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் யாவுமே அசத்தலாக இருக்கும்..பாத்ரூம் சரியில்லை என்று இவரை கூப்பிட வரும் காட்சிகள் (ஒரு ஈயையோ, கொசுவையோ அடிக்கிற விதம் பாருங்க) அனைத்தும் கண்டிப்பாக அனைவரையும் கவரக்கூடியவையே.
==========================

விமர்சன ரீதியில் பெரிய அளவில் பெயர் எடுக்காவிட்டாலும், வசூலில் சுமார் 350கோடிக்கு மேல் வாரி இறைத்துள்ளது.படத்தின் பட்ஜெட் 40 கோடிதான்.
==============================

டிரேவின் பெண் தோழியாக வரும் அந்த சீன பெண்னின் நடிப்பும் நன்றாக இருக்கும்..அழகாகவும் இருக்கிறார்.
====================================

படத்தின் இறுதி காட்சிகள் அனைத்தும் கலக்கள்..ஆனா..கடைசி வரைக்கும் ஜேக்கி சீரியஸா (வழக்கம்போல சிரிச்சிகிட்டே) ஒரு சண்டக்கூட போடல என்கிறது சிறியளவில் ஏமாற்றதை எனக்கு தந்தது.அந்த பசங்களோட கோச்சுக்கு ஒரு குத்துவிட்டுந்தாவது (இந்தாளு..அதான்..இந்த கோச்சு ரொம்ப கடுப்பேத்துராறு மை லோர்ட்..ஹி.ஹி) கொஞ்சம் திருப்த்தியா இருந்துருக்கும்.இருந்தாலும், அது படக்கதைக்கு தேவை இல்லாத ஒன்றே.
==============================================
  எப்படி இருந்தாலூம், விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் தாரளமாக சந்தோஷத்துடன் பார்த்து ரசிக்க ஏகுவான படம் இந்த கராத்தே கிட்.கண்டிப்பாக அனைவரும் பார்க்கலாம்.

My Rating : 7/10


கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிகவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை

நன்றி..வணக்கம்     

2 comments:

நண்பரே உங்கள் பதிவுகளின் இறுதியில் உங்கள் தளத்திற்கான முகவரியை பதிவு செய்வதன் மூலமாக உங்கள் தளத்திற்கு வருகையாளர்களை அழைத்துச்செல்வீர் என்பதை மறவாதீர்கள்..

மேலே போஸ்ட் கோட் பக்க மெனு வேலை செய்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்களேன்...

நண்பரே, இப்பொழுதுதான் பார்த்தேன்.போஸ்ட் கோட் வேலைசெய்கிறது..அடுத்த பதிவில் என் முகவரியுடன் இதையும் இணைக்கிறேன்.நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More