இது இணை(ன்றை)ய உலகம்

       தொழில் முனைவோர் மற்றும் தொழில் வாய்ப்பை எதிர்பார்ப்போருக்கான எதிர்கால  பதிவுகள்.

இது இணை(ன்றை)ய உலகம்

    உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியை  சமாளிக்க முடியாமல் திண்டாடி  கொண்டிருக்கும்  இந்த  காலகட்டத்தில் சத்தமில்லாமல்  தன் எல்லையை மல மலவென வளர்த்து கொண்டிருக்கும் சமயோசித சகலகலலா வல்லவனே இணைய உலகம் ஆகும்.

   மொழிகளை கடந்து, எல்லைகளை கடந்து இனங்களை கடந்து அனைவரையும் சுண்டி இழுத்து, தன் கரங்களால் பினைத்திருக்கும் அழகிய ராட்ஷசனே இணைய தளம் ஆகும்.


எதிர்காலத்தை சரியாக கணிக்க தெரிந்தவர்களுக்கு இந்த ராட்ஷசனை பற்றி நல்லாவே தெரியும்.         உலகில் ஒவ்வொரு யுகம் தோன்றி மறைவதாக அனைத்து படைப்புகளும் தெரிவிக்கின்றன, ஆனால் அனைவரது கருத்துக்களிலும் இரண்டாவது உலகம் வெகு விரைவில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றும் என்பது கூற்றாக இருக்கிறது. அந்த இரண்டாம் உலகத்தின் தோற்றம், வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி பற்றி இனி வரும் பதிவுகளில் ஆழமாக காண்போம். ஆம்... ஆதி உண்டு அந்தம் இல்லாத கலியுக மகராஜா தா இணைய உலகம்.

நேற்றைய செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளையும் பின்னுக்கு தள்ளி தனது ஆளுமையை வேகமாக கோலோட்சி வரும் இணையத்தளத்தின் நாளைய நிலையை பற்றி தெளிவாக  இந்த தொடர் பதிவில் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்..

      ஒவ்வொரு தொழில்முனைவோரும் கட்டாயம் படிக்க வேண்டிய தொடர் பதிவுகளில் இணை(ன்றை)ய உலகம் நிச்சயமாக வரும்.

என்ன அருணேஸ் எதிர்கால பதிவுனா என்ன அர்த்தம்..?

இன்றைய நமது மக்களுக்கு  இப்போது தான் வேகமாக இணையத்தின் பயன்களும் அவசியமும் தெரிய வருகிறது. எமது நிறுவனத்தின் சந்தை தொடர்பாக ஒரு நிறுவனத்தின் மேலாளரை சந்தித்து பேசும் போது நான் சந்தித்த ஒரு வேடிக்கையான அனுபவத்தின் பலனாகவே இந்த இணைய உலகம்  உருவாகியது

" மக்கள் சந்தை.காம் இணையம் தொடர்பாக விளம்பரதாரர் ஒருவரை சந்தித்து அவரது விளம்பரத்தை இணையத்தளத்தில் குறைந்த செலவில் அதிக   வாய்ப்பை ஏற்படுத்தி  தருவது மக்கள் சந்தை.காம் இணையத்தளத்தின் நோக்கம்" என்றவாறு எமது செயல் திட்டங்களை பற்றிய கையேடுகளையும், மடிக்கணினியில் தள அமைவு போன்ற விபரங்களை காண்பித்து பேசிக்கொண்டிருக்கும் போதே அவர் மிக வெகுளியாக,  "ஆமா, உங்க இணையத்தளத்தில் கரண்டு பில் கட்டலாமா..? " என்று கேட்டார்.

எனது நிலைகுறித்து சற்றே நொந்து போனாலூம், அவரைப்போலவே இன்னும் அதிகப்படியான   தொழில்முனைவோர்கள் இணையத்தளத்தின் முழுமையை  சரியாக உணராமல் இருக்கின்றனர். மற்றும் தொழில் வாய்ப்பை  தேடுவோர்கள் கண்ட விளம்பரங்களில் நம்பிக்கையை இழந்து ஆர்வமற்றும் போகின்றனர். 

இணையத்தில் சம்பாதிக்க ஆசையும் அனுபவமும் மட்டும் இருந்தால் போதாது. ஒரு வித்தை தெரிய வேண்டும்..


உங்களுக்கும் அதை  அறிய ஆர்வம் இருக்கிறது தானே...?

காலப்பயணத்தில்...
செள.அருணேஸ்வரன்
1 comments:

பயனுள்ள பதிவு

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More