ஆன்மீகம் வெறும் அறிவியலா ? [ 1 ]

                       

'ஆன்மீகம் வெறும் அறிவியலா ' என்ற இத்தலைப்பு
ஒரு சிலருக்குப் பட்டிமன்றத் தலைப்பு போன்றும்
ஒரு சிலருக்குக் கேள்வி போலும்
ஒரு சிலருக்கு ஒரு தீர்ப்பு போலும் தோன்றக் கூடும் ,
அவரவர் எண்ண ஓட்டத்திற்குத் தகுந்த படி.

என் எண்ண ஓட்டத்திற்குத் தக்கபடி , ஆம்  அது ஓர் தீர்ப்பே.
அது ஓர் அறிவியலே ! ,  ஏன் ? என நான் தீர்மானிக்கும் காரணங்களை
நான்  படித்த , பார்த்த , கேட்ட விஷயங்களை மற்றும் என் அனுமானங்களை
இங்கே உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள  ஆசைப்படுகிறேன்.

இந்த இரண்டு வார்த்தைகளுமே எண்ணில் அடங்கா அர்த்தங்களையும்

கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ள சமுத்திரங்கள். ஆனால் ஆன்மீகத்தின் சாராம்சம்
'உயிர்களிடத்தில்  அன்பு ' & அறிவியலின் சாராம்சம் ' அந்த உயிர்களின் முன்னேற்றம்'  .
இரண்டுமே இறுதியில் மனிதர்களின் முன்னேற்றதிற்குத்  தான் பாடுபடுகின்றன.

இரண்டும் ஒன்றோடு  ஒன்று பின்னிப் பிணைந்து எப்படி அதுவாகவே

 ஆகி விடுகிறது என அறிவியல் நோக்கில் இனி பார்ப்போம். ஆனால்
இதில் மிகச் சரியான வேதியியல் பெயர்கள் , கோட்பாடுகள் என்று இருக்காது.
பொதுவான கருத்தை , ஏன் நம் முன்னோர்கள் சாஸ்திர , சம்பிரதாயங்களை
 ஏற்படுத்தி வைத்தார்கள் என்ற காரணங்களை சற்று  உற்று நோக்கி அறிந்து கொள்ள முற்படுவோம்.

1 .  முதலில் வார நாட்களை , எந்த எந்த கிரக ஆதிக்கம் அந்த நாளில் அதிகம் உள்ளதோ அதன் பெயரிலேயே

நாம் அதனை அழைப்பதே இது ஓர் அறிவியல் என்பதற்கு முதல் சான்று .

2 .  நம் உடலில் ஒவ்வொரு அணுவில் உள்ள DNA மூலக்கூறும் , ப்ரோடீன்களால் ஆன அதன்

குரோமோசோம்களும் இரு நாகங்களும் பின்னிப் பிணைந்தது போல்   இருக்கும் அதன் படம்
நமக்கு ராஹு கேதுக்களின் வடிவத்தையும் வழிப்பாட்டையும் மறைமுகமாக உணர்த்திப் போகின்றன.
தற்போது உலகெங்கிலும் DNA டெஸ்ட் செய்து கொள்வது என்பது ஒரு பெருமைக்குரிய மரபாக ஆகி வருகிறது என்று ஒரு நாளிதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டு இருந்தது.

3 . ஜோதிடத்திலே நவக்ரகங்களுக்கு  உரிய தான்யம் , சமித்து , ரத்தினங்கள் போன்றவைக் குறிக்கப் பட்டுள்ளன.

இதில் புதனுக்குரிய பச்சைபயிறும் , குருவுக்கு உரிய கொண்டைக்கடலையும் , சுக்ரனுக்குரிய மொச்சையும்
DNA விற்குத் தேவையான ப்ரோடீன்கள் கொண்டவை என்பதானால் அதனை நம் முன்னோர்கள் ஆருடம் மூலம் கணித்து குறைவாக இருந்தால் அதை சுண்டலாக செய்தும் , அதிகமாக இருந்தால் பிறருக்குத் தானமும் செய்ய அறிவுறுத்துகின்றனர் கோவில் வழிபாடு மூலமாக.

4. தற்காலத்தில் ஜாதகப்  பொருத்தமுடன்  ரத்தப்பொருத்தமும் பார்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

நம் ஜாதகத்தில் உள்ள 'செவ்வாய்'  நம் ரத்தத்திலுள்ள 'RH '  பண்பை குறிக்கின்றது என்பது நாம் அனைவரும் அறிந்த அறிவியல் உண்மையே.

5 . சூர்ய நமஸ்காரம் செய்வது நமக்கு சூரியனில் இருந்து மட்டுமே கிடைக்கக்கூடிய , கால்ஷியம் சத்திற்கு மிக தேவையான வைட்டமின் 'D ' கிடைப்பதற்காகதான்.


6 . மார்கழி மாத அதிகாலைத் துயில் எழுதல் , கோலமிடுதல் நாம் அந்த மாதத்தில் அதிகமாகக் கிடைக்கக்கூடிய

ஒசான் காற்றை சுவாசித்து ஆரோக்கியத்தைப்  பெருக்கத்தான். எனவே ஸ்ரீ கிருஷ்ணர்  மாதங்களில் மார்கழியாக உள்ளார்.

                                                                                                     தொடரும் ...

5 comments:

ஆன்மீகத்தில்அறிவியல் வேண்டாம்விஷபரீச்சை.

மன்னிக்கவும் . நம் சாஸ்திர சம்பிரதாயங்கள் வெறும்
மூட பழக்கவழக்கங்களே என்று வாதிடும் இத்தலைமுறை பகுத்தறிவு
சிந்தனையாளர்களுக்காகவே இந்த அறிவியல் சார்ந்த விளக்கங்கள்.
நாம் எதற்காக அதை செய்கிறோம் என்பதைத் தெரிந்து , புரிந்து செய்யும் போது
அதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். ஒரு மன நிறைவு கிடைக்கும்.
இத் தலைமுறையினருக்கு அதை எடுத்துச் சொல்ல புரிய வைக்க
நாம் கடமை பட்டவர்களாவோம். அதனால் நம் பாரம்பர்யம் காக்கப்படும்
என்பதே என் வலுவான எண்ணம்.

சபாஷ்! சரியான போட்டி! நடக்கட்டும்!

சிறப்பான அலசல்! அருமை!

இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
http://thalirssb.blogspot.in/2012/08/4.html
டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html

dont compare with science with aanmigam.aanmigam oru unmaiyanathu...so kindly avoid like this posting.in future..thanks.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More