பிறப்புச் சான்று


          

      இந்திய அரசு குடிமக்களுக்கு வழங்கும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்களிக்கும் உரிமை முதலான வசதிகளைப் பெற பிறப்பு சான்று முக்கியமான ஆவணமாகும். அதேபோன்றுபள்ளிகள் முதல் அரசு பணிகளின் வரை சேர்க்கைகளுக்கும், திருமணம் செய்ய திருமண வயதை அடைந்ததை சட்டரீதியாக கோருவதற்கும், அரசு சலுகைகள் பெற என பல்வேறு விடயங்களுக்கு பிறப்பு சான்று அத்தியாவசியமான முக்கிய ஆவணமாகிறது.
இந்தியாவில், 1969 ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டப்படி, பிறந்த ஒவ்வொரு குழந்தையும் 21 தினங்களுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்காக, கிராம மற்றும் நகர பதிவுத்துறை, மாவட்டப் பதிவுத்துறை, மாநில பதிவுத்துறை, மத்திய பதிவுத்துறை என சிறப்பாக கட்டமைத்து இணைக்கப்பட்ட பொது பதிவுத்துறையினை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

  
ஒருவர் பிறப்புச் சான்றிதழ்பெற, பிறந்தத் தேதியினைப் பதிவு துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட  பிறப்பு பதிவு விண்ணப்பப் படிவம் வாயிலாக, குழந்தை பிறந்த 21 தினங்களுக்குள்ளாக சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள பதிவு அதிகாரியிடம் பிறப்பினைப் பதிவு செய்ய வேண்டும். குழந்தை பிறந்த மருத்துவமனைகளிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், உரிய பரிசீலனைக்குப் பின்னர் பிறப்பு சான்று வழங்கப்படும்.

 
குறிப்பிட்ட 21 நாட்களுக்குள் பதிவுத்துறையில் குழந்தையின் பிறப்பு பதிவுசெய்யப்படவில்லை என்றாலோ அல்லது சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் குழந்தை பிறந்திருந்தாலோ சம்பந்தப்பட்ட பகுதியின் காவல்துறை மூலம் பிறப்பு உறுதி செய்யப்பட்டதும்  பதிவுத்துறை அதிகாரிகளால் பிறப்பு சான்று வழங்கப்படுகிறது.
            விண்ணப்படிவங்கள் கீழ்காணும் அரசு வலைதளத்தில் உள்ளது. 
http://www.tn.gov.in/forms.html#Corporation


2 comments:

பயனுள்ள தகவலை தெரிவித்த நண்பனுக்கு நன்றி

பயனுள்ள தகவல் தமிழ்ச்செல்வி அவர்களே...
உங்களின் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More