தேவை தமிழ்ப்பற்று மட்டுமே. தமிழ் வெறி அல்ல...


இன்றைக்கு எந்த அரசியல் தலைவரை எடுத்தாலும் தமிழை வைத்து கட்சியை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. தமிழுக்கே தாங்கள் தான் காவலன் என்பது போல் தங்களுக்கு தாங்களே தமிழறிஞர்கள் பட்டம் சூட்டிக் கொள்கின்றனர். தமிழ் மேல் தமிழர்களுக்கு பற்று தேவைதான். ஆனால் அது தமிழ் வெறியாக மாறக்கூடாது. 

பாரதியார் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று கூறினார் என்றால், அவருக்கு தமிழைத் தவிர ஆங்கிலம்,பிரெஞ்ச்,இந்தி,மராட்டியம் போன்ற பல மொழிகள் தெரிந்து வைத்திருந்தார். எனவே எல்லா மொழிகளையும் விட தமிழ் மொழி சிறந்தது என்று கூறினார். இன்றைக்கு இருக்கும் தமிழர்களில் எத்தனை பேருக்கு தமிழும், அரைகுறையான ஆங்கிலத்தையும் தவிர வேறு மொழி தெரியும்? 


இந்தியாவில் மொத்தம் 42 மொழிகள் உள்ளன. ஆனால் எல்லா மொழிகளையும் தெரிந்து வைத்துக் கொள்வது என்பது இயலாத ஒன்று. ஆனால் ஒரு சில முக்கிய மொழிகளைப் பற்றிய அடிப்படை அறிவு எல்லோருக்கும் தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  குறிப்பாக இந்தி மொழி என்பது நமது தேசிய மொழி. அதை அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் நலம். பயக்கும்., இந்தியா முழுவதும் தொழில் விஷயமாகவோ, சுற்றுலாவோ சென்றால் முதலில் நமக்கு உதவுவது இந்தி மொழிதான். 

அதுபோலவே ஆங்கிலத்திலும் அக்கறை செலுத்துதல் அவசியம். நம்முடைய மேற்படிப்பு,தொழில்,மற்றும் தகவல் தொடர்புகளுக்கு ஆங்கில அறிவு இன்றியமையாதது. உலகம் முழுவதும் தெரிந்த மொழி என்பதால் அதற்கு கூடுதல் மதிப்பு கொடுத்து ஓரளவிற்கு பேசுவதற்கும்,எழுதுவதற்கும் தெரிந்து வைத்து கொள்ளுதல் நலம்.


அதுபோலவே நம்முடைய அண்டை மாநில மொழிகளான மலையாளம்,கன்னடம்,தெலுங்கு முதலியவற்றை ஓரளவிற்கு தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. கருத்து பரிமாற்றங்களுக்கும், தகவல் தொடர்பிற்கு இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.   

இந்தியாவில் தமிழர்களைத் தவிர எல்லோரும் மூன்று அல்லது நான்கு மொழிகள் சர்வசாதாரணமாக பேசும் திறன் படைத்தவர்களாக இருக்கின்றனர். நாம் மட்டும்தான் தமிழ்,தமிழ் என்று ஒரே மொழியை வைத்துக் கொண்டு குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.


இவ்வாறு பேசுவதாலோ,எழுதுவதாலோ நாம் தமிழுக்கு எதிரி அல்ல என்பதை தமிழ் அறிஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழை உலகம் முழுவதும் வளர்ப்பது எவ்வாறு நமது கடமையோ,அது போலவே உலக மொழிகளை நாம் தெரிந்து வைத்துக் கொள்வதும் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஒன்று.


இரண்டு தலைமுறைகளாக நம்மை ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள் தமிழை வைத்து வியாபாரம் செய்து, அவர்களது வளத்தை பெருக்கினார்களே தவிர, நம்முடைய வளர்ச்சியை அவர்கள் சிறிதும் எண்ணிப்பார்க்கவில்லை. அவர்களுடைய வாரிசுகளுக்கு எல்லா மொழிகளையும் கற்றுக் கொடுத்து வளர்த்துள்ளார்கள். ஆனால் பொதுமக்களுக்கு மட்டும் தமிழை தவிர வேறு மொழிகளை கற்றுக்கொடுக்காமல் நம்முடைய தலைமுறையினரின் வாழ்க்கையில் விளையாடி உள்ளனர்.அரசியல்வாதிகளுக்கு தேவை மக்களின் உணர்ச்சியை தூண்டிவிட்டு,அதில் குளிர்காய வேண்டும் என்பதே. இனிமேலும் அவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் தமிழை உலகம் முழுவதும் வளர்ப்போம். அதுபோல் பிறமொழிகளில் உள்ள நல்ல விஷயங்களையும் போற்றுவோம்.

