கார் உலகில் ஒரு புதிய தொழில்நுட்பம்! கண் சிமிட்டி பாடலை மாற்றுங்கள்....!

வேலைக்கோ  அல்லது வாரம் ஒருமுறை குடும்பத்துடன் சுற்றுலாவோ.. நாம் உடனே எடுப்பது காரைத் தான். இப்போது காரை விட உதிரி வசதிகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. டிரைவரின் முக பாவனைகளை வைத்து காரின் முக்கிய சாதனங்களை இயக்கும் புதிய தொழில்நுட்பத்தை பிரபல இன்போடெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.

கார் மார்க்கெட்டில் நித்தம் ஒரு புதிய தொழில்நுட்பம் காலடி எடுத்து வைத்து வருகிறது. புதுமைக்கு வாடிக்கையாளர் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருப்பதால் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் போட்டோ போட்டி நிலவுகிறது. அந்த வகையில் தற்போது புதிய தொழில்நுட்பத்தை பிரபல இன்போடெயின்மென்ட் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. லண்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் நாளிதழில் இதுபற்றிய செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

டேஷ்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் அகச்சிவப்பு கதிர் சென்சார்கள் மூலம் டிரைவரின் முகபாவனைகளை உணர்ந்து மியூசிக் சிஸ்டம், ஏசி, போன் அழைப்புகள் செய்வது என ஏராளமான வசதிகளை கட்டுபடுத்தும் வகையில் இந்த புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, கண் இமையை அசைத்தால் மியூசிக் சிஸ்டம் இயங்கும். இன்னொருமுறை கண் சிமிட்டினால் பாடல் மாறும். தலையை அசைத்தால் மியூசிக் சிஸ்டத்தின் சப்தத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியும்.

இதுபோன்று, முகத்தின் சிறு சிறு பாவனைகளை வைத்து பல சாதனங்களை காரில் இயக்க முடியும். இதற்காக, காரில் பிரத்யேக கம்பயூட்டர் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், கை விரல் அசைவுகளை வைத்தும் சில வசதிகளை கட்டுப்படுத்த முடியும்.

இதற்காக, கியர் பாக்ஸ் அருகில் ஒரு அகச் சிவப்பு சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு கான்செப்ட் காரில் இந்த புதிய தலைமுறை தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த இரு ஆண்டுகளில் அனைத்து கார்களிலும் பொருத்தும் அளவுக்கு மேம்படுத்தி வணிக ரீதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இதனை உருவாக்கிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

1 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More