கொஞ்சம் சமுதாயத்தை பற்றியும் பேசுவோமே!!!!

அன்பர்களுக்கு வணக்கம், எனக்கு எப்போதுமே ஒரு பலத்த சந்தேகம் உண்டு, நாம்தான் விவசாயி என்று வைத்து கொள்வோம், நாம் பயிர் உற்பத்தி செய்கிறோம், நம்மிடமிருந்துதான் மற்றவர்கள் அதை வாங்குகிறார்கள், விலைவாசி உயர்ந்தால் நமக்குதானே லாபம்? நம்மிடம் தானே எல்லா பணமும் வந்து சேர வேண்டும், ஆனால் நடப்பது என்ன?

 

விவாசாயி உற்பத்தி செய்யும் விவசாய பொருட்களை கொள்முதல் செய்யும் அரசு சந்தை விலையில் எவ்வளவு சதவீதம் குறைத்து வாங்குகிறது என்பது தெரியுமா? சரி அதை விடுங்கள், அடிக்கடி பண வீக்கம் என்பது பற்றி பேசுகிறார்களே அப்படி என்றால் என்ன?

வளரும் நாட்டிற்கு விலைவாசி உயர்வு அவசியம் என்கிறார்களே, எதனால்? அப்படி உயரும் விலைவாசியால் யாருக்கு லாபம்? இது பற்றி நமக்கு என்ன கவலை? நாம் வேலைக்கு போகிறோம், சம்பாதிக்கிறோம், என்ன விலை விற்றாலும் பொருட்களை வாங்கி கொள்கிறோம். கேட்டால் கூசாமல் நாமளும் படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம்.

தவறு நம்முடையது இல்லை, கல்வி முறையே தவறு, வேலை பார்ப்பதற்காக மட்டும் மதிப்பெண் வாங்கவும், மதிப்பெண் வாங்குவதற்கென்று மட்டும் படிக்கும் வரை நாம் கண்கள் கட்டப்பட்ட குதிரையாகத்தான் இருப்போம். 

நான் உங்களை கட்சி ஆரம்பித்து நாட்டை காப்பாற்ற சொல்லவில்லை, ஏதேனும் போராட்டமென்றால் கொடி பிடித்து தலைமை தாங்க சொல்லவில்லை, சினிமா, கிரிக்கெட், பக்கத்து வீட்டு பிரச்சனை, உடன் வேலை பார்ப்பவர் பற்றிய கிசுகிசுக்களை பேச நேரம் இருக்கும் நாம் வாழும் நாட்டை பற்றியும், அதன் பொருளாதாரம் பற்றியும், அழிந்து கொண்டிருக்கும் கலாச்சாரங்களை பற்றியும், உலக வெப்பமயமாதல் பற்றியும் பேச வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

வெறுமனே பேசினால் பிரச்சனை தீர்ந்து விடுமா என்று நீங்கள் கேட்கலாம். முதலில் நம்மை சுற்றி என்ன பிரச்சனை இருக்கிறது என்பது குறித்து அனைவரும் கலந்து பேசினால் தான் தெரியும், அதை முழுக்க தெரிந்து கொண்டு பிறகு தீர்வு பற்றி விவாதிப்போம், நான் என் கண்களுக்கு தெரியும் செய்திகளை பேசி மக்களுக்கு பரப்ப விரும்புகிறேன். மூன்று வேலை சாப்பிடுபவன் மட்டுமே கவிதை, கலை, இலக்கியத்தை ரசிப்பான்.

அதே போல் தன்னை சுற்றி மக்கள் அவதிப்படும் வேளையில் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது என்று கூறவில்லை, அதை பற்றி பேசக்கூட செய்யாமல் கண்டு கொள்ளாமல் இருக்க என்னால் இயலவில்லை, சரி இனி அடிக்கடி அதை பற்றி பேசுவோம். இதோ ஒரு செய்தி.

Photo: பணவீக்கம்... யாருக்கு லாபம்?

 'நாட்டில் பணவீக்கம் உயர்ந்து இருப்பது மிகழ்ச்சி அளிக்கிறது. இது விவசாயிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் காய்கறி, பருப்பு உள்ளிட்ட
விவசாயிகள் அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியும் ’என்று மத்திய உருக்குத்துறை அமைச்சர் பேனி பிரசாத் வர்மா கூறியிருக்கிறார். இதற்கு பல
தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்புகின்றன. அமைச்சர் சொல்லியிருப்பது போல, பணவீக்கத்தால், விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும்
என்பதில் உண்மையில்லை.

 ஒவ்வொரு விவசாயியும் தன்னுடைய, விளைப் பொருட்களுக்கு நியாமான விலை கிடைத்தால் போதும் என்றுதான் நினைப்பான். யானை விலைக்கு, குதிரை விலைக்கு பொருளை விற்க வேண்டும் என்று நினைப்பவன், நிச்சயம் விவசாயம் செய்யமாட்டான். விவசாய விளைப்பொருட்களின் விலை ஏறினாலும் ,இறங்கினாலும் இடைத்தரகர்கள் மட்டுமே லாபம் பார்த்து வருகிறார்கள்.
எப்போதும் விவசாயிகளுக்கு குறைவான விலைதான் கிடைத்து வருகிறது. இந்த விஷயம் அமைச்சருக்கு தெரியவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

'நாட்டில் பணவீக்கம் உயர்ந்து இருப்பது மிகழ்ச்சி அளிக்கிறது. இது விவசாயிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் காய்கறி, பருப்பு உள்ளிட்ட விவசாயிகள் அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியும் ’என்று மத்திய உருக்குத்துறைஅமைச்சர் பேனி பிரசாத் வர்மா கூறியிருக்கிறார். இதற்கு பலதரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்புகின்றன. அமைச்சர் சொல்லியிருப்பது போல, பணவீக்கத்தால், விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும்என்பதில் உண்மையில்லை.

ஒவ்வொரு விவசாயியும் தன்னுடைய, விளைப் பொருட்களுக்கு நியாமான விலை கிடைத்தால் போதும் என்றுதான் நினைப்பான். யானை விலைக்கு, குதிரை விலைக்கு பொருளை விற்க வேண்டும் என்று நினைப்பவன், நிச்சயம் விவசாயம் செய்யமாட்டான். விவசாய விளைப்பொருட்களின் விலை ஏறினாலும் ,இறங்கினாலும் இடைத்தரகர்கள் மட்டுமே லாபம் பார்த்து வருகிறார்கள்.

எப்போதும் விவசாயிகளுக்கு குறைவான விலைதான் கிடைத்து வருகிறது. இந்த விஷயம் அமைச்சருக்கு தெரியவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.
இதை பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்

1 comments:

உழைப்பவன் கண்ணீரினால் தானோ இயற்கை உறம் சக்தி மிகுந்தது என்ற கூற்று பிறந்தது..?

மாற்றம் காண வேண்டும்.. இணைந்து உருவாக்குவோம்..

நன்றி நண்பா கதிர்...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More