இனி ஒரு விதி செய்வோம்.......

"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை
எனில் ஜகத்தினை அழித்திடுவோம்
என்றான் பாரதி "

ஆம்..! நாம் இப்படிதான் உணவளிக்கின்றோம்.      

வளர வேண்டிய பயிர், இதோ வழித்துக்கொண்டு
இருக்கிறது ,எச்சிலையை .........
வாடிய  பயிரை கண்டபோதெலாம் வாடிய
வள்ளலார் வருவார் என்று ஒதுங்காமல்
நாமும் வள்ளலாரக மாற முயற்சிப்போம்....

வல்லரசாக ஆக ஆவது முக்கியமே ....
வள்ளல் அரசாகவும் மாற்றுவோம்.....

இனி ஒரு விதி செய்வோம்.......          

2 comments:

நிச்சயம் ஒரு விதி செய்வோம் தோழரே...

அவரவர் தேவைகளுக்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்...

மற்றவரை திரும்பிக்கூட பார்ப்பதில்லை...

பள்ளி செல்ல வேண்டிய வயதில்... அம்மா கையால் உணவு உண்ண வேண்டிய இளம் தளிர்....???!!!

தன் வயிற்று பசிக்காக பொறுக்கி தின்னும் அவலம்...

தவறு செய்தவர் ஒருவர்... தண்டனை இந்த இளம் தளிருக்கு...

இது போல் இன்னும் எத்தனையோ...

நிச்சயம் ஒரு விதி செய்வோம்...

வாழ்த்துக்கள்....

நன்றி உங்கள் கருத்துரைக்கு, அவலம் அழியும் ஒருநாள் என்று நினைத்து காலம் தள்ளாமல் களம் இறங்குதல் வேண்டும்,நிச்சயம் செய்வோம், நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More