இது இணை(ன்றை)ய உலகம் - 2

இணைய சந்தை பற்றிய ஒரு எதிர்கால பதிவு...

தொழில் முனைவோருக்கான சந்தையில்  இணையத்தின் பங்களிப்பு :

   ஒவ்வொரு தொழில் நிறுவனங்களும் தமது வணிகத்தின் முதுகெழும்பாக சந்தைப்படுத்துதலை குறிக்கின்றன, அவ்வாறான ஒரு போட்டா போட்டியில் நிறுவனங்கள் ஒன்றை ஒன்று முந்திச்  செல்ல படாத பாடுபடுகின்றன.

இதில் விளம்பரங்களுக்குத் தான் மிகுந்த பங்களிப்பு இருக்கின்றது.

கலைக்கல்லூரியில் மேல்நிலை பட்டம் பெற்றவர் பொறியியல் கல்லூரியையே  நிர்வாகிக்கும் திறமையை பெறுவது இந்த விளம்பர யுக்தியை சரிவர உணர்ந்ததால் தான்.

விளம்பரங்களின் சூட்சுமமே அதை மக்களிடம் கொண்டு செல்லும் ஊடகங்களின் கையில் தான் அடங்கி இருக்கின்றது

அக்காமாலாவும், கப்சியும் கூட இந்த வித்தையில் தான் கற்றுத்தேர்ந்த வித்தக்காரனாகின்றன.


   ஒரு நல்ல விளம்பரமானது அதை கொண்டு செல்லும் ஊடகத்தின் கைதேர்ந்த நிலையைப் பொறுத்து இருந்தாலும் அதை மக்களிடம் சலிப்படையாமல் நாசூக்காக சொல்ல தவறும் பட்சத்தில் தன் வலிமையை இழந்துவிடும்..

ஆரம்ப காலத்தில் சித்திரமாகவும், கல்வெட்டுகளாகவும் காட்சிப்படுத்தப்பட்டு வந்த விளம்பரங்கள் நாளடைவில் அச்சுத்துறையின் உதவியை விரும்பியது. அச்சுத்துறை ஊடகங்களான கைப்பிரதிகள்,  செய்தித்தாள்கள் ஓரளவு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. செய்தித்தாள்களை பின்னுக்கு தள்ளி வானொலி அலைவரிசைகளும் பின்னர் தொலைக்காட்சிகளும் மக்களை ஆட்கொண்டன..  இப்படியாக ஏனைய ஊடகங்களும் மக்களிடம் தன் கருத்துக்களாக விளம்பரங்களை  கொண்டு சென்றாலும் தொழில் நிறுவனங்களிடம் சிறிது அதிருப்தியையே உண்டாக்குகின்றன.


காரணம், தினமும் ஆயிரக்கணக்கான விளம்பரங்களை இந்த ஊடகங்கள் வெளிவிட்டாலும் அதற்கான ஆயுள் என்பது மிக குறைவு என்பதே ஆகும். தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் தினமும் வெளியாகும் ஆயிரக்கணக்கான விளம்பரங்களில் வெகுவாக ஒரு சில விளம்பரங்களே
தன் கடமையை சரிவர செய்து மக்கள் மனதில் அந்த தொழில் நிறுவங்களை பதிய வைக்கின்றன.

  நல்ல விளம்பரமானது அதை காட்சிப்படுத்தும் விதத்தை பொறுத்து மக்களிடம் வரவேற்பை பெறுகின்றது. தனது வாடிக்கையாளர்களின் விருப்பம் அறிந்து செயல்படும் விளம்பரங்களே பெரும்பாலும் வெற்றியடைகின்றன.

விளம்பரங்கள் மக்களின் மனதில் பதிய  அதை மக்கள் அடிக்கடி பார்க்கும் வண்ணம் அமைப்பதில் கவனம் தேவை, காரணம், அதிகபட்சமாக காண்பிக்கப்பட்டாலும் அந்த விளம்பரன் சலிப்பை ஏற்படுத்திவிட கூடும் என்பது நிதர்சனமான உண்மை.

    தொலைக்காட்சி விளம்பரங்கள் செய்தித்தாள்களை விட அதிகமாக மக்களை சென்றடைந்தாலும் திரும்ப திரும்ப காண்பிக்கப்படும் சில விளம்பரங்கள் தன் சேவையை செய்ய தவறி விடுகின்றன...

ஏனைய ஊடகங்கள் தங்களின் வேலைகளை முழுமையாக செய்யாவிடினும்,  தொழில் நிறுவனங்கள் தங்களது விளம்பர செலவுகளில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து செலவுகளை செய்தன இணையத்தின் வரவு இல்லாத காலகட்டத்தில்.

உலக நாடுகளில் உள்ள வளர்ந்த தொழில் நிறுவனங்கள் தங்களின் முதலீட்டை திட்டமிடும் பொழுதே விளம்பர செலவுகளையும் சேர்த்தே திட்டமிடுகின்றன. 

தயாரிப்பு செலவு வெறும் இரண்டு ரூபாயாக இருந்தாலும் கூட இருபது ரூபாய்க்கு பொருட்கள் விற்கப்படுவதற்கான காரணம் விளம்பரங்கள் செய்ய ஆகும் கூடுதல் செலவுகளும் அடங்குவதால் தான். 

   செய்தித்தாள்களை பின்னுக்கு தள்ளிய தொலைக்காட்சிகளை இப்போது அடுத்த கட்ட அசூர வேகத்தோடு ஆக்கிரமிக்கும் இன்னுமொரு புதிய ஊடகமே இந்த இணையத்தளம் ஆகும்.


இடைவேளைக்கு பிறகு விளம்பரங்கள் தொடரும் 

-அருணேஸ்

2 comments:

புதிதாக தொழில் தொடன்குவோர் அனைவரும் படிக்கவேண்டிய பதிவு....

புதிய தகவல் ! நன்றி !

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More