நீங்கள் தரும் கடன் எங்களுக்கு தேவையில்லை...

  எங்கள் உடம்பில் சிறு குறை இருப்பதனால் எங்களை உதாசினம் செய்கின்றீர்களா..? என நெஞ்செல்லாம் காயங்களோடு, பரிதவித்து கேட்கும் எம் மாற்றுத்திறனாளிகளின் இளைஞர் கூட்டம் இனி எவர் முன்னும் தலைகுனிந்து, கைநீட்ட தேவையில்லை....

  டிசம்.16,11. இன்றைய தினத்தில் தினமலர் நாளிதளில் ஒரு வருத்தமிகு செய்தியை காண நேரிட்டது. பார்க்க..

   மாற்றுத்திறனாளிகளுக்கன சிறப்பு கடன் முகாமானது மத்திய மாநில கூட்டுறவு வங்கி மற்றும் புதிய வாழ்வு திட்டத்தின் சார்பில் விருதாச்சலத்தில் நேற்றைய தினம் நடந்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் படியேறி வருவது எவ்வளவு சிரமம் என்பதினைக்கூட மனதில் கொள்ளாமல் வெறும் கண்துடைப்பு முகாமாகவே சிறப்பு கடன் முகாமானது செயல்பட்டிருக்கின்றது. உங்களுக்கு இது பழகிய விசயம் தான். எமது இளைஞர் கூட்டம் வெறும் கைகட்டி வேடிக்கை பார்க்கத்தான் உபயோகம் என்று எண்ணிக்கொண்டு மெத்தனம் காட்டிவருவது, உங்களுக்கெல்லாம் கேலியாகத்தான் தெரியும். 

எதற்காக இந்த ஏளனம் எங்கள் மீது..? 

ஒட்டுமொத்த இளைஞர் கூட்டமும் உங்கள் பார்வைக்கு விடலைகள் தானா..? 

எந்த ஒரு அரசு அலுவலகமோ, வங்கியோ ஏளனம் அல்லாத பார்வைகளால் எங்களை பார்த்தது உண்ட..? ஏதோ ஒருசிலர் செய்யும் நற்செயல்களால் தான் பெறும்பாலானோர் புதையுராமல் தப்பித்துக் கொண்டு இருக்கின்றீர். இந்த நிலையே இனி வரும் காலங்களில் நிலைத்திருக்கும் என்று தவறாக எண்ணி விடாதீர்கள்.  உங்கள் கரங்களால் வழங்கிடும் கடன் மட்டும் என்ன எங்களை வாழவிட்டு விடுமா..?

    இன்று எங்களுக்குள் புதிய இரத்தம் பாய்ந்து இருக்கின்றது. இனி வரும் பொன் நாட்களில் எங்கள் தன்னம்பிக்கையினூடே எங்களால் தலை நிமிர்ந்திட முடியும். அனைத்து அரசு துறைகளிலும் சிந்தித்து திறம் பட செயல்படும் நாட்களுக்காக எமது சக்தி மிகுந்த இளைஞர் கூட்டம் மாறப்போகிறது.

உங்கள் கடன் எங்களுக்கு தேவையே இல்லை...

புதியதாக சிந்திக்க நாங்கள் தயாராகிகொண்டிருக்கின்றோம். அன்பும், கடவுளும், இணையமும் எங்களை வழி நடத்தும்..


1 comments:

புதியதாக சிந்திக்க நாங்கள் தயாராகிகொண்டிருக்கின்றோம். அன்பும், கடவுளும், இணையமும் எங்களை வழி நடத்தும்..

nice

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More