இரண்டு அடியில் இவ்வளவு சாதனையா..?

   நேர்மறையான கண்ணோட்டம் கொண்டவர்களை cpede.com என்றுமே வரவேற்க தவறுவதில்லை.  அந்த வரிசையில் தனது உயரம் வெறும் இரண்டடி என்று இருந்தாலும் மனதளவில் சற்றும் எந்தவித தளர்ச்சியும் இன்றி இன்று 2011 ஆம் ஆண்டிற்கான கின்னஸ் சாதனை பட்டியில் தனது பெயரை பதியவைத்திருக்கும் உலகின் மிகச்சிறிய பெண்மணி ஜோதி ஆம்ஜி ஆவார்.


ஜோதி ஆம்ஜி..

நாக்பூரை சேர்ந்த ஜோதி ஆம்ஜி நேற்றைய தினம் தனது மகிழ்சிகரமான 18 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். என்றுமே சுறு சுறுப்பாக இருப்பதையே ஜோதி ஆம்ஜி விரும்புவார். தன் சகாக்களோடு அரட்டையையும், விளையாட்டையும் தொடர்வார். 

சிரித்த முகத்துடன் ஜோதி ஆம்ஜி இதைப் பற்றி கூறுகையில்..

    என்னை முதலில் பார்ப்பவர்கள் என் வயதை கேட்டதும் மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள்.  எனது மூன்றாவது வயதில் எனது வளர்ச்சி மற்ற குழந்தைகளை போல் இல்லை என்பதை உணர்ந்தேன். 
    என் வயதை ஒத்த, என்னைவிட பெரியவர்களை காணும்போது அவர்களை விட பெரியதாக என்னை உலகிற்கு காட்ட வேண்டும் என்பதையே நான் விரும்புவேன்.  நான் சிறிய அளவு உடலமைப்பை பெற்றதற்காக என்றுமே பயப்பட்டது இல்லை.. நான் இதையே மிகவும் விரும்புகிறேன்.  ஏனென்றால் எனக்கு எப்போதுமே விழிப்பாக இருக்கும்படி, மற்றவர்களின் கவனங்கள் மூலமாக என் மனது எப்போதும் என்னை அறிவுறுத்துகிறது.

    நான் மற்றவர்களை போல தான் இருக்கிறேன். என்னால் அழகிய காட்சிகளை காண முடிகிறது, இனிமையான இசையை ரசிக்க முடிகிறது, சுவையான உணவையும் வாழ்வையும் என்னால் உணரமுடிகிறது எதற்காக வருத்தப் பட வேண்டும் என்று சிறிய முகத்தில் முத்துக்கள் போன்று வார்த்தைகளை கொட்டுகிறார்.

    இதோடு மட்டும் இல்லிங்க,, சேனல் 4, மற்றும் நேசனல் ஜியோகிராபி போன்ற சேனல்களிலும், ஒரு ஜப்பானிய திரைப்படத்திலும் தோன்றியுள்ளார் என்பது இவரின் பல்வேறு சிறப்புகள். 

பாப் உலகில் ஒரு தனி இடத்தையும், திரையுலகில் ஒரு கலக்கு கலக்குவேன் என்றும் தலை நிமிர்ந்து சொல்கின்றார்,,
  இரண்டு அடி மட்டுமே உயரம்,,, எண்ணத்தால் நான் இமயத்தையும் தொடுவேன் என்கின்ற இவரின் தைரிய சிந்தனையின் மத்தியில், ஒரு சிறிய தோல்விகளையே பொறுத்துக்கொள்ள இயலாமல் வாழ்வை புறக்கனிக்கும் ஒரு சில இளைஞர்களை என்ன சொல்ல..? 

திருக்குறளையும் மிஞ்சி நிற்கிறது இவரின் தன்னம்பிக்கை பாடம்...

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More