புதிய வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறைகள்


புதிய வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் மாவட்டங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களிலும், மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பித்து இரண்டு வாரங்களில் பெற்றுக்கொள்ளலாம்.  இதற்கான விண்ணப்பத்தை படிவம் 6 ல் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பவர் குறைந்த பட்சம் ஆறுமாதம் அவ்விடத்தில் உண்டு உறங்குபவராயும் 18 வயது பூர்த்தி அடைந்தவராயும் இருத்தல் வேண்டும். விசாரணையின் போது விண்ணப்பித்தவர் உள்ளூரில் வசிக்கவில்லை என்பது தெரியவந்தால் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும். வாக்காளர் புகைப்பட  அடையாள அட்டை வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரர் வசிக்கும் நிரந்தர முகவரிக்கான ஆதாரத்தையும் வயது சான்றையும் இணைத்தல் வேண்டும். விண்ணப்பம் முழுவதுமாய் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.  முழுவதுமாய் பூர்த்தி செய்யப்படாத மற்றும் கையொப்பமிடாத, தகுந்த ஆதாரங்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். வயதுக்கான ஆதாரமாக பிறப்பு சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் ஏற்றுக்கொள்ளப்படும். இருப்பிடத்திற்கான சான்றாக குடும்ப அட்டை, பாஸ்போட், ஓட்டுநர் உரிமம், வீட்டு வரி ரசீது, மின்சார கட்டண அட்டை, கேஸ் வாங்கும் ரசீது, தண்ணீர் கட்டண ரசீது, சமீபத்திய டெலிபோன் பில் , வங்கி மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகம் மற்றும் விண்ணப்பதராருக்கு வந்த கடிதம் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப் படிவம் கீழ் உள்ள அரசு வலைதளத்தில் தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

0 comments:

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More