ஆட்டத்தை நிறுத்தினால் என்ன குடியா மூழ்கிவிடும்?

ஆட்டத்தை நிறுத்தினால் என்ன குடியா மூழ்கிவிடும்?
'ஃப்ளாஸ் மோப்' என்று கூறி ஆட்டமாம் பாட்டாம்
அதுவும் கல்கத்தாவிலாம்! இவர்கள் போடும் ஆட்டத்தில் வீழ்வது
இந்த இளைஞர்கள் மட்டும் அல்ல
நம் நாட்டு கலாச்சாரமும்தான்! அதோடு
பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளமும்தான்!
ஒருவாரம் முன்புதான் இங்கு கள்ளசாராயத்தால் வீழ்ந்த
உயிர்கள் இருநூறுக்கு  மேல்!
இரு வாரம் முன்பு மருத்துவமனையின் அலட்சியத்தால் வீழ்ந்த
உயிர்கள் நூற்றுக்கு மேல்!
அந்த மக்களை இழந்த சொந்தங்களின் வாழ்வோ விடிகிறது
தினமும் கண்ணீரில்!
அந்த மக்களின் சொந்தங்களைப் பார்த்து நாலு ஆறுதல்
வார்த்தைகள் கூட கூற வேண்டாம்!
அந்த மக்களின் இழப்புக்கு நஷ்ட ஈடு கேட்டு அரசிடம்
போராடக் கூட வேண்டாம்!
இது போன்ற கூத்துக்களை சற்றைக்காவது நிறுத்தினால் என்ன?
குடியா மூழ்கி விடும்!(  ஒரு சுவாரசியாமான பின்னுட்டங்களை பதிவர்

சுவனப்பிரியன் பக்கத்தில் பார்த்தோம்.  எனவே இவரின் அனுமதி பெறாமலேயே அந்த பின்னூட்டத்தையும் உங்கள் பார்வைக்கு அழைத்து  வருகிறோம் )

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More