12 comments:

வணக்கம். மொழிவெறிக்கு எதிரான கருத்தில் உடன்படுகிறேன். எந்த மொழியையும், எத்தனை மொழிகளையும் தேவைக்காகக் கற்றுக் கொள்வதில் தவறில்லை. இன்னொன்று ஹிந்தி தேசிய மொழி எனபது உண்மையல்ல. அது அலுவல் மொழி மட்டுமே. அப்படியொரு கருத்து அரசியல் காரணங்களுக்காகத் திட்டமிட்டுப் பரப்பபடுகிறது. ஆனாலும் அதைக் கற்றுக் கொள்வதில் எந்தத் தடையும் இல்லை. அது திணிக்கப்பட்டதால் மட்டுமே எதிர்க்கப்பட்டது. தம் தாய்மொழி தவிற வேறெதுவும் தெரியாத மலையாளிகள், தெலுங்கர், கன்னடர், ஹிந்திக்காரர்கள் இருக்கிறார்கள். பல மொழி தெரிந்த தமிழ்நாட்டினரும் இருக்கிறார்கள். நம்க்கு இப்போது தேவை ஆங்கிலம் மட்டுமே. மற்றவர்கள் தேவையையொட்டிக் கற்றுக் கொள்ளட்டும்.

Very well said Mr.Sivalingam.ஹிந்தி மொழிதான் நம்முடைய தேசிய மொழி.ஆனால் நம்முடைய தமிழர்கள் மட்டும் அதை கற்றுகொள்ள மாட்டார்கள். இன்னும் நூறு வருடங்கள் போனாலும் திணிக்க பட்ட மொழி என்று சொல்லிக்கொண்டே திரிவார்கள்.சரி ஹிந்திதான் வேண்டாம் ,ஆங்கிலமாவது சரியாக பேசத்தெரியுமா?????????? O my God present generation speak very bad English or very low knowledge in English. So present generation can't speak proper Enlish,no Hindi,No malayalam,No Telungu or No Kannada. Future of present generation is big question mark.The first comment by தமிழானவன் is a bullshit comment.I hate this type of comment.தேவை பட்டால் கற்று கொள்ள மற்ற இந்திய மொழிகள் ஆயா கடை வடை அல்ல.

அனைத்து மொழி கற்போம்... அன்னை மொழி காப்போம்...

ஹிந்தியையோ, வேறு மொழிகளையோ படிக்ககூடாது என்று யாரும் சொல்லவில்லை. ஹிந்தி தேசிய மொழி என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இது சமீபத்தில் குஜராத நீதிமன்ற உத்தரவில் கூட வெளிப்பட்டது. அது வெறும் அலுவல் மொழிதான். அப்படி ஒரு பொய் மறைமுகமாகப் பரப்பப்பட்டு வருகிறது பல வருடங்களாக. மற்ற மாநில மொழிகளுக்கு இல்லாத அதிகாரம் கொடுக்கப்பட்டு ஊட்டி வளர்க்கப்படுகிறது. மத்திய அரசு தன்னாலியன்ற வழிகளிலெல்லாம் ஹிந்தியைத் திணிக்கிறது. ஹிந்தியை எதிர்ப்பது என்னவோ தமிழ் வெறியைப் போலப் பார்க்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட மொழியைப் பிற மொழியினர் மீது திணிப்பது ஆதிக்கம் செய்வதுதான். வங்கதேசம் என்ற நாடு பிரிந்ததும் அக்காரணத்தால்தான். ஹிந்தி என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் மொழி பண்பாட்டின் ஆக்ரமிப்பு அடையாளம்தான். இதை ஒரு சில பின்னூட்டங்களினாலோ பதிவுகளிலோ புரிய வைக்க என்னால் இயலாது. இந்தியா என்பது பல்வேறு மொழி பேசும் பல இனங்களின் சேர்க்கை. அது ஒரு நாடு அல்ல. ஒரு துணைக்கண்டம். ஐரோப்பியக் கண்டத்தில் ஏதாவது ஒரு மொழியை ஐரோப்பியாவின் தேசிய மொழியாக அறிவித்தால் அது எத்துணை அபத்தமோ அதுபோல்தான் இதுவும். இன்னொன்று பாரதி தமிழ் மொழியை இனிது என்பார், ஆனால் தமிழை விட சம்ஸ்கிருதத்தைத்தான் உயர்வானது என்பார்.

http://www.vinavu.com/2012/06/28/conversion-17/

திரு.தமிழானவன் அவர்களே, வணக்கம், இந்தி திணிக்கப்படுவதாகவே இருக்கட்டும். ஒரு தாய் தன் குழந்தைக்கு கசப்பு மருந்தை திணித்துதான் கொடுப்பாள். அது குழந்தையின் எதிர்கால நன்மைக்குதானே ஒழிய கெடுதலுக்கு அல்ல.. அதுபோலதான் இந்தி திணிப்பும்.

