விஷமாகும் மாட்டுப்பால்... கர்ப்ப காலத்திற்கான எச்சரிக்கை!

நேற்று காலையில் பக்கத்து வீட்டு அக்கா கலாவதியின் மாமியார்  பதற்றத்துடன் எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர் முகத்தில் வழக்கமாக இருக்கும் கலையைக் காணவில்லை. நான் யதார்த்தமாக, அவரின் மருமகள் கலாவதியைப் பற்றிக் கேட்டேன். கலாவதி கருத்தரித்து இரண்டு மாதங்கள் ஆகிறது.

"அட, அத ஏன்பா கேட்கிற.. என் மருமகளுக்கு அதிகாலையில் ஒரே வாந்தி, குமட்டல் வந்தது. அதனால், என் மகன் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டான்" என்று கவலையுடன் கூறினார். நானும் கலாவதி அக்காவிற்கு சாதாரண காய்ச்சலாகத் தான் இருக்கும் என்று எண்ணியபடி, கலாவதியின் மாமியாருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு  விடைபெற்றேன். 

மாலை அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பிய பிறகுதான் கலாவின் உடல் மோசமான நிலையில் இருக்கிறது என்று தெரிந்துகொண்டேன். அத்துடன் கலாவின் கருவும் கலைந்துவிட்டது. அவரின் மாமியாருக்கு இன்னும் கவலை அதிகமாயிற்று. நான் அவரிடம் பேச்சு கொடுத்தேன்.

"நேற்று காலை கலாவதி அக்கா என்ன சாப்பிட்டாங்கம்மா?"

"காலையில் எதுவும் சாப்பிடலப்பா.. நேத்து முன்தினம் இரவு கொஞ்சம் பால் குடித்துவிட்டு படுத்தவள் தான்ப்பா.. நேத்து காலையில் வாந்தி தான் எடுத்தாள். அதோட, அவள் கருவும் கலைஞ்சு போச்சுன்னு டாக்டர் அம்மா சொன்னாங்கப்பா.." என்று அவர் அழுதுகொண்டே சொன்னார்.
கருக்கலைவு எதனால் உருவாகிறது என்று தேடியதில் சில ஆச்சரியமான தகவல்கள் கிடைத்தன. அவை உங்கள் பார்வைக்கு:

கலாவதியின் கர்ப்பம் கலைந்ததற்கு பால் ஒரு முக்கிய காரணம். பாக்கெட் பாலில் சத்துக்கள் குறைவு என்பதால், இயற்கையான பசு மாட்டுப்பாலை அவர் அருந்தியிருக்கிறார்.

இப்போதெல்லாம், மாடு அதிகமாக பால் சுரக்க 'ஆக்சிடோசின்' (Oxytocin) எனும் ஊசியைப் போடுகிறார்கள். 'ஆக்சிடோசின்" இயற்கையாக பெண்ணின் உடலில் சுரக்கும் ஹார்மோன். ஆனால், அது சாதாரணமான வேளைகளில்  சுரக்காது. கர்ப்ப காலத்தின் கடைசி நேரத்தில், அதாவது குழந்தை பிறக்கும் தருவாயில் சுரப்பதால், கருப்பை விரிவடைந்து குழந்தை வெளியேறும். அத்துடன் தாய்ப்பாலும் உருவாகும். 

மாட்டுப்பாலில் இருக்கும் ஆக்சிடோசின் கலாவதியின் உடலுக்குள் சென்றதால் அவரின் கருப்பை விரிவடைந்து முழுமை பெறாத கருவானது, இரத்தத்துடன் வெளியேறி விட்டது. இதனால், அதிக இரத்த இழப்பு ஏற்பட்டு இறப்பும் நேரலாம். எனவே, கர்ப்ப காலங்களில் பால் சாப்பிடுவது குறித்து கூடுதல் கவனம் தேவை.

மேலும் சில காரணங்கள்:
-சத்துக்குறைவு
-கதிர்வீச்சு
-பூச்சிக் கொல்லிகள் (கொசு விரட்டிகள் உள்ளிட்டவை)
-சில மருந்துகள்
-தைராய்டு குறைபாடு ஆகியவை. எனவே கர்ப்ப காலங்களில் சத்தான உணவுகள் உட்கொள்ளுவதுடன் கவனமாக இருக்க வேண்டும்.


--------------------------------------------------------------------------------------------------------------------
இதே தகவல் விக்சனரியிலும் (கருக்கலைவு எனும் தலைப்பில்) பங்களிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
பக்கத்தைக் காண மற்றும் மேலும் தகவல்களை சேர்க்க தொடரவும்:
--------------------------------------------------------------------------------------------------------------------
3 comments:

தாய்பாலுக்கு இணையான பசும்பாலும் விஷமானால்...தாய்பால்..? கவனிங்கதாய்மார்களே.

அனைவரும் குறிப்பாக பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம், பகிர்ந்தமைக்கு நன்றி

நல்ல விழிப்புணர்வு தகவல் நன்றி!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More