போய்வா 2011

தூக்கம் கலைந்து
துயிழெழும் நேரம் வந்த
கனவினைப் போல
கடந்து சென்றாயே!
பல கனவுகள்
பல சபதங்களுடன்
உன்னை தொடர ஆரம்பித்தேன்!

என்னோடு நீயிருந்த 
365 நாட்களில்
இன்பத்தில் சிலநேரம்
துன்பத்தில் சிலநேரம்
ஏற்றத்தில் சிலகாலம்
இறக்கத்தில் பலகாலம்
அடடா என்னே
நீ கொடுத்த அனுபவம்!

கனத்த இதயத்துடன் சில கணங்கள்
இறகைப்போலே  சில கணங்கள்
கண்ணீருடன் சில நேரம்
கவிதையுடன் சில நேரம்
சொல்லிய வார்த்தைகள்
சொல்லாமல் சென்றவர்கள்
திரும்பிப் பாக்கையில்
எத்தனை பதிவுகள்
என் பதிவேட்டில்!
ஓடிக்கொண்டே இருந்துவிட்டாய்.

இந்த 365 நாட்கள்
என் காதேரம், கனவுகள்,
தனிமை, கவிதை
கண்ணீர் என
என்னோடு இருந்தாய்!
இப்போது செல்லப் போகிறாய்!
மீண்டு வரமுடியாத
இடத்திலிருந்து வந்து
திரும்பிபெற முடியாதவற்றை
தந்துவிட்டு செல்கிறாய்!
உன் காலடி தடம்
என் நெஞ்சில் மாறா இரனமாய்இருக்க
என்னை விட்டு செல்கிறாய்!
பரவாயில்லை!
போய்வா நண்பனே!
போய்வா 2011!!



--

Regards
Marc
http://sekar-thamil.blogspot.com

4 comments:

சிறப்பான வரிகள் தோழா..

சிறப்பான வரிகள்

நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.

சொல்லிஅனுப்ப மறந்துவிட்டேன் நினைவுபடுத்தியதற்க்கு நன்றி. நல்லபடியா2011போய்ட்டு2012வாங்க...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More