உயிர்காக்க,உதவ உங்களால் முடியும் !

நம் நாட்டில் ஒரு கோடிக்கு மேலானோர் ஒவ்வொரு ஆண்டும் உயிர்கொல்லி நோய்களுக்கு ஆளாகி அவதியுறுகின்றனர்.இவர்களில் வசதியுளோர் பெரியமருத்துவமனைக்கு சென்று உயிர் பிழைக்கின்றனர்,வசதியற்றோர் மருத்துவசிகிச்சைக்கு வழியின்றி இறக்கின்றனர். இவர்களுக்கு உதவிசெய்யும் பொருட்டு தினமலர் நாளிதழில் ஒரு சிலரின் வேண்டுகோளை  அவ்வப்போது பிரசுரித்து வாசகர்கள் மற்றும் மனிதாபிமானம் மிக்கவர்கள் மூலம் நிதிஉதவி கிடைக்க வழிவகை செய்து வருகின்றது.தமிழ் பத்திரிகையில் மற்ற பத்திரிக்கையிலிருந்து வேறுபட்டு தினமலர் செய்து வரும் இந்த அறப்பணியால் பலர் உயிர் பிழைத்துள்ளனர்.
இவர்களுக்கு உங்களாலும் உதவி செய்ய முடியும் பல ஆயிரக்கணக்கில் அவர்கள் கோரும் தொகையை உங்கள் ஒருவரால் தர இயலாது ஆனால் உங்களைபோன்ற ஆயிரமாயிரம் பேர் சேர்ந்து ஒரு ரூபாய் அல்லது அதன் மடங்கில் தந்தால் அவர்கள் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.உங்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு பணியை செய்திக்கதிர் பப்ளிகேஷன்னின் சார்பு நிறுவனமான ஒரு ரூபாய் அறக்கட்டளை மேற்கொள்கிறது.
இதன் மூலம் கிடைக்கும் தொகை யாருக்கு அனுப்பப்பட்டது என்ற விபரம் உங்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
 உங்கள் சேமிப்பிலிருந்து,பாக்கெட் மணியிலிந்து,உங்கள் மற்றும் உங்கள் பெற்றோர் நண்பர் பிறந்தநாள்,திருமண நாள் நினைவாகவும் ஒரு ரூபாய் அளியுங்கள்! உயிர்காத்து உதவுங்கள்.( வெளியூர் நண்பர்கள் ஒரு ரூபாய் மதிப்பில் குறைந்தபட்சம் ரூ.100 வீதம் பண அஞ்சலில் அனுப்பளாம் )
ஒரு ரூபாய் அறக்கட்டளை மக்களிடமிருந்து மக்களுக்கு ஓம் சக்தி வணிக வளாகம்,167,கீழவீதி,சிதம்பரம்-608001.நன்றி நெய்வாசல் நெடுஞ்செழியன்-செய்திக்கதிர்.9443425862. 

2 comments:

தினமலர் செய்யும் பணியும் அதை வெளியிட்ட நீங்களும் பல்லாண்டு வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
தன்னலமற்ற இந்தப் பணி மேலும் மேலும் தொடரட்டும்.

அருமையான செய்தி.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
உங்கள் நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More