ஆன்மீகம் வெறும் அறிவியலா ? [ 2 ]
நம் பாரம்பர்யத்தின் உள் மறைந்து கிடக்கும் அறிவியல் அதிசயங்களை
சிறப்புகளைத் தொடருகிறேன் .....

7 . மாவிலை தோரணம் நாம் வெளி இடக்கூடிய  கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சிக்கொள்வதானால்
நாம் அதனை மக்கள் அதிகமாகக் கூடும் கோவில் திருவிழாக்களிலும் , வீட்டு விசேஷங்களிலும் அதைக் கட்டுகிறோம். 

அம்மை நோய்க்கு உபயோகப்படுத்தும் வேப்பிலை ஒரு வைரஸ் கொல்லி. துளசி வாய்வை நீக்கி மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவிடும் ஒரு அற்புத மூலிகை. எனவே துளசி தீர்த்தம் கோவில்களில் தரப்படுகிறது . 

விநாயகருக்கு உகந்த அருகம் புல்லும் அவ்வாறே . ரத்தத்தை சுத்திபடுத்தி  மிகுவெப்பதை நீக்குகிறது.நம் சென்னையில் கடற்கரையில் இதன் ஜூஸ் விற்கபடுகிறது.
 எலுமிச்சை ஒரு ஜீவ கனி. புற்றுநோய்க்கு அருமருந்து எனத் தற்போது கண்டு பிடித்துள்ளனர்  . இன்னும் உள் இறங்கி நன்கு ஆராய்ந்தால் என்ன
என்னவெல்லாம் நமக்குத் தெரிய வருமோ ?! 
அதனால் நாம் இந்த தெய்வீக மூலிகைகளை
வெளிப்பூச்சாகவோ , உள்  மருந்தாகவோ உட்கொள்வது நம் நன்மைக்கே.

8 . அரசமரத்தை சுற்றி வந்து பிள்ளைவரம் கேட்பது என்பது வழக்கத்தில் உள்ள ஒரு நடைமுறை.

ஏனெனில் அந்த அரசமரக்காற்றிற்குப பெண்களின் கருப்பையிலுள்ள கோளாறுகளை  நீக்க வல்ல சக்தி உள்ளது.
அதனால் அதை  சுவாசித்து நலம் பெற வேண்டியே சுற்ற சொல்கின்றனர். பகவான் மரங்களில் அரசமரமாக இருப்பது என்பது அதன் மருத்துவ சிறப்பை நாம் உணரத்தான்.

9 . தர்ப்பைப்புல் , தண்ணீர் போன்றவை ஒலி கடத்திகள் , உள்வாங்கிகள். கெட்ட கதிரியக்கத்தை தடுக்கக்  கூடியவை  இன்றைக்கு நாம் செவி உணரா  அலைகள் மூலம் [ ultrasound waves ] , அகச்சிவப்பு கதிர்கள் மூலம் எதனை எதனை பயன்கள் பார்க்கிறோம் கடலின் ஆழத்தை அறிவது முதல் , கேன்சர் குணமடைவது வரை. அதை நம முன்னோர்கள்

மந்திர வடிவிலும் , புனிதகலச நீர் வடிவிலும் வழிபாட்டுமுறைகளை சொல்லி வித்து சென்றனர் தீர்க்கதரிசியாக.
தாமிரமும் ஒரு மின்கடத்தி என்பதால் நாம் செப்பு பாத்திரங்களையும் , செப்பு கையணியையும் பயன்படுத்துகிறோம்.

10 .  நம் மூதாதையர்கள் நமக்கு சொத்து அல்லது கடன் மட்டு அல்ல பரம்பரை வியாதிகளையும் , பாவங்களையும் பரிசாக விட்டுச் செல்கின்றனர். பாதிப்பு 7 தலைமுறைகள் என்பதனால் நாம் அமாவாசைத் தர்ப்பணம் செய்கிறோம்.

இன்றைய மருத்துவ விஞ்சனமும்   ஜின்ஸ் பற்றி அதிகம் பேசுகிறது . நாம் இதை எல்லாம் எத்தனை நூற்ற்றண்டுகளுக்கு முன்பே உணர்ந்து செயல்படுத்திக் கொண்டு வருவது நாமெல்லாம் பெருமை தரத்தக்க விஷயம்.

12.  நாம் விதவிதமான வாசனை மலர்களை கொண்டு அர்ச்சனை செய்வதற்கும் , இன்றைய அரோமதெரபி க்கும்
உள்ள தொடர்பை இந்நேரம் நீங்கள் ஊகித்து இருப்பீர்கள்.

13 . விளக்கு  ஏற்றுவது , சாம்பிராணி போடுவது , ஹோமங்கள் செய்வது போன்றவை நம் சுற்று சூழலில் உள்ள அசுத்தத்தை நீக்கி

நமக்கு ஒரு positive சக்தி அளிப்பதற்கே. போபாலில் அக்னிஹோத்ரம் செய்த ஒரு குடும்பம் விஷவாயு தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்ததே  இதற்கு சான்று.

