பெண்ணும் பொன்னும்

 

மோகன் பக்கம்

பெண்ணும் பொன்னும்

பெண்ணும் பொன்னும்


முத்துக்களோ கண்கள் என்றான்
தித்திப்பதோ கன்னம் என்றான்
பல்வரிசை பவளம் என்றான்
ஒற்றை நரை வெள்ளி என்றான்
அங்கமெல்லாம் தங்கமென்றான்
தீட்டாத வைரமென்றான்
திகட்டாத அமுதமேன்றான்
மேலுதட்டின் மச்சம் பார்த்து
அதிஷ்ட தேவதை கொட்டும் என்றான்
என் சின்னச் சிரிப்பில் விழும்
கன்னக்குழி கூட
பணக்குழியாம் - அவன் சொன்னான் .
சொன்னதற்க்கே சொக்கிப்போய்
அவன் குழியில் நான் விழுந்தேன் .
மனசெல்லாம் சிறகடிக்க
மணமேடையில் நான் இருக்க ...
முப்பது பவுன் போட்டால்தான்
முதல் முடிச்சே நான் இடுவேன்
இல்லையேல்
இந்த மூதேவி முகத்தினைப் போய்
எவன் பார்ப்பான் என்றுரைத்தான். !
மோகன்....

பின்குறிப்பு ...
என்னடா இவன் புதிதாக கவிதை வேறு எழுத ஆரம்பித்துவிட்டானா என அதிர்ச்சி அடையாதீர்கள் .சில ஆண்டுகளுக்கு முன் வாலிப வயதில் இது மாதிரி கொஞ்சம் கிறுக்குவேன்.(இப்போதும் வாலிபம் தான். அது முன்பகுதி, இது பின்பகுதி.) நான் பிளாக் ஆரம்பித்ததே என் கவிதைகளை எழுதுவதற்குத்தான். ப்ளாக்கின் ஆரம்ப பகுதிக்கு சென்று பாருங்கள் தெரியும். இனி நேரம் இருக்கும்போது ஒவ்வொன்றாய் பதிகிறேன்.சரி,இந்த கவிதை எப்படி இருக்கு... கருத்து சொல்லுங்கப்பா...!

5 comments:

மனசெல்லாம் சிறகடிக்க
மணமேடையில் நான் இருக்க ...
முப்பது பவுன் போட்டால்தான்
முதல் முடிச்சே நான் இடுவேன்

வரதட்சணை வாங்குவதும்
கொடுப்பதும் குற்றம்..

போலீஸிற்கு தகவல் கொடுங்க..

பின்னூட்டமே ஒருவரை உற்சாகப் படுத்தும்... பதிவருக்கு உற்சாகம் கொடுப்போம்..

அற்புதம் நண்பரே!

காதலிக்க தைரியம் உள்ளவர்களுக்கு
வரதட்சணையை எதிர்த்திட தைரியம் உண்டா?...........

உனக்கு வேண்டாமுன்னா ஏங்கிட்ட சொல்லாம்ல,புள்ளஎன்னா அழகாஇருக்கு பவுனுவேனுமாமுல்லபவுனு.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More