இணை(ன்றை)ய உலகம் - 7

வாடிக்கையாளர்களின் ஆழ் மனதுடன் உங்கள் விளம்பரங்கள்  பேசுகிறதா..?

    ஒவ்வொரு மனிதனும் இரண்டு வகையான முடிவுகளையே எப்பொழுதும் தயாராக வைத்திருப்பான். ஒன்று ஆழ்மனதின் அகநோக்கு பார்வை, மற்றொன்று வெளிப்படையாக முடிவெடுக்கும் புறநோக்கு பார்வை. இவை இரண்டையும் தொடர்பு படுத்தி அமையும் விளம்பரங்களே பெரும் வெற்றி பெறுகின்றன.

   இணையம் மற்றும் இணைய வழி விளம்பரங்கள்  கொஞ்சம் கூட சிரமமே இல்லாமல் தன்னை நம்பிய நிறுவனங்களுக்கு இந்த இரு மனதையும் தொடர்புபடுத்தி தனது பணியை செம்மனே செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில் இணைய தொழில் நுட்பமும் அதன் பயன்களும் பற்றியும் முழுமையான விளிப்புணர்வு வந்துவிட்டது.   

புற மனதானது தனது முடிவுகளை உடனடியாக எடுத்துவிடும், ஆழ் மனது மிகவும் யோசித்து முட்டிவெடுக்கும் என்பது மிகவும் தவறான கருத்தாகும். புற  மனதையும், ஆழ் மனதையும் பெரும்பாலானோர் தவறாக கணித்துவிடுகின்றனர்.

   உண்மையில் ஆழ் மனது ஒரு கைத்தடி கூட வைத்திருக்காத பார்வையற்றவர் போலவே செயல்பட்டுகின்றது. அதை தட்டி எழுப்புவது மிகவும் எளிதான காரியம் ஆகும். ஆனால் அதில் நீங்கள் நிபுணத்துவம் அடைந்திருப்பது அவசியம் ஆகும். எளிதாக புரிந்து கொள்ள வேன்டுமா..? 

    இருக்கமாக கண்னை கட்டி ஒர் இருட்டு அறைக்குள் உங்களை  அடைத்து வைத்திருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள். சுற்றும் முற்றும் தேடி பார்ப்பீர்கள். சுவற்றில் கையை தேய்த்து ஏதேனும் பிடி கிடைக்கிறதா என்று ஆராய்வீர்கள், ஒரு சிறிய சப்தத்தை கூட நுணுக்கமாக கவனிப்பீர்கள், அதுவே கூட உங்களை பயத்தையும் உருவாக்கலாம். இப்படி பல மணி நேரமாக  உங்களை அடைத்து வைத்திருப்பார்களேயானால்  ஒரு சிறிய சந்தின் வழியாக ஒரு  சிறிய வெளிச்சம் உங்கள் கண்ணை கூசினாலும் உடனடியாக அதில் வெளியேற துடிப்பீர்கள் தானே..?


இதை தான் ஆழ் மனதும் செய்கிறது. இணைய விளம்பரங்களும் இதை புரிந்து கொன்டு தான் வெற்றி அடைகின்றன.


    ஆழ்மனது எதையும் நம்பாதது போன்ற பிரம்மையை ஏற்படுத்துமே தவிற உணமையில் அது ஏதேனும் வழி கிடைக்காதா என்றே பயத்துடன் தேடிக்கொன்டிருக்கும். கையில்படும் உராய்வை எல்லாம் அது கவனத்துடன் பதிய வைத்துக்கொள்ளும். சமயம் நேரும் பொழுது அது மிக வேகமாக உங்களை முடிவெட்டுப்பதற்காக தூண்டி விடும். 

இந்த கோட்பாட்டை அடிப்படையாக  கொண்டே பெரும்பாலான விளம்பரங்கள் அடிக்கடி  கண்ணில் படும்படி அமைக்கப்படுகிறது. உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தேவை ஏற்படுமாயின் உடனடியாக உங்களை நினைவுக்கு கொண்டு வருவதும் இந்த வகையான  அதிகம் காட்சிப்படுத்தப் படும் வழிகள் தான்.  

       இன்னும் சுலபமாக   சொன்னால் ஒரு பெரிய பல்பொருள் அங்காடியை கவனியுங்கள். நீங்கள் பல மணி நேரமாக அங்காடியின் மளிகை பிரிவில்  உங்களுக்கு தேவையான பொருட்களை தேடி எடுத்தாலும் இறுதியில் பணம் செலுத்தும் இடத்தில் சறிது நேரம் காத்திருக்கும் சமயத்தை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை கருத்தில் கொன்டு தான் பணம் செலுத்தும் இடங்களில் சாக்லெட், சுவிங்கம், இன்ன பிற சில பொறிப்பான்களை அழகாக அருகேயே வைத்திருப்பார்கள். இந்த முட்டாள் ஆழ்மனது இதே கொறிப்பான்களை பல முறை மளிகை பிரிவில் பார்த்து பின் தவிர்த்திருக்கும். ஆனால் இங்கே அவசர அவசரமாக முடிவெடுத்து உங்கள் கையில் அதை எடுக்க வைத்துவிடும். 

இதே போல தான் உங்கள் விளம்பரங்கள் தொலைக்கட்சி, அச்சு ஊடகங்களில் எவ்வாறு காட்டப்படுகிறதோ அதை விட குறைந்த செலவுகளில் வாடிக்கையாளர்களின் ஆழ்மனதில் இணைய விளம்பரங்கள் சென்று வேகமாக முடிவெடுக்க வைத்து விடும். 

ஆழ்மனதிற்கும் புறமனதிற்கும்  வேறுபாடு என்ன..?
இணைய விளம்பரங்கள் இவற்றை தொடர்பு படுத்துவது எவ்வாறு..??

தொடர்ந்து பயணிப்போம்.

2 comments:

வாங்க,அகத்தை ஆராய்வோம்.கூடதான் நாங்களும் இருக்கோம்.

நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே....! ஒரு பொருளை சந்த்தைபடுத்துவதில் விளம்பரம்தான் முதன்மையானது.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More