தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission- TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும். 1929ல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பெற்ற ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பெற்றது. அப்பொழுது இதன் பெயர் The Madras Service Commission. மாநில மறு சீரமைப்புக்குப் பின் 1957- ல் இது மதராசு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Madras Public Service Commission) என்று பெயர் மாற்றம் செய்யப்பெற்று, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என மாற்றம் பெற்ற பிறகு இதுவும் தானாகவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்என்று மாறிவிட்டது.

(மேற்குறிப்பிட்டுள்ள தகவல் விக்கிபீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது மேலும் தகவல் அறிய http://ta.wikipedia.org/s/7l7)

தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்விற்கான விண்ணப்பங்களை இணையத்தின் மூலம் பதிவு செய்ய வழிவகை செய்துள்ளது. அதற்கான இணைய முகவரி http://www.tnpsc.gov.in/

ஒரு முறை பதிவு  

இதில் பதிவு செய்யக்கூடிய விண்ணங்கங்களின் தகவல்களை ஐந்து வருடங்கள் வரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பாதுகாத்து வைத்திருக்கும் ஒவ்வொரு முறை விண்ணப்பிக்கும் போதும் தகவல்களை மீண்டும் தட்டச்சு செய்யும் அவசியம் இல்லை. இம்முறையில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கென்று தனிப்பட்ட பயனர்பெயரும் இரகசிய எண்ணும் தரப்படுகிறது. பயனர்பெயராக விண்ணப்பத்தின் எண்ணே தரப்படுகிறது. 

தற்போது பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் ஒரு முறை பதிவும் சேர்த்தே செய்யப்படுகிறது. 

விண்ணப்பிப்பதற்கு தேவையான தகவல்கள். 

விண்ணப்பதாரின் பெயர், பாலினம், விண்ணப்பதாரரின் தந்தையார்பெயர் தலையெழுத்தோடு, தாயார்பெயர், திருமணமானவரா என்ற தகவல், திருமணமானவர் என்றால் கணவர் அல்லது மனைவியின் பெயர். விண்ணப்பதாரர் பிறந்த இடம், பிறமாநிலங்கள் என்றொரு கலம் உள்ளது பெரும்பாலும் அதனை யாரும் நிரப்புவதிலலை. தாய்மொழி, இதரமொழிகள், தேசிய இனம், மதம், வகுப்பு, சாதிஉட்பிரிவின் பெயர், மாற்றுதிறனாளியா, முன்னாள் இராணுவத்தினரா, என்பதான சுயவிவரகுறிப்பு கேட்கப்படுகிறது. 

கல்வி தகுதி 

கல்விதகுதியில், பள்ளி இறுதி வகுப்பு, மேனிலைத்தேர்வு, இளங்கலை பட்டப்படிப்பு, முதுநிலை ஆய்வியல், முனைவர், பட்டயபடிப்பு, முதுநிலை பட்டயபடிப்பு, மற்றவை என்பதான தகவல்களும் கேட்கப்படுகிறது. 

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி மற்றும் நிரந்தமுகவரியை குறிப்பிட வேண்டும் 

இதனோடு தங்களின் கடவுச்சீட்டளவு புகைப்படமும், கையெழுத்தும் முக்கியமாகும் இவை நகலெடுத்து கணிணியில் ஏற்றப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. 

மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண்ணையும் குறிப்பிடுதல் வேண்டும். கைபேசி எண் எப்போதும் மாற்றப்படாததாக இருத்தல் அவசியம். அவ்வாறு இல்லாதபட்சத்தில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தங்களுக்கு அனுப்பும் செய்திகள் நீங்கள் அறியாவண்ணம் தவறப்படும்

கட்டணம் செலுத்தும் முறை 

விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேர்தல் ஆணையம் மூன்று வழிகளை தருகிறது, அஞ்சலகம் மூலம் மற்றும் இந்தியன் வங்கி, பற்று அட்டையின் மூலமும் கட்டணம் செலுத்தலாம்.

இந்த தகவல்கள் தங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றே நம்புகிறேன். தங்களுக்கு உபயோகமான தகவலுடன் அடுத்த கட்டுரையில் மீண்டும் சந்திப்போம்.
1 comments:

நல்லபயனுள்ளதகவல்.இதுபோன்ற தகவல்களை தொடர்ந்துவெளியிடவும்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More