பேஸ்புக்கில் புகைப்படங்கள் இணைப்பவர்கள் கவனத்திற்கு:


பேஸ்புக்கில் புகைப்படங்கள் இணைப்பவர்கள் கவனத்திற்கு:
முறையற்ற புகைப்படங்கள் உங்கள் வேலையை பறிக்ககூடும்!
முதலாளிகள் தங்கள் அலுவலகத்தில் வேலைக்கு சேர விரும்புபவர்களின் வாழ்க்கைமுறை, மனப்பான்மை, தோற்றம் பற்றி அறிய பேஸ் புக்கை ஒரு சாதனமாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்று நார்த் மியாமியில் இருக்கும் ப்ளோரிடா சர்வதேச பல்கலைக் கழக ஆய்வு கூறுகிறது.
முதலாளிகள் தகுதி இல்லாதவர்களை ஒதுக்கி தள்ள பேஸ் புக்கை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதனால் வேலை தேடுபவர்களுக்கு பேஸ்புக்கில் இருக்கும் சுய விவரங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
தங்கள் ஊழியர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க பேஸ்புக்கை நாடும் முதலாளிகள், தங்களுக்கு வேண்டிய தகுதி இருப்பவர்களைக் கண்டு பிடிக்கவும் பேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்கள்.
பணியாளர்களை தேர்ந்தெடுக்க சரியான வழிமுறைகள் இல்லாத நிலையில்  பேஸ்புக்கில் நீங்கள் போடும் புகைப்படங்களை வைத்து உங்களை பற்றிய முடிவுக்கு வருகிறார்கள் இவர்கள்.
“இது ஒரு புதிய போக்கு; ஏனெனில் தரநிலையான வழி முறைகள் இல்லாத நிலையில் விண்ணப்பதாரர்கள் பற்றிய முடிவுகளை உள்ளுணர்வால் மட்டுமே தீர்மானம் செய்ய முடிகிறது” என்று இந்த ஆய்வை தலைமை தாங்கி நடத்திச்செல்லும் திரு. லாமா கூறுகிறார்.
இந்த ஆராய்ச்சிக் குழுவினர் தகவல் தொடர்புத்துறை, சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, சட்டமுறை செயலாக்கம், உணவு மற்றும் பானம்,  பிரயாணத் துறை விளம்பரத் துறை என பல துறைகளில் இருந்து பிரதிநிதிகளை பேட்டி கண்டதில் இந்தப் புதிய போக்கு கண்டு வந்துள்ளது.
ஒரு தனி மனிதரைப் பற்றிய விவரங்களை இதைப் போல சமூக வலைத்தளங்கள் மூலம் கண்டறிவது நன்னெறி சார்ந்த முறைதானா என்பது பற்றி விவாதங்களும் நடத்த இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
பேஸ் புக்கில் ஒருவரது நடவடிக்கைகளை வைத்து, அவரது தனிப்பட்ட ஆளுமையை எடை போடுவது என்ற முறை ஒரு ஒப்புக்கொள்ளப்பட்ட நெறிமுறை ஆக ஆவதற்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்றும் சொல்லுகிறார்கள்.
பல அமெரிக்க அலுவலகங்களில் ஊழியர்களின் பேஸ்புக் நடவடிக்கைகள் கண்காணிக்கப் படுவது தன்னுடைய விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் மீறுபவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேஸ் புக் ஏற்கனவே அறிவித்திருக்கிறது.

2 comments:

அம்மாவின் வேகம் வெகு அருமை.... தொடருங்கள் அம்மா... தங்களது முதல் பதிவு வெகு விரைவில் 1000 வது பதிவாக உயர வேண்டும்...

நன்றி!!

// பேஸ்புக்கில் நீங்கள் போடும் புகைப்படங்களை வைத்து உங்களை பற்றிய முடிவுக்கு வருகிறார்கள் இவர்கள்.//
எச்சரிக்கையா இருக்கனும்னு எச்சரிக்கிறீங்க...பயனுள்ள விசயத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More