அவசியம் கவனிக்கவும் ( பகுதி-2 )

பாதசாரிகள் கவனத்திற்கு

1.சாலையில் பாதசாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி மற்றும் நடைபாதையில் செல்லவும்.

2.சாலையில் செல்லும்போதும்,சாலையை கடக்கும்போதும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கைகோர்த்து அணியாக செல்லாதீர்.

3.சாலையை கடக்கும் முன்பு இருபுறமும் பார்த்து செல்லவும்.

4.சாலையை நேராக கடக்கவும்.

5.பிரதான சாலைகளில் சாலையை கடக்க சுரங்க பாதை அமைத்து இருப்பின் அதனை பயன்படுத்தவும்.

6.சாலையில் பாதசாரிகளுக்கு என்று இடமில்லாத இடங்களில் வலது புறமாக ஓரமாக செல்லவும்.

7.சாலையை கடக்க ஒதுக்கப்பட்ட மற்றும் வெள்ளை வரிகோடுகள் அமைக்கப்பட்ட பகுதிகளில் சாலையை கடக்கவும்.

8.நின்று கொண்டிருக்கும் வாகனத்தின் முன் பக்கத்தில் இருந்தோ,பின் பக்கத்திலிருந்தோ சாலையை கடக்க வேண்டாம்.

9.போக்குவரத்து காவலரின் சமிக்ஞைகளுக்கு கட்டுபடவும்.

10.முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து காவலர் சமிக்ஞைகளுக்குப்பின் சாலையை கடக்கவும்.

11.படிக்கட்டில் நின்று பேருந்தில் பயணம் செய்ய வேண்டாம்.

12.சமிக்ஞை விளக்கு பொறுத்திய சாலையை கடக்கும்போது சிகப்பு விளக்கு எரிந்தால் நிற்கவும்.

13.சமிக்ஞை விளக்கு பொறுத்திய சாலையை கடக்கும்போது பச்சை விளக்கு எரிந்தபின் சாலையை கடக்கவும்.

14.ஓடும் பேருந்தில் ஏற முயற்சி செய்ய வேண்டாம்.

15.வாகனங்கள் ஒலி எழுப்பும்போது கவனித்து செல்லவும்.

16.பொது சாலையில் செல்லும்போது குப்பை,இரும்பு,ஆணி,கண்ணாடி மற்றும் வாழைப்பழத்தோல் போன்ற அவசியம் அற்ற பொருட்களை போடாதீர்.

17.வாகனங்களின் மேற்கூரையில் பயணம் செய்ய வேண்டாம்

18.சாலையை கடக்கும்முன் இருபக்கமும் வாகனம் வரவில்லை என்று உறுதி செய்தபின் சாலையை கடக்கவும்.

19.சிறுவர்கள்,வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றறோர்கள் சாலையை கடக்க உதவி செய்யுங்கள்.

20.ஓடும் வாகனத்தில் இருந்து இறங்க முயற்சி செய்யவேண்டாம்.

21.பேருந்து நிறுத்தம் அல்லாத இடங்களில் வாகனத்தில் இருந்து இறங்க வேண்டாம்.

22.பயணத்தின்போது தலை,கை,கால் ஆகியவற்றை வெளியே நீட்டாதீர்.

23.பேருந்தில் பயணம் செய்யும்போது ஓட்டுநருக்கு இடையூறாக அமரவோ,ஓட்டுநருடன் பேசவோ செய்யவேண்டாம்.

24.சாலை குறியீடு பலகையின் மீது விளம்பரங்கள் ஒட்டவோ,எழுதவோ கூடாது.

25.சாலையை கடக்கும் இடம்,முக்கிய சாலை மற்றும் திருப்பங்களில் நின்று பேசுவதை தவிர்க்கவும்.

26.சாலையை கடக்கும்போது ஓடாதீர்.

27.ஓடும் வாகனத்துடனே தொடர்ந்து ஓடாதீர்.

28.சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து போக்குவரத்திற்கு இடையூறு செய்ய வேண்டாம்.

29.சாலைகளில் கால்நடைகள் உலாவிட அனுமதிக்காதீர்.

30.சாலை பிரிப்பினை ( Divider ) குறுக்கே தாண்டி செல்லாதீர்.

1 comments:

அவசியம் பயனுள்ள தகவல்..

நன்றி!!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More