சைஸ் ஜீரோனா இதுதானா..? (பெண்களுக்கு மட்டும் )

  ஒரு சில இணைய தளங்களில் கண்ட விளம்பரங்களை தெரியாமல் (தெரிஞ்சுகனும்னுதான்..)  சொடுக்கி, பார்வையிட்டதன் பயனாக நான் தெரிஞ்சுகிட்டது என்னன்னா..?

ஏன் அவசரப்படுரீங்க.. சொல்லறதுக்கு தானே வந்திருக்கிறேன்..
ம்ம்..

   அதாவது இணைய பெருமக்களே இங்கே நான் ஜீரோ சைஸ் அப்படின்ன என்னனு தெளிவா சொல்லிடுரேன்.. ( தயவு செஞ்சு ஆண்கள் படிக்காதீங்க... அய்ய்... )

     பொதுவாக பெண்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்துவது அதிக எடை போட்டுவிடும் பிரச்சனைதான்.. ( நம்ம ஜோ, நமிக்கா எல்லோரும் இத பத்தி கவலையே பட்டதில்லை)


  அமாங்க,, சைஸ் ஜீரோ என்பது பெண்களுக்கான உடல் அமைப்பை ஒல்லியாக நளினமாக வைத்திருப்பதற்கான உணவு பழக்க வழக்க முறைகளை குறிக்கிறது..

  கடந்த சில வருடங்களாக வெளி நாடுகளில் இருந்த இந்த போக்கானது, இன்று பரவலாக நமது பெண்களிடமும் காணப்படுகிறது.

                               நீங்க சைஸ் ஜீரோ ஆகனும்னா.,

    31.1" அங்குலம் இடுப்புக்கு மேலேயும், இடையின் அளவு 23" அங்குலம் மற்றும் இடுப்பின் அளவு 32" அங்குலமாகவும் இருக்க வேண்டும். இத்தகைய உடல்வாகினை நீங்கள் பெற்றிருந்தால் சைஸ் ஜீரோனு வெறும் பெறுமை மட்டும் பட்டுக்கொள்ளுங்கள். 

    தினமும் சுமார் 500 கலோரிகள் அடங்கிய உணவு எடுத்துக்கொண்டு ஒரு இரண்டு மணி நேரம் உடற்பயிற்சிகள் செய்தீர்களானால் நிச்சமாக உஙகள் எடையானாது சைஸ் ஜீரோவிற்கு மாறிவிடும்.

மேலும் சில விசயங்களையும் உடன் முயற்சியுங்கள்

  • பழங்கள், பச்சை காய்கரிகள், தானிய வகைகள் அடங்கிய உணவை சமச்சீராக எடுத்துக்கொள்ளுங்கள்
  • பருப்புவகைகள், மீன் போன்றவற்றை உணவில் அளவாக சேர்த்துக்கொள்ளுங்கள்
  • பாஸ்ட் புட் மற்றும் எண்ணை பலகார வகைகளை முற்றியுமாக தியாகம் செய்ய வேண்டும்
  • இளநீர் சாப்பிடுங்கள் 
  • பால் சம்பந்தமான உணவு வகைகளை தவிற்ப்பது நல்லது
  • அரிசி உணவுக்கு பதிலாக சப்பாத்தி சாப்பிட்டு பழகுங்கள்
  • முட்டைக்கோஸ் மற்றும் காய்கரிகள் சூப் சாப்பிடுங்கள்
  • சாக்லேட், கேக் மற்றும் ஐஸ்கிரீம் உண்பதை குறைக்க வேண்டாம் நிறுத்திவிடுங்கள்
அவ்வளவு தாங்க இதை மட்டும் நீங்க கடைபிடிங்க போதும்... நீங்க சைஸ் ஜீரோ தான்..

   ( குறிப்பு : சைஸ் ஜீரோவை விரும்பும் பெண்கள் அதற்காக மிகவும் மெனக்கெடாதீர்கள். இயற்கையாய் அமைந்துள்ள அழகே நல்லது மற்றும் மிகவும் அழகானது ஆகும். வீனான ஆசைகளை மனதினில் பதித்து உங்களை வருத்திக்கொள்ளாதீர்கள். சைஸ் ஜீரோ செய்யும் பெண்கள் தங்கள் உடல் நலனை கெடுத்துக்கொள்கிறார்கள் என்றதொரு ஆய்வரிக்கை தற்சமயங்களில் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.. ) 

    உங்கள் மன எண்ணகளே உங்கள் உடல் அழகையும் தீர்மானம் செய்யும். 

2 comments:

உங்க உடல்அழகே என்மனத்தின் எண்ணங்களை தூண்டுகிறது.ஹி...ப்போடஅளவாஇது? சொல்லவே இல்ல.ஹி...ஹி...குஜிலிகுருஜி.

குறிப்புக்கு கீழ் இருக்கும் அந்தக் கடைசி வரியை படித்தவுடன், அடடா நாமும் அழகுதான் என்று தீர்மானித்து விட்டேன்!
எதை சாப்பிட்டாலும் அளவுடன் சாப்பிட்டு, உடற்பயிற்சியும் செய்தால் போதும். ஆரோக்கியம்தான் அழகு!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More