அன்பின் சக்தி (1)     நாம் உண்ணும் உணவிற்கு சக்தி இருப்பதை நாமெல்லாம் அறிவோம். அதுப் போல் குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று,கேட்கும் ஓசை இப்படி எல்லாவற்றிற்கும் ஒரு வித சக்தி இருப்பதை நாம் அறிவோம்.

     ஆனால் நம் மனதுக்குள்ளிருந்து வெளிப்படும் அன்பிற்கு இருக்கும் சக்தியைப் பற்றி மட்டும் தான் நாம் அறிவதில்லை. அறிந்துக் கொள்ள விரும்புவதுமில்லை. ஏனென்றால் நம் மனம் இந்த உலகத்தின் புறப்பொருட்களிலேயே சிக்கி வெளிவர முடியாமல் அதிலேயே மூழ்கிவிடுகிறது. அதனால் அன்பிற்கு இருக்கும் சக்தியை நம் மனம் ஏற்றுக் கொள்வதில்லை.
     இதற்கு சரியான உதாரணம். நம் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லலாம். ஒரு குழந்தைக்கு தாய்ப் பாலை விட சக்தி தரக் கூடிய பால் வேறு எதுவுமில்லை. ஏனெனில் அது வெறும் உணவு மட்டுமல்ல உணர்வையும் சேர்த்துக் குழந்தைக்கு தருகிறது. ஆனால் இன்றோ பலப் பெண்கள் சில காரணங்களினால் தன் குழந்தைக்கு தாய்ப் பாலை தவிர்க்கின்றனர். ஆரம்பத்திலேயே குழந்தைக்கான அன்பின் சக்தி மறுக்கப்படுகிறது.
     வீட்டில் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்று வைத்துக் கொள்வோம். அவரை சில உணவு வகைகளை சாப்பிடக் கூடாது என்று மருத்துவர் சொல்லியிருப்பார். உடனே பெரும்பாலானவர்கள் வீட்டில் அவரை அந்த உணவு வகைகளை தவிர்க்கச் சொல்லிவிட்டு, அவர்கள் முன்னிலையிலேயே அந்த உணவை சமைத்து வைத்து உண்பார்கள். இது உடல் நிலை சரியில்லாதவரின் மனநிலையில் சற்று சோர்வைத் தரும்.
     நான் சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு செய்தி. நீரழிவு நோயுள்ள ஒருவர் மருந்துக்குக் கூட சர்க்கரையைத் தொடாதவர். அவரிடம் எப்படி உங்களால் இப்படி இருக்க முடிகிறது என்று கேட்டார்கள். அதற்கு அவர்  சொன்ன பதில்:
     நானும் மற்றவரைப் போல் தான், சர்க்கரையை விட முடியாமல் இருந்தேன். இரண்டு வருடத்திற்கு முன் ஒரு முறை என் மனைவியிடம் காபிக் கேட்டேன். அப்பொழுது எனக்கும் அவளுக்குமாக இரண்டு கோப்பையை எடுத்துக் கொண்டு வந்து என்னருகில் இருக்கும் மேஜையில் வைத்தாள். அந்நேரம் வெளியில் யாரோ அழைக்க, அவள் வெளியில் சென்றுவிட்டாள். நான் அவள் வருவதற்குள், அவளுக்கு வைத்திருந்த காபியைக் குடித்துவிடலாமென்ற என்ற எண்ணத்தில், அவள் அருந்த வேண்டிய கோப்பையில் இருக்கும் காபியை எடுத்துக் குடித்தேன்.
     என்ன கொடுமை, அதிலும் இனிப்பு இல்லை. அவளுடைய கோப்பையிலும் சர்க்கரை சேர்க்கவில்லை. நான் அந்த காபியை அருந்திவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தேன். அவள் வந்து இன்னொரு கோப்பையில் உள்ள காபியை அருந்தினாள். அவள் அருந்திய காபியிலும் சர்க்கரை சேர்க்கவில்லை.
     அவளிடம் காரணம் கேட்டேன். ஏன் சர்க்கரை சேர்க்கவில்லை என்று...?
என்னிக்கு உங்களுக்கு இந்த குறை வந்ததோ அந்த கணமே இந்த சனியனை (சர்க்கரையை) நான் சேர்த்துக் கொள்வதே இல்லை என்றாள். அந்த நொடி சர்க்கரையை விட அவள் அன்பு எனக்கு இனிப்பாகத் தெரிந்தது. அந்த நொடியில் இருந்து எனக்கு சர்க்கரை மேல் உள்ள ஆசை போய்விட்டது என்று முடித்தார்“.
     ஒருவரின் மனதிற்கு அன்பு எந்தளவு சக்தி தருகிறது என்பதை இதிலிருந்து நாம் தெரிந்துக் கொள்ளலாம். இந்த மாதிரியான அன்பின் புரிதல் எல்லோருக்கும் சாத்தியப்படாமலே இருக்கிறது
     காரணம் அன்பென்ற சக்தியை நாம் சரியாக பயன்படுத்துவதில்லை என்பது தான். அந்த சக்தியை எப்படி பயன்படுத்துவது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்

7 comments:

அருமை..அன்பின் சக்தி மிக அதிகம்,,,
வாழ்துகள் ராஜா..

அன்பின் ஆற்றலை பரப்பச்செய்யும் கட்டுரை மிக அருமை

சக்தியின் ஆற்றலை ஒருங்கினைத்ததை நயமாக வெளிப்படுத்திவிட்டீகளே.நண்பா.

தொழிற்களம் குழுவினருக்கு நன்றி. ஒரு சின்ன வேண்டுகோள் எனக்கு ரிப்ளை பட்டன் வேலை செய்யவில்லை.

தமிழ்ச்செல்வி அவர்களே உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி

மதுரகவி அவர்களே உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

சில செல்களுக்குதான் இங்கு சரியான சிக்னல் கிடைக்கும் ராசா.( ரிப்ளை வரும் ஆனா நமக்கு வராது )

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More