வளமோடு வாழுங்கள் ( பகுதி - 7 )

அனைவருக்கும் வணக்கம்.

படிக்கட்டு நிலை பிரித்தல் திட்டம் ;

   இந்த வகை திட்டம், தனிப்பட்ட மற்றும் குழு விற்பனை அளவுகளுக்கு பிரதிநிதிகளை உள்ளடக்கியது.
   அதாவது விற்பனை அளவானது, வாடிக்கையாளர்களை சேர்த்தல் மற்றும் பொருட்களின் சில்லரை விற்பனைகள் கொண்டதாகும். குழுதலைவர்களுக்கு பல தள்ளுபடிகளும்,சலுகைகளும் வழங்கப்படும். ஒன்று மற்றும் அதற்கு மேற்பட்ட கீழ் வரிசை நபர்கள் சேர்க்கப்பட்ட பின் எந்த பிரதிநிதியும் குழுதலைவர் ஆகலாம்.
   தனிப்பட்ட மற்றும் / அல்லது குழு ,வரையருக்கப்பட்ட விற்பனை அளவுகளை அடைந்தவுடன், ஒரு பிரதிநிதியானவர் கமிஷன் பெறும் நிலைக்கு நகர்த்தபடுகிறார்.அவரின் விற்பனை அளவு,அவர் முதன்மை கமிஷன்நிலையை அடையும்வரை தொடரும்.
   அதன்பின்னர் அவர் மேல்வரிசையிருந்து பிரிக்கப்படுவார்.அந்த நிலைக்கு பின்,புதியகுழுவானது,மேல்வரிசை குழுவின் பகுதியாக கருதப்படாது மேலும் படிநிலை கமிஷன் முடிவுக்கு வரும்.
ஆனால் உண்மையான மேல்வரிசையானது,தொடர்ந்து கூடுதல் கமிஷன்  மற்றும் பிற சன்மாணங்கள் மூலம் வருமானம் பெறும்.

அணிவரிசை திட்டம் ;

   இது ஒற்றைநிலைதிட்டம் போன்றது ஆகும்.ஆனால் இதில் முதல் நிலையில் வைக்கப்படும் விநியோகிப்பாளர்களின் எண்ணிக்கையில் கட்டுபாடு உண்டு.
   முதல்நிலையில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையை கடக்கும்போது,புதியவர்கள் தானாகவே அடுத்தநிலை கீழ்வரிசையில் சேர்க்கப்படுவார்கள்.
   அணிவரிசைதிட்டங்களில் அதிகபட்ச அகலம் மற்றும் ஆழம் ஆகியவை உண்டு.ஒருவிநியோகிப்பாளரின்,கீழ்நிலை அணியில் அனைத்து இடமும் நிரம்பியவுடன் ( அணியின் எல்லா பங்கேற்பாளர்களும் இணைந்து அதிகபட்ச அகலம் மற்றும் ஆழம் ) ஒரு புதிய அணிவரிசையைத் தொடங்கலாம்.
ஒற்றைநிலைதிட்டம் போல,அணிவரிசையில் உள்ள விநியோகிப்பாளர் ஏராளமான கமிஷன்களை பெறுவர்.ஆனால் வரம்பு உடைய அளவு மற்றும் விற்பனை ஒதுக்கீடு பெற்று இருப்பர்.

இருமுனை திட்டம் ; 

   இது ஒரு விநியோகிப்பாளர் இரண்டு முதல்நிலை விநியோகிப்பாளர்களை கொண்டுஇருக்ககூடிய திட்டம் ஆகும். இரண்டுக்கும் அதிகமாக நபர்களை அறிமுகம் செய்தால்,கூடுதல் நபர்கள்,
அறிமுகப்படுத்தும் விநியோகிப்பாளருக்கு கீழே சேர்க்கப்படுவார்கள். இந்த வகையானது,இந்த முறையின் மிகவும் ஈர்க்ககூடிய அம்சம் ஆகும். ஏனெனில் ஒரு விநியோகிப்பாளர் இரண்டு நபர்களை வாடிக்கையாளர்ராக பரிந்துரைத்தால் போதும்.
இதன்முக்கிய கட்டுபாடு என்னவென்றால்,கமிஷன்களை தொடர்ந்து பெறுவதற்கு,விநியோகிப்பாளர்கள், அவர்களின் கீழ்வரிசையின் இரண்டு முனைகளையும் சமமாகபராமரிக்கவேண்டும்.அதாவது ஒருகீழ்வரிசையில் உள்ளவர்களின் மொத்த விற்பனையில் குறிப்பிட்ட சதவீதத்திற்குமேல் உள்வாங்கப்படாமல் இருக்கும்படி பார்த்துகொள்வது.

கலவை திட்டம் ;

   ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட திட்டங்களை இணைத்து உருவாக்கபடுவது ஆகும்.

  

   ண்பர்களே வரும் நாட்களில் இதன் சாத்தியகூறுகளை ஆராய்வோம்.

சரியான சந்தர்ப்பம் தானா ?

V.GOPALAKRISHNAN.IBAI.
HELLTH AND WELLTH PRAMOTER.


1 comments:

தொடர்ந்து எழுதுங்கள் கவியரே!!

எதிர்பார்கிறோம்.. இன்னும் அதிகமான தகவல்களை ..

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More