நானும் இப்படிக்கு நல்லவனும்  எங்கள் கண்முன் கண்ட காட்சிகளை எழுத்தின் வாயிலாக உங்கள் கண்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் அமைக்கப் பெற்றதே நானும் இப்படிக்கு நல்லவனும் பகுதி ஆகும் .

 ஒரு சிறு முன்னுரை :.

  மிகச்சிறந்த நகைச்சுவை பண்பாளரும், சமூகத்தின்பால் சூடான பார்வையையும் கொண்டாவர் இப்படிக்கு நல்லவன் ஆவர். ( இவரின் கட்டுரைகள், கதைகள் ஆனது கல்கி, வாரமலர், ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் மற்றும் இந்திய டுடே போன்ற ஒரு சில ஆங்கில பத்திரிக்கைகளிலும் வெளிவர வேண்டுமென ஆசைப்பட்டுக்கொண்டிருந்தார்.      ஆனா எதுவுமே வெளியாகவில்லை. ) இவர் எனது பால்யபருவத்தில் இருந்து நெருங்கிய நண்பராக இருந்தவர் . எங்கள் பள்ளிப் பருவத்தில் நானும், இப்படிக்கு நல்லவனும் சேர்ந்து எழுதி, இயக்கி, நடித்த நாடகங்கள் எங்கள் பள்ளியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு, எங்களுக்குள்ளும் ஏதோ ஒரு பிரம்மாஸ்த்திரம் இருக்கப் போகிறது என்பதை காட்டியது.

cpede.com உருப்பெறும் போதே நண்பரான, இப்படிக்கு நல்லவனை அழைத்து , உங்கள் சேவை cpede.comக்கு தேவை என்று சும்மா உசுப்பேத்தினோம்.  ( ஆனா சும்மா சொல்ல கூடாது, பரவாலிங்க எத சொன்னாலும் நம்பினாருங்க.. அவரு ரொம்ப நல்லவருங்க...)

    நண்பா.., உங்கள் சிந்தனைகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கேட்டதுமே,  நிச்சயமா உங்களுடன் கைகோர்த்து பணியாற்ற வருகிறேன் என்று எங்களுக்கு உற்சாகத்தை கொடுத்தார். அவருக்கு cpede.com குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..

நானும்,  இப்படிக்கு நல்லவனும் பகுதியில் நீங்கள் வாசிக்க இருப்பவை,,
  • சமூகம், அரசியல், நகைச்சுவை, குடும்பம், காதல் என அனைத்து தரப்புகளையும் எங்களது விவாதத்தால் விவரிக்க உள்ளோம்.
  • முடிந்த வரையில் சுவையான பதிவுகளை உங்கள் கண்களுக்கு விருந்தாக்குகிறோம்.
  • இதில் தனிப்பட்ட வகையில் யார் மனதையும் புண்படுத்தும் வண்ணம் விவாதங்கள் அமையாது. எங்கள் பார்வையில் படும் குற்றங்களையும், அலட்சியங்களையும் எங்கள் மனதில் எழும் கருத்துக்களையுமே விவாதிக்க உள்ளோம். 
  • குறைகளையும் நிறைகளையும் பின்னூட்டம் வாயிலாக அளியுங்கள்.
  • இந்த நானும், இப்படிக்கு நல்லவனும் பகுதியானது ஒவ்வொரு வாரமும் சிறப்பு பகுதியாக வெளிவர உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.

அறிமுக குறிப்பு : இங்கு நானும் என்பவர் நான் தான். இப்படிக்கு நல்லவன் என்று அழைக்கப்படுபவர் இப்படிக்கு நல்லவன் தானுங்க..

முடிந்த வரை சுவை தருவோம்..
முடியாத வரை சுவை தருவோம்...

உறுதிகளுடன்...

நானும்
துணைக்கு : இப்படிக்கு நல்லவனும்.

5 comments:

முடிந்த வரை சுவை தருவோம்..
முடியாத வரை சுவை தருவோம்...


படிது ரசிக்க காத்துகிட்டே இருக்கோம் வாங்க.

நன்றி அம்மா..

வாங்க ரசிக்க நாங்கள் இருக்கிறோம்..!

இந்த உற்சாகமே எங்களின் மருந்து ஆகும்..

தம்பி,அப்படியே எனக்கு ஒரு ஆறுசெட்டு
போண்டா,ஒரு காபி சொல்லுங்க,நானும்
இங்கதான்இருக்கேன் தெரியும்ல. குஜிலிகுருஜி.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More