14. பூசணி கொண்டு  திருஷ்ட்டி சுற்றிப்  போடுவதும் , சூறைத் தேங்காய் உடைப்பதும் எதனால் என்றால் அவைகளுக்கு நம் உடலில் உள்ள நெகடிவ் சக்திகளை உறிஞ்சுக் கொள்ளும் ஆற்றல் இருப்பதால் தான்.

aura சுத்தபடுத்தப்பட்டு  வலுபெறுகிறது.

15 . கங்கை நீரில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள்  வாழாதாம் , வளராதாம். இதைப்பற்றி , நம் வேதங்களின் சிறப்பைப் பற்றி மேல்நாட்டோர் பல ஆராய்சிகள் செய்து நம் பெருமை போற்றுகின்றனர். நாம் தான் அதன் சிறப்பைப் பற்றி உணராமல் சிறந்த பகுத்தறிவாளர்கள் போல் , எல்லாம் தெரிந்த அறிவியலாளர்கள் போல் நடந்து கொள்கிறோம். கேலி செய்கிறோம்.

அனைத்திற்கும் நமக்கோர் WSO [western  certificate ] தேவைப்படுகிறது.

16 . நம் தோப்புகரணம் ' brainyoga ' என்றபெயரில் அவர்கள் பின்பற்றுகின்றனர்.  யோகா , accupressure , வானவியல், ரெய்கி போல இன்னும் எத்தனை எத்தனையோ அருபெரும் கலைகளை  நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்று உள்ளனர். காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பதை உணர்ந்து நாம் அவற்றை பின்பற்றாது போனாலும் ஏளனம் செய்யாமல் இருப்போமாக.

இன்றளவும் நம் மகான்கள்  ஞ்சான திருஷ்டியால் கண்டுஅறிந்த படிதானே .. பஞ்சாங்கம் என்ற அற்புத டிரெக்டரி படிதானே கிரஹணங்களும் நடைபெற்று வருகின்றன.  இந்த ஒரு சாட்சியே , ஒரு பருக்கையே நம் பெருமை பேசாதா ?
ஆனால் இன்றைக்கு நம் சொற்றுகற்றாழை , மஞ்சள் முதல் மேல்நாட்டோர்  காப்புரிமை வாங்கி வைத்து விட்டார்கள். நம் acupuncture சீன உரிமையாகி விட்டது. இப்படி எத்தனையோ அரியவைகளை நாம் இழந்து விட்டோம் .
17 . 'ஓம்' என்னும் நம் அதி சிறப்பு வாய்ந்த பிரணவ மந்திரத்தின் ஒலி வானில் கோள்கள் தத்தம் நீள் வட்டப்பாதையில் சுழலும் போது ஏற்படும் ஒலிக்கு நிகராக உள்ளதாம். பீஜ மந்திரங்கள் இதை அடிப்படையாகக் கொண்டவை என்கின்றனர்.

நான் மேலே குறிப்பிட்டது சிறிதே. இன்னும் எவ்வளவோ அர்த்தங்களை உள்ளடக்கியது  நம் தர்மங்கள் . அதில் காலத்திற்கு ஒவ்வாதவனவற்றைத் தள்ளி கொள்ள வேண்டியன வற்றை நாம் கொண்டு இனிமேலாவது சிறப்புற வாழ்வோம் .  


2 comments:

அரசமரத்தை சுற்றி வந்து பிள்ளைவரம் கேட்பது என்பது வழக்கத்தில் உள்ள ஒரு நடைமுறை.
ஏனெனில் அந்த அரசமரக்காற்றிற்குப பெண்களின் கருப்பையிலுள்ள கோளாறுகளை நீக்க வல்ல சக்தி உள்ளது.
(அரச மரம்- 24 மணி நேரமும் பிராண வாயுவை வெளியேற்றும் ஒரே மரம். செடிகளில் துளசி. எனவே தான் பெரியவர்கள் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர்)
ஸ்ரவாணி அவர்களே நீங்கள் பதிவிட்ட ஒவ்வொரு தகவலும் பயனுள்ளத் தகவல். இதை சற்று இன்னும் ஆழமாக அறிவியல் விளக்கங்களுடன் சொல்லலாம் என்று இந்தப் பதிவை படித்தவுடன் எனக்குத் தோன்றியது. அதை நான் பதிவிடலாமா...?

கண்டிப்பாக சார் , இதில் என்ன அனுமதி ??
புகுந்து கலக்குங்க சார் !
இதைப் போன்ற பதிவுகள் , அதாவது நாம் நல்லது என்பனவற்றை எல்லாம்
கடவுள் பெயரில் செய்து கொண்டு இருக்கிறோமே ..அதன் மகிமையினை
பெருமையினை யார் சொல்லக் கேட்டாலும் எனக்கு தித்திக்கும்.
ஆவலுடன் எதிர்பார்த்து ...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More