வாழ நினைத்தால் வாழலாம்!

இது தான் என்னுடைய இறுதிப் பதிவு, எனக்கு வாழவே பிடிக்கல, இந்த உலகமே என்ன எதிரியாப் பாக்குது, எனக்கு வாழ வழியே இல்ல! நான் அதனால தீக்குளிக்கப் போறேன்!!!

"அட என்னடா இது, தீக்குளிக்கப் போறாளா இந்தப் பொண்ணு??"னு நெனைக்கறீங்களா? அட சும்மா சொன்னேன்! ஆனா இத சொல்றப்போ எனக்கு அவ்வளவு வருத்தம் தெரியுமா? :(  :(

அரசாங்கம் செய்ற ஒரு விஷயம் பிடிக்கலையா? இல்ல, உங்க தலைவருக்கு எதிரா ஏதும் நடக்குதா? அட, தீக்குளிச்சு எதிர்ப்பு தெரிவியுங்கப்பா!!! :( :(

ஏன்? ஏன் இப்படி தீக்குளிக்கணும்? நம்முடைய எதிர்ப்பைத் தெரிவிக்க எத்தனையோ வழிகள் இருக்கு, அதுக்காக ஏன் நம்மள நாமே வருத்திக்கணும்?

புகைப்படம்: google images
உதாரணத்துக்கு,

  • பரிட்சையில் தோல்வி,
  • காதல் தோல்வி
  • வியாபாரத்தில நட்டம்
  • கடன் தொல்லை
  • குடும்பப் பிரச்சனை
  • வேளையில் பிரச்சனை! 
உடனே தற்கொலை! தற்கொலை! :( இப்படி நிறைய சொல்லலாம். ஏன்? இருக்கும், இப்படி தோல்வியை சந்திக்கும் பொழுதெல்லாம் வேதனையாக இருக்கத்தான் செய்யும். அதற்காக தற்கொலை செய்து கொண்டா? நம்மைச் சார்ந்து இருக்கும் எத்தனை பேர் வேதனை அடைவாங்க? இதையெல்லாம் நாம நினைப்பதே இல்ல!

அட, நான் இப்படி வாய் கிழியப் பேசறேன்! நானே தற்கொலை செய்ய முயற்சி செஞ்சிருக்கேன்!? ஆமா, உண்மையா தான். இது எங்க அம்மாவுக்கே இப்போ கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரியும், நீங்களும் யார்கிட்டயும் சொல்லிடாதிங்க!??

ரகசியம் சரியா? இதோ என் தற்கொலை கதை!

அப்போ, எனக்கு ஒரு பத்து வயசு இருக்கும், சின்னப் பொண்ணு நான்  :) (இப்போ எனக்கு 19! :) வளந்துட்டேன்) அப்போ எல்லாம் நிறைய சேட்டை செய்வேன், ( இப்போ நான் ரொம்பச் சமத்து!) அம்மா கிட்ட நான் அடி வாங்காத நாளே இருக்க முடியாது. ஒரு நாள் ஏதோ சேட்டை செஞ்சேன்னு எங்கம்மா நல்ல அடி! அப்படி அடி வாங்குனேன்! :( 

ஒடன ஒரு யோசனை தோனுச்சு, "என்ன உலகமடா இது, நம்ம செத்துப் போய்டலாம்னு" நெறைய தொலைக்காட்சில தற்கொலை பண்றதெல்லாம் பாத்திருக்கேன் நான், அதனால, முடிவு செஞ்சேன், நம்ம ஏதாவது மாத்திர நெறைய சாப்டா செத்துப் போய்டுவோம்னு! நான் மாலை நேரத்துல டியூஷன்(tution) போவேன் அப்போ. சரி, டியூஷன் போகறதுக்கு முன்னாடி மாத்திர நெறைய சாப்டுட்டு போயிடலாம்னு முடிவு செஞ்சேன். சாமி எல்லாம் கும்டேன்! எதுக்குன்னு கேக்கறிங்களா? "சாமி எனக்கு சாகும்போது வலிக்கக் குடாதுனு " வேண்டிக்கிட்டேன்! :D

மாத்திரைய சாப்டுட்டு போயிட்டேன் டியூஷனுக்கு. ஒரு மணி நேரம் ஆச்சு, தல சுத்தும்னு பாத்தேன் சுத்தல, சரி இன்னும் கொஞ்ச நேரம் ஆகும் போலன்னு நெனச்சேன்! ரெண்டு மணி நேரம் ஆச்சு! அப்பவும் ஒன்னுமே ஆகல! வீட்டுக்கே வந்துட்டேன், அப்பவும் எனக்கு ஒன்னுமே ஆகல! ரொம்ப சுறு சுறுப்பா இருந்தேன் வழக்கத்துக்கு மாறா!

அன்னிக்கு இரவே எங்க அம்மா வந்து, "ரொம்ப அடிச்சிட்டனா? வலிக்குதா இன்னும்" னு சமாதானம் பேசிட்டாங்க! அப்போ நெனச்சேன், "அட நல்ல வேள நம்ம சாகலன்னு"

ஆனா? ஏன் சாகல நான்? :) :) :) ஏதோ மாத்திர தான சாப்டேன், நான் சின்னப் பிள்ளைல அப்போ, வெவரம் தெரியாம சத்து மாத்தரைய சாப்டிருக்கேன்! :) :) :)

நல்ல வேளை, ஏதும் ஆகல எனக்கு.

