இணை(ன்றை)ய உலகம் 3

இணையம் பற்றிய எதிர்கால பதிவு

வியாபாரம்  >>  விளம்பரங்கள் >>  இணையம் :

முந்தைய பதிவில் சொன்னது போல விளம்பரங்களே ஒரு வியாபார நிறுவனத்தின் முதுகெழும்பாக இருக்கின்றது. விளம்பர துறையில்   ஏராளமான படிப்புகளும் வாய்ப்புகளும் இதனாலேயே தான் அதிக அளவில் காத்துக்கிடக்கிறது.

ஒரு வியாபார நிறுவனம் தனக்கான சந்தையை உருவாக்குவதில் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்கின்றன்.

இந்த காலகட்டத்தில் அறிமுகமாகின்ற  புதிய விளம்பர யுக்தி இணைய வழி விளம்பரங்கள் ஆகும்.


ஒரு செய்தித்தாளில் வெளியாகும் விளம்பரத்தின் ஆயுள் காலம் ஒரு நாள் மட்டுமே. மிகவும் பிந்தங்கிய ஒரு நாளிதலில் கூட விளம்பரக் கட்டணத்தை கேட்டால் பிரம்மிப்பாக இருக்கும். உதரணமாக ஒரு முகவரி அட்டை அளவுள்ள விளம்பரத்தை வெளியிடுவதற்கு குறந்த பட்சம் ஆயிரம் ரூபாயாவது செலவாகும். அப்படி செலவு செய்யும் பட்சத்தில் அதன் ஆயுட்காலம் வெறும் ஒரு நாள் மட்டுமே காணப்படும். தினமும் ஒரு சில ஆயிரங்கள் அல்லது இலட்சங்களில் வெளிவரும் நாளிதல்களில் இன்னமும் விளம்பரங்கள் குறைந்தபாடில்லை.. காரணம், அவ்வாறு ஒரு நாள் மட்டுமே தனது வேலையை செய்தித்தாள் விளம்பரங்கள் செய்தாலும் குறந்த பட்ச தேவைகளையாவது அவைகள் நிறவேற்றிவிடுகின்றன என்பதால்...

வானொலி மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களோ செய்தித்தாள்களை காட்டிலும் மிகவும் மெருகேரியதாக கருதப்படுகிறது. ஆயினும் அவைகளின் ஆயுட்காலங்களோ சில மணி துளிகளே ஆகும். ஆம், குறைந்த பட்சமாக ஒரு முன்னணி தொலைக்காட்சி ஊடகத்தில் 15 விநாடிகள் வெளிவரும் விளம்பர கட்டணம் மூவாயிரம் ரூபாயை தொட்டுவிடும். கொஞ்சம் யோசித்து பார்க்கும் போது தமிழகத்தின் முன்னணி நிறுவனங்கள் விளம்பரத்தின் அவசியத்தினை உணர்ந்து எவ்வளவு கோடி தொகைகளை மாதம் மாதம்  செலவிடுகிறார்கள் என்ற  ஆச்சர்யத்தை தோற்றுவிக்கின்றதல்லவா..?

தொழில் நிறுவனங்கள் இப்படி ஆயிரமாயிரம் கோடிகளை ஒரு நல்ல விளம்பரத்திற்காக செலவு செய்ய தயாராகவே இருக்கின்றன. ஒரு நாள் / நொடி விளம்பரங்களுக்கே இவர்கள் தரும் விளம்பர கட்டணம் இவ்வளவு என்றால் இதன் மூலம் நிச்சயம் அவர்களுக்கு வருமானம் இருக்கின்றது என்பதே உண்மை. ஆம். விளம்பரத்தின் அவசியத்தை உணராமலோ அல்லது அதனை குறவாகவோ மதிப்பிடும் தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் தோல்வியையே சந்திக்கின்றன.

குறைந்த பட்சமாக இலாபம் ஈட்டித்தரும் ஏனைய  ஊடக விளம்பரங்களுக்கே ஒரு சந்தையை உருவாக்கும் வல்லமை உண்டு என்றால் குறைந்த செலவில் மாபெரும் சந்தையை ஈட்டித்தரும் இணைய தளங்களின்  சேவை பற்றி நிச்சயமாக ஒவ்வொரு தொழில்முனைவோரும் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா..?

ஆம், வளர்ந்து வரும் ஒரு ஊடகம் பற்றி நிச்சயமாக ஒவ்வொரு தொழில் முனைவோர்களும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More