பெண்கள் உடல்நலப் பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு டிப்ஸ்....

பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் அதிகமான அளவில் இரத்தப்போக்கு ஏற்படுகிறது. பெண்களுக்குத் தேவையான சத்துக்களைப் பெற உதவும் உணவுப் பொருள்கள் பற்றி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. மாதவிடாய் சமயத்திலும், நிற்கும் சமயத்திலும் அவர்களுக்குத் தேவையான சத்துக்களை வழங்கும் இந்த உணவுப்பொருள்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் பிரச்னைகளை எளிதில் வென்றுவிடலாம்.

தக்காளி: "லைகோபென்' (Lycophene) எனும் வகை சத்துப்பொருள் தக்காளியில் அதிகம் காணப்படுகிறது. இந்த லைகோபென் சத்தானது மார்பகப் புற்றுநோய் மற்றும் இதயநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது. தக்காளி மிக அதிக அளவில் எடுத்துக்கொண்டால் சிறுநீரகப்பையில் கல் (Calcium Oxalate) உருவாகும் என்பதையும் நினைவில் கொள்க.

அத்திப்பழம்: பெண்களின் உடல் நலத்தில் முக்கியப் பங்காற்றுகிறது இந்த அத்திப்பழம். இதில் பல்வேறு வைட்டமின்களும், தாதுப்பொருள்களும் அடங்கியுள்ளன. அத்திப்பழத்தில் உள்ள இரண்டு சத்துக்கள் பெண்களுக்கு மிகவும் அவசியமானது. 1. இரும்புச்சத்து- மாதவிடாயின்போது பெண்களுக்கு உதவுகிறது. 2. கால்சியம்- மெனோபாஸ் நிலையில் இருக்கும் பெண்களுக்கு, எலும்புகளில் தேய்மானம் ஏற்படும். அத்திப்பழத்தை உட்கொள்வதின் மூலம் எலும்புகள் பலம் பெறும்.


பால்: பாலில்தான் கால்சியம் சத்துகள் அதிகம் உள்ளது. கால்சியம், வைட்டமின் "டி' சத்துக்களும் உள்ள உணவுப்பொருள்களை பெண்கள் உட்கொண்டால் மாதவிடாய் சமயத்திற்கு 5 -11 நாள்கள் முன்பு உடலில் ஏற்படும் சோர்வு, கோபம், வயிற்றுப்போக்கு, தலைவலி போன்றவற்றிலிருந்து விடுபடலாம்.

கீரைகள்: இதன் பெயரைக் கேட்டாலே பல பெண்களுக்கு அலர்ஜி. கீரைகளில்தான் அதிக வைட்டமின்களும் தாதுப்பொருள்களும் அடங்கியுள்ளன. கீரைகளில் மாங்கனீசியம் எனப்படும் சத்து அதிகமாக காணப்படுவதால் மாதவிடாய் சமயத்தின் போது ஏற்படும் கை, கால் வீக்கம், எடை அதிகரித்தல் போன்றவற்றை நீக்கும்.

நன்னீர் மீன்கள்: நன்னீர் மீன்களில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதில் ஓமேகா-3 என்ற ஃபேட்டி அசிட் உள்ளது. இந்த ஒமேகா-3 மாதவிடாய் சமயத்திற்கு முன்பு ஏற்படும் மனஅழுத்தம், உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கிறது. கர்ப்பிணிகள் இதனை உட்கொண்டால் கருவில் உள்ள குழந்தையின் அறிவுத்திறன் தூண்டப்படுகிறது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More