சென்னையில் நடக்கவிருக்கும் தமிழ் பதிவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தரும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்...

சிறு துளிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஆழிப்பேரலையாக சென்னை நோக்கி விஜயம் செய்யும் நமது இனிய தமிழ் பதிவர்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி வருக!!! வருக!!! என வரவேற்கிறோம்..........சிந்தனையில் சிறகடித்து... பதிவுலகில் உலா வரும் எங்கள் இனிய நெஞ்சங்களே!!!

பதிவின் மூலமும்... பின்னூட்டங்களின் மூலமும் நட்பாய் கைகோர்த்த நம் நெஞ்சங்கள், நாளை நேரில் கண்டு ஆனந்த கூத்தாட இதோ மாநாடு கூடிவிட்டது!!!
தட்டிக்கொடுப்பவன்...எட்டிப்பிடிப்பான் அவன் இலக்கை.... இது சத்தியமான வார்த்தை..

நம்மை நாமே தட்டிக்கொடுப்பதை விட...

ஒருஒருக்கொருவர் தட்டிக்கொடுத்தால் ஊக்கமுடன் மேலும் பல சாதனைகளை படைப்பவர் நம் தமிழ் பதிவர்கள்!!!

வாருங்கள் அன்பு நெஞ்சகளே.....உங்களுக்காக காத்திருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்....

தினமும் வேகமாக நகரும் கடிகாரம் இன்று ஏனோ ஓட மறுக்கிறது....

பொழுதும் நகர மறுக்கிறது.....

என்ன விந்தையம்மா!!!!!!

காத்திருப்பதிலேயும் இவ்வளவு சுகமான வலிகள் இருக்கிறதா என்ன?

நாளை விடியும் சூரியனுக்காக காத்திருக்கும் நெஞ்சங்கள் எத்தனை...எத்தனையோ????

வாருங்கள் அன்பர்களே!!!!

நாளைய விடியல் நமக்கானதாக இருக்கட்டும்...

உதிக்கும் சூரியன் நமக்காக உதிக்கட்டும்......

நமக்கு இனி வளர்பிறை தான்....

நம் எழுத்துக்களின் மூலமாக இப்புவியில் புதிய ஒளி பிறக்கட்டும்...மனதில் மண்டிகிடக்கும் அறியாமை என்னும் இருள் ஒலியட்டும்...

அன்பு வணங்கங்களுடன்..........

2 comments:

எல்லாருக்கும் வாழ்த்துகள்....!

மிக்க நன்றி TK !
உங்கள் அனைவரையும் சென்னைக்கும்
விழாவிற்கும் நான் அழைப்பதில்
பெரு மகிழ்வு கொள்கிறேன் !

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More