சுவாசமே வாசமே !

 ' பளிச் பளிச் ' புன்னகைக்கு  :

                                   
 

 
சிறு சிறு விஷயங்களில் இருந்து தான் ஆரோக்கியத்தின் 
அழகு கூடுகிறது.
யாராக இருந்தாலும் பற்கள் பளீரிட சிரிக்கும் போதும் , 
முத்துப் பற்கள் லேசாகத் தெரிய
பேசும் போது நாம் அவர்கள் பால் கவரப் படுவது இயற்கையே.
 
 
எந்த உறுப்பாக  இருப்பினும் அதை நன்கு
பேணும் முறைகள் நமக்கு முதலில் தெரிய வேண்டும். 
முதலில் கொஞ்சம் நம் மூலிகையைப் பயன்படுத்துவோமே. 
 
பற்களின் மஞ்சள் தன்மை நீக்கும் விதமாக 
பல அரிய  திரிபலா , புதினா போன்ற மூலிகைகள் கலந்த பொடி கொண்டு  பற்களைத் தேய்த்தால் பற்கள் வெள்ளைத் தந்தம் போல் பளிச்சிடுவதுடன்சுவாசமும் மணக்கும். 
 
இந்த மூலிகை பற்பொடி நாட்டுமருந்து கடைகளில்
வெறும் 15 ரூபாய்க்கே கிடைக்கிறது.

இருவேளை பல் துலக்கும்
பழக்கம் உள்ளவர்கள் ஒருவேளை இதை பயன்படுத்தலாம்.
அல்லது வாரத்தில் ஒரு விடுமுறை நாளிலாவது பற்பசைக் கொண்டுதுலக்கியவுடன் இறுதியாக இதை பிரஷ் கொண்டே துலக்கலாம்.
 
வெறும் புதினா & துளசி இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு
துலக்கி பாருங்கள். பல் கறை நீங்கும். 

இன்னொரு  சுருக்கு  வழியும்  உள்ளது .  
ஆனால் அதை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது.
எனாமல் அரித்து விடும். 
 
அது என்னவென்றால் 
ஆப்பசோடாவுடன் சில துளிகள் ஹைட்ரோஜென்   பெரோக்சிட் சொலுஷன்  சேர்த்து ஜஸ்ட் ஒரு நிமிடம் வரை பல் தேய்க்கவும்.  பிறகு வாய் கொப்புளித்து விடவும். 
இது மருந்தகங்களில் கிடைக்கிறது.  
இதனால் வெற்றிலைக் கறை  மஞ்சள் கறை எல்லாம் நீங்கி பற்கள் பளிச்சிடும்.
ஆனால் இதை அவசர காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தவும். அடிக்கடி அல்ல. 
 
தயவுசெய்து எலுமிச்சைசாறு  , உப்பு போன்றவற்றை 
பயன்படுத்த வேண்டாம்.
அவை மிகுந்த வீரியம்  என்பதால் பல் எனாமல் பாதிக்கும். எனாமல் போனால் அதை சரி செய்ய முடியாது. 


பற்களை 3 நிமிடம் வரை வட்டவடிவமாக & மேலும் கீழும் 
தேய்க்க வேண்டும்.
பல் தேய்த்த  பிறகு கண்டிப்பாக ஈறுகளை ஆட்காட்டி விரலால்
தேய்த்துக்  கொடுக்க மறக்காதீர்கள். 

 
நாவின் வெண்படலம்
வழிப்பதற்கு உலோகவழிப்பான் உபயோகிக்க வேண்டாம். பிளாஸ்டிக்கால் ஆனதே சிறந்தது.
ஏனெனில் நாவிலுள்ள சுவை மொட்டுக்கள் மிகவும் நுட்பமானவை.
உலோக வழிப்பான் நாளடைவில் அதை செயல் இழக்கச் செய்யும்.
 
எப்போதும் 'soft ' வகை பிருஷ் உபயோகப்படுத்துங்கள். அதை கண்டிப்பாக  3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி விடுங்கள். 
 
மௌத்வாஷ் பதில் எலுமிச்சை சாறு
கலந்த தண்ணீரினால் வாய் கொப்புளியுங்கள்.

பூண்டு , நான் வெஜ் சாப்பிட்ட வாசனை மாற , வாசனையூட்டப்பட்ட

சோம்பு , அல்லது ஏலம் சுவையுங்கள்.
 
மிக முக்கியமாக வாய் துர்நாற்றம் வீசாமல் இருக்க
மலச்சிக்கல் , ஜீரணக்கோளாறு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
 
பொறுமை உள்ளவர்கள் ' ப்லாஸ்'  செய்யலாம் .
தற்போது இவை அனைத்தும் உள்ளடக்கிய
 ஒரு பிரபல நிறுவனத்தின் பற்பசை ஒன்று சந்தைக்கு வந்துள்ளது.
விலை சற்று கூடுதல் எனினும் அது தரும் புத்துணர்வும் ,
 மலர்ச்சியும் ஆஹா .. போட வைக்கிறது.
 
எதை சாப்பிட்டாலும் உடனே வாயைத் தண்ணீரால்
 கொப்புளித்து சுத்தம் செய்ய மறக்காதீர்கள்.
 
இறுதியாக அடிக்கடி பற்களை மருத்துவரிடம் சென்று
பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
 
இப்போது சிரித்து சிரித்து டாலடிக்கப்  பேசுங்கள் உங்கள் இதயம் கவர்ந்தவரிடம் .....தன்னம்பிக்கையுடன் ! 
உங்கள் சுவாசம் வாசம் வீசுமே !

4 comments:

பயனுள்ள கருத்து.....

வாய்விட்டு சிரித்தல் நோய் விட்டு போகும்....

அப்படி சிரிக்க பல் சுத்தமாகவும் வெள்ளை நிறத்துடனும் இருக்க வேண்டும்....

இந்த பதிவை படித்த அனைவரும் நிச்சயம் வாய் விட்டு சிரிக்கலாம், அவர்கள் அழகு பல மடங்கு கூட...

அழகாய் சிரிக்க, ''ஸ்ரவாணி மருத்துவம்...''

''வளர்க'' அழகு மிகு மருத்துவர் ஸ்ரவாணியின் சேவை...

மேலும் இளமை மாறாமல் நீங்கள் இன்னும் அழகாக தெரிவதன் ரகசியம் சொல்லுங்களேன்....

நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்...

நிச்சயமாக....

நம்புங்கப்பா.....

ம்ம்ஹீம் ...... அதை உங்களிடம் மட்டும் பதிவர் சந்திப்பில்
நேரில் மட்டும் தான் வெளியிடுவேன் !
பதிவின் மேலே உள்ள படத்தில் உள்ளது சத்தியமா
நான் இல்லைங்க .....TK !
ஆஹா , கேப்புல நம்மள வயசான ஆன்ட்டி லிஸ்ட் ல
சேர்த்து விட்ட குறும்பிற்கு மிக்க நன்றி !

அடடா! பளிச் பற்கள் பற்றி எழுதலாம்னு நேனேச்சுகிட்டே கொஞ்ச நேரம் தூங்கிட்டேன்..... அதுக்குள்ள ஸ்ரவாணி எழுதிட்டாங்களே! நிறைய தகவல்கள்... நல்ல பதிவு! வாழ்க! வளர்க!

ஹலோ! தொழிற்களம்! அழகு குறிப்பு எழுத நான் இருக்கேன்ல ... மறந்துடீங்களே!

பளிச் என்ற பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More