திரையுலகில் பெருகி வரும் வேலை வாய்ப்பு     ஒரு காலத்தில் திரைத்துறையில் பணிபுரிகிறவர்கள் என்றால் மக்கள் அவர்களை வேறு விதமாக பார்த்தார்கள். அவர்கள் செய்யும் பணியை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள்.
     ஆனால் இன்றைய நிலை அப்படியே தலை கீழாகிவிட்டது. நான் சொல்வது பெரியத்திரை மட்டுமின்றி சின்னத்திரையையும் சேர்த்துத் தான். தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளின் படையெடுப்பால் அந்த தொழிலில் வேலை வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. நடிகர்கள், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள்,படத்தொகுப்பாளர்கள் என அவர்களுக்கான தேவைகள் அதிகரித்த வண்ணமிருக்கிறது.
     இன்று பொறியியல் படிப்பை பின்னுக்குத் தள்ளிவிட்டு அனைவரும் தேர்ந்தெடுக்கும் படிப்பாக “ விஷூவல் கம்யூனிகேஷன்” “ துறை இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அது மட்டுமின்றி அதை சார்ந்த துறையான 3டி,2டி இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்
     வருங்காலத்தில் ஒவ்வொருவர் கையிலும் தங்களுடைய திரைப்படம் என்று காட்ட ஒரு டி.வி.டி இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அந்த அளவு திரைத்துறை எல்லோருக்கும் எளிமையாகிக் கொண்டு வருகிறது.
     அப்படிப்பட்டத் துறையில் தொழில் நுட்ப ரீதியாகவும், கற்பனையை பயன்படுத்தி அறிவு ரீதியாகவும் சாதிப்பது எப்படி என்று எல்லோருமே போராடிக் கொண்டு தானிருக்கிறார்கள். குறிப்பாக இன்று இளைஞர்கள் பலரை இயக்குனராகும் கனவு மிகவும் ஆட்டிப் படைக்கிறது. உண்மையில் எல்லோராலும் திரைத்துறையில் சாதித்துவிட முடியுமா...?
அந்தத் துறையைப் பற்றிய மேன்மையையும், கீழ்மையையும் அலசுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.
எனவே இது ஒரு தனிப்பட்ட கட்டுரையாக மட்டுமல்லாமல் ஒரு விவாதமாக எடுத்துக் கொண்டு நீங்களும் உங்களின் கருத்துக்களை எழுதலாம்.
                                                               
                                                            ....தொடரும்     
    

2 comments:

கற்றதை வெளிப்படுத்தும் திறனைவெளிகொணறும் ஓரேதுறை.சரக்குஉள்ளவங்க சமாளிக்கலாம் வாங்க.தம்பிராசா எனக்கு ஒருகதையகுடுங்க,தயாரிக்ககளமும்,இயக்கஈஸ்வர்ரும்இருக்காங்க,நடிக்கதான் நாங்க இருக்கமுல்ல.

நண்பரே நிச்சயம் கதைகள் நிறையவே இருக்கிறது. அதற்கான திரைக்கதை அமைந்துவிட்டால் தயாரிப்பும், இயக்கமும் நடிப்பும் எளிமையாகிவிடும்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More