சரியான வலை முகவரி ( Domain ) தேர்ந்தெடுக்கனுமா..?

    பெரும்பாலனோர் தங்கள் வலைத்தளத்தின் முகவரியை தேர்ந்தெடுப்பதில் போதுமான ஆர்வம் காட்டுவதில்லை. அத்தகைய பதிவர்கள் தங்கள் தளத்தில் சிறப்பான பதிவை எழுதியிருந்தாலும், தொடர்ந்து தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைப்பதில் தவறு செய்கின்றனர்.


  ஒரு சிறந்த வலை முகவரியை ( DOMAIN ) தேர்வு செய்வதில் கீழ்கண்ட காரணிகளை நினைவில் கொள்ளுங்கள்

  •       முதலில் உங்களது தளம் எத்தகையதாக அமைப்பெறுகிறது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கு தொடர்பான பெயரை தேர்வு செய்யுங்கள்.
  •       அதிக நீளமான முகவரியினை, வாடிக்கையாளர்கள் விரும்புவதில்லை. காரணம், அதனை தட்டச்சு செய்திடுகையில் ஏற்படும் கடினங்களே ஆகும். எனவே முடிந்தவரை குறைவான எழுத்துக்கள் அடங்கியதாக அமைத்திடுங்கள்
  •         ஒரு சில சமயங்களில் நீங்கள் விரும்பிய முகவரி ஏற்கனவே பதிவு செய்திருக்கும் பட்சத்தில் பன்மையாவோ அல்லது ஒருமையாகவோ அமைத்திடலாம் என்று எண்ணாதீர்கள், வேண்டுமானால். சில குறிச்சொற்களைசேர்த்துக்கொள்ளலாம் ( உதரணம் : moneytree என்ற முகவரி கிடைக்கவில்லையனில் moneytrees என்ற விரும்பால் themoneytree என்று பெயரிடுங்கள்
  • (-) குறியை முகவரியலிருந்து நீக்கிவிடுங்கள் தேடு இயந்திரங்கள இதை விரும்பினால் அத்தகைய குறிகளை உபயோகிக்கும் போது ஏற்படும் உச்சரிப்பு சிரமமே இதை நாம் புறக்கணிப்பதற்கான காரணமாக அமைகிறது.
  • அதேபோல் எண்களால் குறிப்பதை ஒரளவிற்கு பரிந்துரை செய்கிறோம். beforeyou என்ற பெயருக்கு b4u  என்றாவாறு அமைத்திடலாம்
  •   உங்கள் தளம் பன்மொழி அல்லது ஆங்கிலம் தொடர்பானதாக அமைந்திருந்தால் பொதுவான சில பெயர்களை தேர்ந்தெடுங்கள், உதாரணமான இன்ட்லி ஆனாது, தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் இயங்குவதால் பெய்ர் பொருத்தம் அமைகிறது
  •   இறுதியாக உங்கள் பெயரை அருகிலுள்ள நண்பர்களிடம் கலந்துரையாடுங்கள் அவர்கள் கண்களுக்கு புலப்படும் சில விசயங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக அமையலாம், ( உதாரணமாக b4u என்பதை நீங்கள் be for you என்று எண்ணியிருந்தால், சிலருக்கு before you என்று படிக்கநேரிடலாம் இல்லையா..?  
    ஆக,  ஒரு சிறந்த வலை முகவரி நீங்கள் தேர்வு செய்திடுகையில் மேற்கண்ட சில விசயங்களை ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள் என நம்புகிறோம்

-  cpede  குழு


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More