இது சரிதானா..? வலைப்பூ பற்றி கருத்து சொல்லுங்க...


     சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் தளத்தில் வ்லைப்பூவிற்கு அடிமையாகும் சமூகம் என்கின்ற அடிப்படையில் ஒரு விழிப்புணர்வு பதிவை இட்டிருந்தார் (பார்க்க). அந்த தளத்தில் அதற்கு எதிர்மறையான கருத்துக்கு அவர் மிகவும் நாகரீகமான பதில் செய்திருந்ததின் மூலம் நம்மை கவர்ந்திருந்தார். அந்த பதிவுக்கு நாமும் பின் வருமாறு பின்னூட்டம் செய்திருந்தோம். அவை உங்கள் பார்வைக்கு..


எமது பின்னுட்டம்..


   சமூக வலைத்தளங்களுக்கும், வலைப் பதிவிற்கும் வேறுபாடுகள் இருக்கின்றது நண்பரே.. இங்கே ( வலைப் பதிவில் ) ஆர்வம் செலுத்தும் அனைவரையுமே அடிமைகளாக சித்தரிப்பது தவறாகவே தோன்றுகிறது. தங்களது நேரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் ஒரு விளிப்புணர்வு பெற்ற சமூகத்தையே நாம் உருவாக்குகின்றோம். 

   சமூக தளங்களில் நல்ல நண்பர்களை பெறுகின்றோம் என்பதினை காட்டிலும் அதை தவறாக உபயோகப் படுத்தும் கூட்டமே அதிகம்.

   இங்கே ஆர்வத்தால் கட்டிப்போட்டிருக்கும் எவரும், தங்கள் ஆதங்கத்தை எப்படியும் தங்கள் பதிவுகளில் காட்டியிருப்பார்கள். நிச்சயமாக சொல்ல முடியும் வலைப்பதிவு செய்யும் 100 ல் 95 பேர் நிச்சயமாக சமூகத்தின்பால் கோபம் அல்லது அக்கரை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் சமூக வலைத் தள உறுப்பினர்களில் பெறும்பாலோனோர் தங்களின் பொழுதுபோக்கு அல்லது காதல், காமம் போன்ற கோட்பாடுகளில் அதிகம் கவனம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

   நெஞ்சைத்தொட்டு சொல்லுங்கள்.. ஸ்பெக்டரம் பற்றியும் அன்னா ஹசாரே பத்தியும் ஏன் இணையத்தின் பயன்பாடு பற்றியும் கூட நமக்கெல்லாம் எந்த செய்தித்தாள்கள் அல்லது ஊடகங்கள் தெரிவித்தன..? வலையில் தேடிப்பாருங்கள் வலைப் பதிவுகளின் சாதனைகள் தெரியும் 


சமூக வலைத்தளங்களை நாம் குற்றம் சொல்லவில்லை.

எதையுமே ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் ஆபத்து இல்லை.

கத்தியானது அதை கையாளுபரை கொண்டே வாழ்கிறது என்பதை மறுக்க முடியாது அல்லவா..?

ஒரு ஆரோக்கியமான சமூகம் விளித்தெள இன்றைய கணினி யுகத்தில் வரப்பிரசாதமே வலைப்பூ.

   சிலர் வலைப்பூக்களையும் மற்ற சமூக வலைத்தளங்களைப் போல் உபயோகம் செய்வதையே கண்டிக்கின்றோம்.

இருப்பினும், தங்களின் வேலை நேரம் போக மீதி நேரங்களில் வலைப்பதியுங்கள் நண்பர்களே

   தமிழ் பதிவர்களும் தொழில்முறை பதிவர்களாக உருவாகும் காலம் நெருங்கி வருகின்றது என்பது நினைவிளிருக்கட்டும்.

10 comments:

இருப்பினும், தங்களின் வேலை நேரம் போக மீதி நேரங்களில் வலைப்பதியுங்கள் நண்பர்களே//


ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து நண்பரே

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

எங்களின் சிறிய முயற்சியில் பங்களியுங்கள் நண்பரே..

தங்களின் கருத்தினை ஆதரிக்கிறேன் தோழா உண்மைதான் இந்த புளக்கரினால் பல்வேறு விடயங்களையும் நட்பினையும் அடைகிறோம் எமது அனுபவங்ளை ஆக்கங்களை பகிர்கிறோம் அது என்றும் சிறப்பே

வலைதளத்தினால் எத்தனையோ நட்புகள் நல்லவிசயங்கள் பகிர்ந்துகொள்ளல். மற்றும் நமது திறமைகளை உலகு வெளிபடுத்த ஒரு சந்தர்பம் என நிறைய இருக்கிறது.

அதே சமயம் அதிலேயே இருந்துவிடாமல் முதலில் குடும்பம் அடுத்து மற்றவையெல்லாம் என்ற நோக்கில் சென்றால் பிரச்சனையில்லை..

நன்மையும் தீமையும் நாம் கையாளும் விதத்திலேயே இருக்கிறது எனபது எனது கருத்து..

தொடர்ந்து எழுதுங்கள்..

http://niroodai.blogspot.com..

நிச்சயமாக...

பகிர்வுக்கு நன்றி...

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை நண்பரே... பகிர்வுக்கு நன்றி...

இன்று என் பதிவு:-- வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய முழுமையான அலசல்...

தங்களின் கருத்தினை ஆதரிக்கிறேன் தோழா உண்மைதான் இந்த புளக்கரினால் பல்வேறு விடயங்களையும் நட்பினையும் அடைகிறோம் நமது அனுபவங்ளை ஆக்கங்களை பகிர்கிறோம் அது என்றும் சிறப்பே..தோழர் ஹாஷிம் சொன்னது உண்மையே ..

நிச்சயாமாக நமது கரங்களால் இணையத்தை பயன்படுத்துவோம்,, இனி வரும் சமூகத்தை பலப்படுத்துவோம்..

பகிர்வுக்கு நன்றி...

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More