இந்தக் கதைய, என்னோட கதைய ஏன் சொல்றேன்னா. "தற்கொலை" இது ரொம்ப சிறு பிள்ளைத் தனமான முடிவு, என்னைப் பொறுத்த வர. இப்போ அன்னிக்கு நான் மட்டும், உண்மையாவே ஏதோ மாத்திர சாப்டு உயிர் போய் இருந்தா????  அம்மா.. என்னால நெனச்சும் பாக்க முடியல! இப்போ அந்தப் பழைய நாட்கள நெனச்சுப் பாத்தா சிரிப்பா வருது எனக்கே! :) :) சரி சரி சிரிக்காதிங்க நீங்க!

இப்போ பெருசா பாரமா இருக்கற ஒரு விஷயம் பிற்காலத்துல ஒரு எளிமையான விஷயமா இருக்கும்! சரி தானே?!

இப்பவும் எனக்கு எப்போவாவது ரொம்ப வருத்தமா இருந்தா,  சின்ன வயசுல நான் செஞ்ச "தற்கொலை" விளையாட்ட  நெனச்சுப்பேன். சோகம் மறைஞ்சு போயிடும்னு ஒரு நம்பிக்க வரும்!

நமக்கு ஏற்படும் துன்பத்துக்காக,

  • உணவு உண்ணாம இருப்பது.
  • நம்மை நாமே காயப்படுத்திக் கொள்வது
  • "தற்கொலை" செய்து கொள்வது!
இதெல்லாம் செய்வது நல்லதில்ல! இதெல்லாம் சின்னப் பொண்ணு நானு, எனக்கே சிறுபிள்ளைத் தனமா தெரியுது. உங்களுக்கும் தானே?

இனி உங்களுக்கு ஏதாவது சோகம்னா என்னோட "தற்கொலை" கதைய ஞாபகம் வச்சுக்கோங்க, :) :) சோகம் சும்மா வேகமா பறந்துடும் உங்கள விட்டு! :) 

வாழ நினைத்தால் வாழலாம்,
வழியா இல்லை உலகிலே??!
---------------------------------

( இந்தப் பதிவை எழுதக் காரணம்,

சிவகாசியில், ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்காக, ஒருவர் தீக்குளித்துவிட்டார்! :( :( 

அத்தனை வருத்தம் எனக்கு இதைக் கேட்டதும். பாவம், அந்த மனிதரின் குடும்பம் எத்தனை வேதனைப்படும்? :( 

ஏதோ, எழுதத் தோன்றியது, எழுதிவிட்டேன், ஏதேனும் தவறான கருத்துக்கள் இருந்தால் மன்னிக்கவும்)13 comments:

//தவறான கருத்திருந்தால் மன்னிக்கவும்//.... ...?

உண்மையை உரக்க சொல்லுங்கள்...
தயங்காதீர்கள்..

உங்களுடன் நாம் இருக்கிறோம்...

அன்புக் கண்மணி!
விஷயம் நேர்மறையாக இருந்தாலும், எதிர்மறையான தலைப்பு வருத்தப்பட வைத்தது.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்: உங்களிடம் உங்கள் நண்பர்கள் கேட்கிறார்கள்: 'என்ன பதிவுகள் எழுதியிருக்கிறாய்?' என்று.

உங்கள் பதில் 'லட்சியம் வேண்டாம், லட்சியம் வேண்டாம்', 'தீக்குளிக்கப் போகிறேன்' என்று சொன்னால் எப்படி இருக்கும்? நீங்கள் நல்ல விஷயத்தையே சொல்லி இருந்தாலும், முதல் எண்ணம் எப்படி இருக்கும்?

First impression is the best impression இல்லையா?

மனதுக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது இதுபோன்ற தலைப்புகளைப் பார்த்தால். உங்கள் அம்மாவிடம் கேளுங்கள். அவரும் என் கருத்தைத் தான் சொல்லுவார்.

ஓர் தாய் என்ற நிலையில் எழுதுகிறேன். புரிந்து கொள்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்!

அன்புடன்,
ரஞ்ஜனி

அக்கா,உங்கள் கருத்து என்னையும் சிந்திக்கவைக்கிறது.ஆமாம்கண்மனி யோசிப்போம்...

அன்பு அம்மா,

ஆமாம், சரியாகச் சொன்னீர்கள்! தலைப்பை மாற்றி விடுகிறேன்,

சரியாக என்னை வழிப் படுத்த அம்மா உள்ளீர்கள் என்று நினைக்கையில் ஆனந்தமாக உள்ளது. இனி இவ்வாறு எதிர்மறையாக தலைப்பிடுவதைத் தவிர்க்கப் பார்க்கிறேன்.

நன்றி மா...

ம்ம்.. ஆமாம் மதுரகவி அண்ணா, யோசித்தேன். ரஞ்சனி அம்மா சொல்வது சரி தான்.

நன்றி கண்மணி! புரிந்து கொண்டதற்கு நன்றி மதுரகவி அவர்களே!

வாழ்த்துக்கள் கண்மனி.பணி தொடரட்டும்
வாங்க பயணிப்போம்.சகபயணி.

மதுரகவி அண்ணா, நீங்க எப்பவும் என் பேர "கண்மனி" னு தப்பு தப்பா போட்றீங்க :( "கண்மணி" சரியாப் போடுங்க இனி?

நன்றி Seeni அண்ணா.

இந்த தாய்தமிழனின் தமிழ்எழுத்துகளை பிழைதிருத்த,எனக்கு அவசியம் உதவுங்கம்மா.சரியா கண்மணி.நன்றி.

நிஜமோ...கற்பனையோ...கதை நன்றாக இருந்தது.

நன்றி. அந்தக் கதை உண்மை தான் :)

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More