Latest News

உடல் ஆரோக்கியத்திற்கு பால் அருந்த வேண்டாம்:     இயற்கை உணவைப் பற்றிய ஒரு சமூக விழிப்புணர்வு இன்று எங்கும் பரவி வருகிறது. இதில் முக்கியமான ஒன்றாக முதலில் பாலை அருந்த வேண்டாம் என்பதைத் தான் எல்லா இயற்கை மருத்துவ விஞ்ஞானிகளும் முன் வைக்கிறார்கள்.

     எது எப்படியோ 3 மாதங்களுக்கு  முன் நான் படப்பிடிப்புக்காக ராஜபாளையம் சென்றிருந்தேன். அது வரை தேனீர் அருந்தி வந்த நான் அங்கு தேனீர் அருந்துவதையே நிறுத்திவிட்டேன். காரணம் கட்டுப்பாடெல்லாம் ஒன்றுமில்லை. அந்தப் படப்பிடிப்பில் தேனீர் சரியில்லை. அதன் காரணமாகத் தான் நான் குடிக்காமல் இருந்தேன். அது எந்தளவு என் உடல் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்று உங்களுக்கு நான் சொல்ல வேண்டும். எனது ஆஜானுபாகுவான 89 கிலோ எடை, ஒரு மாதத்தில் 82ஆக குறைந்தது. அது வரை நான் எவ்வளவு முயன்றும் இந்த மாற்றம் நிகழவில்லை. இந்த அற்புதம் நிகழ்ந்ததற்கு காரணம் நான் தேனீர் குடிக்காததினால், பால்,சீனி என்று நிறைய தேவையற்றப் பொருட்களை விலக்கியிருக்கிறேன்.
     உண்மையில் பால் எந்தளவு எனக்கு சுமையாக இருந்தது என்று அப்பொழுது தான் தெரிந்துக் கொண்டேன்.
     எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் ” “நலம் சில விவாதங்கள் “ என்ற நூலை சமீபத்தில் வாசிக்கும் பொழுது தான் என்னுடைய அனுபவம் அந்த நூலிலும் பதிவாகியிருந்ததை உணர முடிந்தது. அவர் அதில் சுவாமி தன்மயா கூறிய விஷயங்கள் என்று சிலவற்றை நம் முன் வைக்கிறார்.
     உடல் ஆரோக்கியத்திற்கு மூன்று வெள்ளைப்பிசாசுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அவை சீனி, உப்பு, பால், நவீன மனிதனின் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் அதுவே... என்று குறிப்பிடுகிறார்.
     வளர்ந்தபின்னும் பால் உண்ணும் ஒரே உயிரினம் மனிதனே.பசுவின் பால் 8 கிலோ எடையுடன் பிறக்கும் ஒரு கன்றுக்குட்டியை 50 கிலோவாக மாற்றத் தேவையான சத்துக்களும், வளர்ச்சித்தூண்டிகளும் அடங்கியது. அதை நாம் குடிக்கும் பொழுது செயற்கையான முறையில் வளர்ச்சித்தூண்டிகள் வருகின்றன. அதிகப்பட்ச சத்துக்கள் உடலில் தேங்கி உருவாகிறது. புரதம் மற்றும் சுண்ணாம்புச் சத்தை பெரியவர்கள் கொட்டைகள் பருப்புகள் மூலமே பெற முடியும். சிறு குழந்தைகளுக்கு நீர்க்க வைத்த பால் கொடுக்கலாம். பெரியவர்கள் முழுமையாகவே தவிர்த்துவிட வேண்டும்.
     பாலும் சீனியும் வயிற்றுக்குள் சென்றதுமே புளிக்கின்றன.அமிலமாக ஆகின்றன. அவை நம் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிப்பவை.
     பாலை நிறுத்தினாலே உடல் எடை குறைவதைக் காணலாம்.உடற் சோர்வை அளிக்கும் பிற உணவுக் கட்டுபாடுகளைத் தளர்த்திக் கொள்ளலாம். பாலைக் குறைத்தால் பெரும்பாலான வயிற்றுச் சிக்கல்கள் இல்லாமலாவதை எவருமே உணரலாம். இதை நான் கடைப்பிடித்து பயன்பெற்ற பின் ஜெயமோகன் அவர்களின் நலம் சில விவாதங்கள் “ படிதததும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் இப்பொழுதெல்லாம் தேனீருக்குப் பதில் தனியாத் தூளில் சுக்கு லேசாக கலந்து பனங்கற்கண்டைக் கலந்து குடிக்கிறேன். உடல் எடைக் குறைந்து சோர்வின்றி இருக்கிறது. நீங்களும் கடைப்பிடிக்கலாம்.

Follow by Email

Recent Post