திரையுலகில் புதிய சலனத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கும் கேனான்5டி     கோடிகளில் புரண்டுக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை நோக்கி தினசரி பல இளைய தலைமுறையினர் இன்று படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு காலத்தில் தமிழ்த்திரையுலகத்தில் கால் பதிக்க வேண்டுமெனில் அதற்கென இருக்கும் திரைப்படக் கல்லூரியில் பயில வேண்டும் இல்லையேல் பல ஆண்டுகள் வாய்ப்புகள் தேடி அலைய வேண்டும் என்ற நிலையிருந்தது. இன்றோ அது தலைகீழாகிவிட்டது.
     அதற்கு முக்கிய காரணம் தனியார் தொலைக்காட்சியின் பங்கு என்று சொன்னால் மிகையாகாது. ஒரு திரைப்படம் எடுக்க வேண்டுமானால் பல கோடிகள் செலவு செய்ய வேண்டும் என்றிருந்த நிலை இப்பொழுது மாறி வருகிறது. இன்று புற்றீசல் போல் கையில் ஒரிரு லகரங்களை வைத்துக் கொண்டு ஒரு திரைப்படத்தை எடுக்க, தென் மாவட்டங்களை நோக்கி நகர்ந்து விடுகிறார்கள். இப்படி உருவாகும் திரைப்படங்கள் எல்லாம் வெளிவருகிறதா, என்றால் அது கேள்விக்குறி தான்.
      இருப்பினும் தமிழில் சமீபத்தில் வெளி வந்த இயக்குனர் பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 என்ற திரைப்படம் டிஜிட்டல் தொழிநுட்பத்தை பயன்படுத்தி எடுத்த திரைப்படம் தான். இது மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றதால் இதில் பயன்படுத்திய படக்கருவியான கேனான் 5டி இன்று திரைத்துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
      இந்த கேனான் 5டியை உபயோகித்து இன்று தமிழில் நிறைய திரைப்படங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இதன் எளிமையான உபயோகம் தான். இதை கையாள்வது மிக எளிது. இது சாதாரண டிஜிட்டல் கேமரா போன்ற தோற்றத்தில் இருப்பதும் இதன் தனிச் சிறப்பு. இது முதலில் துள்ளியமான புகைப்படங்கள் எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்ட படக்கருவி தான். இருப்பினும் இதன் முழுத்திரை உணரி (ஃபுல் ஸ்கிரீன் சென்சார் )தொழில் நுட்பம் திரைப்படங்களை உருவாக்கவும் பயன்படுகிறது.    
     இந்த தொழிநுட்பத்தை வைத்து திரைப்படங்கள் சரியான முறையில் எடுக்கப்படுகின்றதா?
     எல்லாம் இந்த தொழில்நுட்பத்தை நோக்கி செல்ல காரணமென்ன?            
     உண்மையில் இதன் மூலம் எடுக்கப்படும் திரைப்படங்கள் லாபத்தை ஈட்டித் தருகின்றதா...? 
அடுத்த கட்டுரையில் பார்ப்போம்

2 comments:

கேனான் 5டி பற்றி நல்லதொரு பதிவு, அதில் நிழற்படம் தான் எடுக்கமுடியும் என்றிருந்தேன், திரைப்படம் எடுக்க முடியும் என்பது எனக்கு புதிய செய்தி

நிழற்படம் எடுப்பதற்க்காக தயாரிக்கப் பட்ட படக் கருவி தான் கேனான் 5டி. இருப்பினும் இப்பொழுது அதில் சலனப் படமும் எடுத்து வெற்றியும் பெறுகின்றனர்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More