உலக அழிவு - எளிய பார்வை

அன்பர்களுக்கு வணக்கம், அது என்னவோ தெரியவில்லை, இத்தளத்தில் நான் எழுத வேண்டும் என் ஆரம்பிக்கும் பொழுதே எனக்கு ஏதாவது ஒரு சமுதாய பிரச்சனை மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. இருக்கட்டும், என் மனம் விரும்புவதை நான் எழுதுகிறேன்.

நேற்று "அட்ராசக்க" தளத்தில் கிரானைட் திருட்டு குறித்து  ஒரு பதிவு படித்தேன், எவ்வளவு முக்கியமான ஒரு பதிவு. நம் மாநிலத்தில் மட்டும் ஏன் ஒரு விசயத்தினை மட்டும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்? சாதாரணமாக உலகில் பருவ நிலை மாறுவதற்கு பல இலட்சம் வருடங்கள் ஆகும்.


ஆனால் மனிதன் தற்போது செய்யும் காரியங்களால் 1000 வருடங்களுக்கு ஒரு முறை பருவ மாற்றத்துடன் உலக அழிதலும் நடக்க போகிறது, அனை வரும் நினைப்பது உலகம் அழிந்தால் அழியட்டுமே, எல்லாருடன் சேர்ந்து நாமளும் அழியலாம் என்று.

ஒரு விசயம் தெரிந்து கொள்ளுங்கள், உலக அழிதல் என்றால் மொத்தமாக நாம் இருக்கும் பூமி வெடித்து விடாது, உலக வெப்ப நிலை அதிகமாகி பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரித்து, சுனாமி போன்ற பேரலைகள் வந்து நகரங்களை விழுங்கும், இன்னொரு பக்கம் எரிமலைகள் வெடித்து அதனால் நில நடுக்கம் உண்டாகி கடலோர பகுதி இல்லாத ஊர்களிலும் சேதாரத்தினை உண்டாக்கும்.

சொல்லப்போனால் மனிதனும் அவன் சேர்த்து வைத்த செல்வங்களும் கண்டு பிடித்த தொழில் நுட்பங்களும் மட்டுமே அழியும், மற்றப்படி கொஞ்சம் கொஞ்சமாக கண்டங்கள் பிரிந்து முதலில் இருந்து அமிபாவில் ஆரம்பித்து ஒவ்வொரு உயிரினமாக தோன்ற ஆரம்பிக்கும். 

இயற்கையை எதிர்த்தோ, பகைத்துக்கொண்டோ மனிதனால் எதுவும் செய்ய முடியாது, முதலில் இது அனைத்து தரப்பு மக்களுக்கும் புரிய வேண்டும், எதற்காக மணல் அள்ளக்கூடாது? பாறைகளை திருட கூடாது என்பதனை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

இதற்கு உலக அழிவு சம்பந்தப்பட்டவைகளை மக்களுக்கு புரிய வைக்கும் வகையில் அரசாங்கம் கல்வி திட்டத்தில் இதனை பாடமாக வைக்க வேண்டும். பாலியல் கல்வி அவசியம் என்று போராடுபவர்களின் கண்ணுக்கு ஏன் இந்த பிரச்சனை தெரியவில்லை? வாழ்ந்தால் தானே எப்படி வாழ வேண்டும் என்பது குறித்த கேள்வி எழும்.

நாம் வாழும் இந்த பூமிக்கு இன்னும் 10 ஆண்டுகளே மீதம் இருக்கிறது என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதை விட்டு விட்டு நாம் எங்கே போய் வாழ முடியும்?

ஏதோ என் மனதிற்கு தோன்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன். ஏதேனும் பிழையிருந்தால் தெரிவியுங்கள். உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னுட்டமிடுங்கள்.

மனிதன் தன்னை பெரும் அறிவாளி என்று நினைத்து கொண்டிருப்பது குறித்து என் தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டேன்,  நேரமிருந்தால் அதனையும் படியுங்கள்.

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?


2 comments:

அனைவரும் நிச்சயம் படிக்கவேண்டிய பதிவு. படியுங்கள் நிச்சயம் பகிர்ந்து கொள்ளுங்கள்.....!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More