இணை(ன்றைய) உலகம் - 4

அச்சு ஊடாகங்களும், காட்சி ஊடகங்களும் செய்யும் வேலைகளை விட இணைய ஊடகம் தன் பணியை முழுமையாக செய்வதால் சர்வதேச சந்தையில் இணைய வழி விளம்பரங்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையின் தரத்திற்கு தமிழ் வழி இணையதளங்களும் வெகு விரைவாக முன்னேரி வருகின்றன.

இலங்கை, சிங்கப்பூர் நாடுகளில் தேசிய ஆட்சி மொழியாகவும், இந்தியாவில் பாண்டிச்சேரி, தமிழ்நாடு போன்ற மாநிலத்தின் ஆட்சி மொழியாகவும் உள்ள தமிழ், பெரும்பான்மையான மக்களால் இணைய தளங்களில் பயன்படுத்தப்பட்டு வருகினது. மேலும் மலேசியா, தென் ஆப்ரிக்கா, மொரிசியஸ், பிஜி போன்ற நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகவும் உலகிலேயே அதிகமானவர்கள் பயன்படுத்தும் மொழிகளில் ஒன்றாக தமிழ் வழி இணைய தளங்கள் இருக்கின்றன.

இப்படி இலட்சக்கணக்கான மக்களால் சர்வதேச சந்தையில் தமிழ் வழி இணையத்தளங்களுக்கு பெரு மதிப்பளிப்பளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் தான் தமிழ் தளங்களில் விளம்பரங்கள் செய்ய உள்ளூர் சந்தைகளில் தற்போது ஆர்வமுடன் நிறுவனங்கள் முன்வருகின்றன. அரசும் இதனை ஊக்குவிக்கும் விதமாக கணினி பயன்பாட்டை அதிகரிக்க பல திட்டங்களையும் அளித்து வருகிறது.


இணைய பயன்பாடு பற்றி அறிய ஒரு சிறு செய்தி உங்களுக்கு உபயோகமானதாக அமையும்,,,

1857 ஆம் ஆண்டிலேயே இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருக்க கூடிய பெரும் விடுதலை போராட்டம் சிப்பாய் கலகம் என்றழைக்கப்படும் ஆங்கிலோ பிரித்தானிய கம்பெனிகளுக்கெதிராக சிப்பாய்களால் ஏற்படுத்தப்பட்ட முதல் இந்திய விடுதலை போராட்டம் ஆகும், இந்தியாவின் மீரட் பகுதியில் ஆரம்பம் ஆன கிளர்ச்சி வெகு வேகமாக ம்த்திய பிரதேசம், டெல்லி என நீண்டு பெரும் கிளர்ச்சியையும் வெள்ளையர்களுக்கு பயத்தையும் ஏற்படுத்தியது. இந்த போராட்டம் வெகு விரைவாக இந்திய மாகானங்கள் அனைத்திற்கும் பரவினால் நிச்சயமாக இந்தியா விடுதலை எழுச்சியை அடைந்துவிடும் என்பதால் வெள்ளைய தளபதிகள் தகவல் பரிமாற்றத்தை உடனடியாக தடுக்கும் விதமாக தந்தியை வெட்டிவிட்டனர். இதனால் இந்த கிளர்ச்சியை மற்ற மாகானங்கள் அறியும் முன்னரே போரட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இன்றைய தகவல் தொடர்பு சாதனங்களில் இணையம் அலைபேசி வரை பரவியுள்ளது. இந்த நிலையில் ஒரு விழுக்காடு தகவல் பறிமாற்றம் ஏற்படும் வாய்ப்பு அப்போது இருந்திருந்தால் நிச்சயமாக இந்தியாவின் 155 அவது சுதந்திர தினத்தை கொண்டாடி இருப்போம். இன்னும் சொல்ல போனால்,  அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் மெளனித்த நிலை இருந்தும் இணையமே எமது மக்கள் நிலை குறித்த நிகழ்வுகளை உலகத்திற்கு கொண்டு சென்றதல்லவா..?

ஊடக விமர்ச்சனங்களுக்கு உட்படாமல் சிறந்த வகையில் ஒரு விளம்பரத்தை கொண்டு சேர்க்கும் வல்லமை இணையதளங்களுக்கு உண்டு.

ஒரு செய்திதாளில் வெளியாகும் விளம்பரமானது அந்த செய்தித்தாள் அச்சிடப்படும் பிரதிகளை பொறுத்தே வாடிக்கையாளர்களை சேர்கின்றது. குறைந்தபட்சம் 50 ஆயிரம் பிரதிகளை அச்சிட்டிருந்தால் அந்த விளம்பரம் 50 ஆயிரம் வாசகர்களை அடைந்திருக்கும் என்பதைவிட அவர்களில் எத்தனை பேர் அந்த விளம்பரங்களை பார்க்கின்றார்கள் என்பதை உணர வைக்கின்றதல்லவா..?

அதேபோல், ஒரு தொலைக்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும் விளம்பரமானது  அந்த சில வினாடிகளில் எத்தனை பார்வையாளர்களை அடந்திருக்ககூடும்..? பெறும்பான்மையான பார்வையாளர்கள் விளம்பரம் தொடங்கியதுமே வேறு நிகழ்சிக்கு தாவிவிடுவார்கள் என்பதே உண்மை.

இப்படி சில நிமிடங்களில் அழிந்துவிடக்கூடிய விளம்பரங்களை, மக்கள் மனதில் ஆழமாக பாதிக்க வேண்டுமேனில் அந்த விளம்பரங்கள் மக்களுக்கு அடிக்கடி காண்பிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இதனால் விளம்பரம் செய்ய அதிகமான தொகையை செலவளிக்க வேண்டி இருக்கின்றது.

சர்வதேச சந்தைகள் இணையவழி விளம்பரங்களை விரும்புவதற்கான காரணமும் இதுதான்.

ஆம், இணையவழி விளம்பரங்கள் பார்வையாளர்களை சலிப்படைய செய்வதில்லை. மேலும் அது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு தகுந்தாற் போல தன்னையே மாற்றிகொள்ளும் தன்மை வாய்ந்தது.  

அந்த அற்புத பொக்கிசத்தை பற்றி மேலும் விரிவாக அறிவோம்...
0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More