தன்னம்பிக்கை விதை                   தன்னம்பிக்கை விதை
             தன்னம்பிக்கை விதையா? தன்னம்பிக்கையை நம்முள் விதைக்க வேண்டுமா?
ஆமாம் ,

 நிச்சயம் விதைக்க வேண்டும். தினம் தினம் நம்மால் முடியும் , நம்மால் முடியும் என்ற விதையை விதைக்க வேண்டும்.
   விதைத்தல் என்ன ஆகும் என்கிறீர்களா? ஒரு விதையை விதைத்தால் என்ன ஆகும்? ..அது சிறிது சிறுதாய் வளர்ந்து , ஒரு நாள் மிக பிரமாண்டமான மரமாய் எழுந்து நிற்கும். உங்கள் தன்னம்பிக்கையும் அப்படித்தான். அதனால் உங்களுக்கு மட்டும் அல்ல, உங்களை அண்டி இருப்பவர்களுக்கும், வாழ்பவர்களுக்கும் நிழலை ( பயனை) தரும்.இதற்கு உதாரணமாக , நாம் வென்ற ஒலிம்பிக் பதக்க பட்டியலை பார்த்தாலே அறியலாம்.
1 . 1996 - 1 வெண்கலம்
2 . 2000 - 1 வெண்கலம்
3 . 2004 - 1 வெள்ளி
இன்று நாம்
 . 2012 - 4 வெண்கலம் , 2 வெள்ளி .
இது போதுமா? என்ற கேள்வியை விட , நாம் வளர்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது ஆறுதலான விசயம்தானே?
    இன்று நம் வீரர்களிடையே உண்டாகி இருக்கும் பதக்க கனவு வளர்ந்து இருப்பதை நாம் அறிய முடிகிறது.இதனால் அவர்களுக்கு மட்டும் அல்ல, நாம் நாட்டிற்கும் பெருமை அல்லவா? 


      இது விளையாட்டிற்கு மட்டும் அல்ல, தொழிலுக்கும் நிச்சயம் தேவை.
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இஸ்திரி தேய்க்கும் தொழிலை செய்கிறார். அவர் ஒரு பழக்கத்தை மேற்கொண்டார் . என்னவெனில், தன்னால் நிச்சியம் ஓர் பெரிய சலவையகத்திற்கு உரிமையாளராய் ஆக முடியும் என்ற தன்னம்பிக்கையை விதைத்தார். அவர் அதற்கு 3 வழிகளில் திட்டமிட்டார். அவர் சிறிது சிறிதாய் பிரித்து வைத்தார்
3 மாதங்களுக்குள் எதை அடைய வேண்டும்? 6 மாதங்களுக்குள் எதை அடைய வேண்டும்? 1 வருடத்திற்குள் எதை அடைய வேண்டும்?  என தீர்மானித்து , அதை மெதுவாக செயல்படுத்த தொடங்கினார். முதலில் இன்னொரு இஸ்திரி பெட்டி வாங்கினார். தன் மனைவியை உடன் வைத்து வேலை செய்தார்.
பின் 1 சிறுவனை வேலைக்கு அமர்த்தி, துணி வாங்கி வர, பின் கொண்டு சென்று தர வைத்தார். இதனால் வாடிக்கையாளர் அதிகமாகியது. அவர் தொழிலும் வளர்ந்து , இன்று அவர் பெரிய சலவை தொழிலகம் நடத்தி வருகிறார்.
   எனவே நாமும் தன்னம்பிக்கையுடன் வளர்ந்து பிறர்க்கு உதவுவோம் !

நன்றி,
அன்புடன்,
சி. சீனிவாசன்.

4 comments:

முதன் முறையாக முதல் பதிவை தொடங்கி இருக்கும் நண்பர் சிட்ராஜ் சீனிவாசனுக்கு வாழ்த்துக்கள்.

தொடர்ந்து சிறந்த பதிவுகளை பதியுங்கள்

நன்றி!!

வாங்க,அண்ணாச்சி கதிரு இருக்காக,தம்பி ஈஷ்வரு இருக்காக, எழுதகளமும் கொடுத்திருக்காங்க? வாங்கராசா...சீனு.

என்ன கவியாரே! என்ன சொல்லாம விட்டுடீரே! பரவாயில்ல, கருத்துர மூலம் அறிமுகமாயிடறேன்.
நல்வரவு திரு சீனிவாசன்! நீங்க சொன்ன அதே தன்னம்பிக்கையுடன் எழுதுங்க.
முதல் பதிவே சிறப்பாக இருக்கிறது. தொடருங்கள்!

நானும் இருக்கேன்ல :)நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More