திரையுலகில் புதிய சலனத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கும் கேனான் 5டி (2)     இன்று கையில் 10 லகரத்திற்கு மேல் பணம் வைத்திருப்பவர்களெல்லாம் ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கென்றே ஒரு இயக்குனரும் கிடைத்துவிடுகிறார்கள். கோடிகளில் இல்லாமல் சில லட்சங்களிலேயே ஒரு திரைப்படத்தை எடுத்து லாபம் பெற முடியும் என்பது எவ்வளவு ஆச்சர்யமான செய்தி.
     ஆனால் இதை நம்பிப் பணத்தை இதில் முதலீடு செய்தவர்கள் அனைவருக்கும் திரையுலகம் லாபம் ஈட்டித் தந்ததில்லை. காரணம் தொழில்நுடப்த்தைப் பற்றித் தெரியாமல் வெறும் வாயில் கதைச் சொல்லியே திரைப்படத் தயாரிப்பாளர்களின் பணத்தை நஷடப்பட வைத்த இயக்குனர்கள் தான் இங்கு அதிகம். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எந்தளவு குறைந்த செலவில் லாபம் ஈட்டித் தரும் ஒரு படத்தைத் எடுக்கலாம் என்ற கலையும் இங்கு நிறைய கலைஞர்களுக்குத் தெரியவில்லை.
     ஆனால் இப்பொழுதோ பல தொழில்நுட்பக் கலைஞர்கள் கையில் தமிழ்த் திரையுலகம் சென்றிருக்கிறது. அது மட்டுமின்றி படச்சுருள் மூலம் மட்டுமே தரமான திரைப்படத்தைக் கொடுக்க முடியும் என்ற நிலையைத் தான்டி இன்று நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் டிஜிட்டலிலும் நல்லத் தரமான திரைப்படத்தை தர முடியும் என்று சில படங்கள் நிரூபித்திருக்கின்றன. அதற்கு இந்த கேனான் 5டி ஒரு வழிகாட்டியாக சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்களுக்கெல்லாம் அமைந்திருப்பது 100 சதவீதம் உண்மை. இதற்கு மாற்றாக டிஜிட்டலில் பல படகருவிகள் இருந்தாலும். திரைத்துறையினர் பலரின் விருப்பமாக தற்பொழுது கேனான் 5டி மட்டுமே உள்ளது. இதைக் கொண்டு நல்லத் தரமானத் திரைப்படங்களை குறைந்த செலவில் நிச்சயம் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் நிறைய தயாரிப்பாளர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
     இத்துடன் அதைக் கையாளும் சிறந்த தொழிநுட்பக் கலைஞர்களும், இயக்குனர்களும் களத்தில் தயாரிப்பாளர்களுடன் இருப்பார்களென்றால் நிச்சயம் அவர்களின் முதலீடு பன் மடங்காகும் எனபது திண்ணம்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More