முட்டாள் தன்மான பைத்தியக்காரத் தனமான கருத்தை திணித்து, திரித்து எழுதியிருக்கிறார் சிவலிங்கம். ஹிந்தி தேசிய மொழியா? உங்களைப் போன்ற முட்டாளை இதுவரை பார்த்ததே இல்லை... தமிழர்களை என்ன கிறுக்கர்கள், என்ன சொன்னாலும் நம்பிவிடுவார்கள் என நினைத்தீர்களா? இந்திய அரசியல் அமைப்பு சட்டம் எல்லா மொழிகளும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று தான் சொல்கிறது. ஹிந்தி தேசிய மொழி; அதனால் ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியை திணியுங்கள் என்று சொல்லவில்லை. உங்கள் பிழைப்பிற்கு வேண்டுமானால் ஹிந்தியை நீங்கள் தாராளமாக படிக்கலாம். ஹிந்திக்காரன் தமிழ் படித்துவிட்டா தமிழ்நாட்டில் வேலை செய்கிறார்? தமிழனாக பிறந்து ஹிந்தியை தலையில் தூக்கி வைக்கும் முட்டாள்கள் கருத்தை படிப்பதே முதலில் தவறு.

There's no national language in India: Gujarat High Court
Saeed Khan, TNN Jan 25, 2010, 12.34am IST


Tags:
India
AHMEDABAD: Does India have a national language? No, says the Gujarat High Court. The court also observed that in India, a majority of people have accepted Hindi as a national language and many speak Hindi and write in Devanagari script, but it's not officially the national language.

இந்தி மொழி தேசிய மொழி அல்ல என்று கூட தெரியாமல் ஒரு இந்தி ஆதரவு பதிவு கண்டனத்திற்கு உரியது. மற்றொன்று . தமிழ் வெறி கூடாது . என் மொழியின் மேல் எனக்கு வெறி கூடாது என்று சொல்வதற்கு எந்த இந்தி ஆதரவாளருக்கும் தகுதி கிடையாது. தமிழ் வெறி கூடாது என்றால் இந்தி வெறியை ஆதரிக்கலாமா ? இந்திய அரசு திட்டமிட்டு இந்தியாவில் பல்வேறு மொழிகளை அழித்து வருகிறது. இந்தி வெறி பிடித்து மொழித் தீண்டாமையை கடை பிடித்து வருகிறது. மாநில மொழி உரிமைகைளை மிதிக்கிறது. இதற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் நீங்கள் தமிழன் . இல்லையென்றால் நீங்கள் ஒரு ஹிந்தியர் .

இந்தி தேசிய மொழியாகவே இருந்தாலும் அதை கட்டாய பாடமாக்குவதை நான் எதிர்க்கிறேன், தேவைப்படுபவர்கள் பேசவோ எழுத படிக்கவோ கற்று கொள்ளட்டும், ஏற்கனவே ஆங்கிலத்தால் பல தமிழ் வார்த்தைகள் வழக்கிலிருந்து காணமல் போய்விட்டன, துணைக்கு ஹிந்தியும் வந்தால் அவ்வளவுதான். காலை மிதைத்தால் sorry யும் உதவி செய்தால் சுக்ரியாவும்தான் மிஞ்சும். தமிழ் இன்னும் கொஞ்ச நாளாவது வாழட்டுமே, விடுங்களேன்

மொழி வெறிக்கும் மொழி பற்றுக்கும் என்ன வேறுபாடு..?? ஏன் ஹிந்தியை படிக்க சொல்லுறீங்க ?? உலக மொழி ஆங்கிலம் தானே....எல்லா மொழி காரனும் ஆங்கிலம் படிக்க வேண்டியதுதானே ?? எந்த மொழியையும் தமிழர்கள் மீது திணிக்க கூடாது....மேலும் பல்வேறு தேசிய இனங்கள் உள்ள ஒரு நாட்டில் ஒரு மொழியை மட்டும் தேசிய மொழியாக அறிவித்தால் மற்ற மொழிகள் நசுக்க படும்...அது நாடு உடைய காரணமாகவும் அமையும்....

உலகிற்கே நாகரீகத்தை கற்றுக்கொடுத்த எம்மொழி மீது எத்தனை சுமைகள்..?

இரு நூறு ஆண்டுளில் வெளிவந்த மொழிகளை பின்னுக்கு தள்ளும் எம்மொழி...

,, பல மொழிகள் கற்பது தப்பு இல்லை... அது உங்கள் தொழில் சார்ந்து தேவைப்படு தருணங்களில் இருக்கட்டும்,,


தமிழ் இனி மெல்ல வளரும்,,,

வளர்த்துவோம்...

நேற்றைய தலைமுறைகளை விட்ட நாளைய தலைமுறைகள் வளர்ப்பார்கள் இணையத்தால் இணைந்து....

மொழிபற்று ஒரு போதும் மொழி வெறியாது. ஒவ்வொருவனும் தனது தாயை காப்பது போல் தாய் மொழியைக் காப்பற்ற வேணும்.
ஆனால் தன்னுடைய மொழி எல்லாம் என நினைத்து மற்ற மொழிக்காரா்களை வெறிப்பது அழிப்பது மொழி வெறியாகும்.

எந்த மடையன் சொன்னது இந்தி தேய(தேசிய) மொழி என்று . தமிழன் என்றால் உங்களுக்கு பேயனா?
தமிழ் வாழ்க வளர்க. அனைத்து மொழிகளும் வாழ்க

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More