தடைசெய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் தாராள விற்பனை: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
ஐரோப்பாவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்படுகின்றன. அதிலும் சில மருந்துகள் மோசமான கலப்பை கொண்டவை. சமீபத்திய புள்ளிவிபரம் தரும் அதிர்ச்சி தகவல் என்னவென்றால், இந்தியாவில் உள்ள அரசு மருத்துவ மனைகளின் மருந்தகங்களில் விற்கப்படும் 60% மருந்துகள், போலியானவை ஆகும்.
 
அண்டை நாடான பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டிருக்கும் 'NIMESULIDE' எனும் மருந்து கூட இந்தியாவில் இன்னும் தடை செய்யப்படவில்லை. இந்த மருந்து வலி நிவாரணி ஆகும். கல்லீரலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி விடும். அதிலும் கொடுமை என்னவென்றால், இந்த மருந்தை குழந்தைகளுக்கு தான் அதிகமாக உபயோகப் படுத்துகின்றனர். ஏனென்றால், உடனடியாக காய்ச்சலைக் குறைக்கும். அதனால் பிற்கால பாதிப்புகளைப் பற்றி அச்சம் கொள்ளாமல், தாராளமாக மருத்துவர் பரிந்துரைக்கிறார்.


மேலும், பள்ளி மாணவர்கள் போதைக்காக பயன்படுத்திய 'TRAMADAL HYDROCHLORIDE' எனும் வலி நிவாரணி, இலங்கையில் தனியார் மருந்து கடைகளில் தடை விதித்து அரசு மருந்தகங்களில் மட்டும் விற்க அனுமதித்தது நேற்றைய செய்தி!

-ராஜ் தியாகி

1 comments:

Our indian govt full of coruption who can correct all problem...after our next generation search india in world map.....

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More